From jayabarathi Wed Apr 14 08:36:49 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1642 invoked by uid 7770); 14 Apr 1999 15:35:29 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.egroups.com with SMTP; 14 Apr 1999 15:35:29 -0000
Received: from umlugghc ([202.188.69.210]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990414153526.JFJQ8@umlugghc>; Wed, 14 Apr 1999 23:35:26 +0800
Message-Id: <3.0.3.32.19990414230219.00864400@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 14 Apr 1999 23:02:19 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: vassan
In-Reply-To: <3.0.6.32.19990413081914.007a0b00@...>
References: <00dc01be8567$10be8680$6165b2d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Saandilyan's Novels#1
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 265

At 08:19 AM 4/13/99 -0600, you wrote:
>At 12:35 AM 4/13/99 -0400, N. Swaminathan wrote:
>>According to a reliable source, Saandilyan was on a monthly retainer
>> when he wrote his novels. He had to stretch them as long as possible to
>assure a guaranteed
>>income. As Dr.JB pointed out, he is known for his fascinating
>>descriptions of female anatomy. It is generally difficult to write
>
>
>>N. Swaminathan
>>Los Angeles
>
>
>ஆம்,முதல் தடவை சாண்டில்யன் நூல் ஒன்றைபடித்துவிட்டு
>'பூர்ணசந்திரன் சுடர் விட்டுபிராகாசித்தது'..'ஜலக்கீரிடை'
>போன்ற சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் தவித்து,பின் உறவினர்
>ஒருவரிடம் அர்த்தம் கேட்டபோது முகச்சுளிப்பு பதிலாக கிடைத்தது
>நினைவுக்கு வருகிறது.
>
>என்னுடைய தாழ்மையான கருத்தில்[imho]கோ.வி.மணிசேகரனுக்கு
>சாண்டில்யன் பரவாயில்லை.
>
>எனக்கு கோ.வி நாவல்களை படித்த போது ரொம்ப கப்ஸாவா தோன்றும்..[lot of
>hot air] something is always missing,lack of fluidity
>
>பலவருடங்களுக்கு முன் படித்ததினால் அந்நூல்களை பற்றிய ஏமாற்றம்
>ஒன்று மட்டுமே நினைவில் மிஞ்சியுள்ளது.
>
>சாண்டில்யனின் அதீத வர்ணிப்புகளோகதையின் விறுவிறுப்பின் கழுத்தை
>நெறிக்கும் !

வரலாற்று நாவல்களில் historicity என்பது ஒருமுக்கிய
அம்சம். பெரும்பான்மையான் நாவல்களில்அதை அறவே கவனிப்
பதில்லை.
ஏதாவது முத்தரையர் மகளை எவனாவதுபல்லவராயன்
காதலிக்க, வேகமான குதிரைகள்காந்தளூர்சாலையில் பறந்து
செல்ல, மறைவிடத்திருந்து குறுவாள் பாய, யாராவது சிவனடியார்
அரசியல்சூழ்ச்சியெல்லாம் செய்து கதாநாயகனுக்கு உதவ,
இதன் நடுவே அரசுக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு வாரிசு,
காதல் முக்கோணம், சிங்களத்துப்பைங்கிளி/ மஞ்சளழகி/ யவனராணி
என்று வெளிநாட்டுப்பேரழகிகள், நயவஞ்சகம் மிகுந்த வில்லன்,
அவனையும் பார்ப்பதற்கு நல்லவனாக்கிவிடும் வில்லாதிவில்லன்....இத்யாதி.
இப்படித்தான் formula வரலாற்று நாவல்கள்அமையும்.
நல்ல வரலாற்றுத்தன்மையை உள்ளடக்கியநாவல்கள்
நான் படித்தவற்றில், மோகினி எழுதிய"அடிமையின் காதல்";
இது குமுதத்தில் வந்தது என்று நினைக்கிறேன்.
இன்னொன்று சுஜாதா எழுதியது; "ரத்தம் ஒரே நிறம்".
ஆனந்தரங்கம் பிள்ளை டயரியை அடிப்படையாக வைத்து
பிரபஞ்சன் ஒரு நாவல் எழுதியுள்ளார்; லட்இச பரிசு பெற்றது அது.
டயரிக்குறிப்புகளைத் தொகுத்து அப்படியொரு புதினம் எழுதுவது
என்பது சற்று புதுமையான சங்கதிதான்.
எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாகயிராது.
>
>கவிஞர் கண்ணதாசன் 'சேரமான் காதலி'மற்றும் தினமணிக்கதிரில்
>சுமேரு(!) அல்லது லெமூரியா காண்டம் என்பதை பிண்னணியாக வைத்து ஒரு
>தொடர்கதை எழுதினார்.இவற்றை யாரெனும் படித்துள்ளீர்களா...
>அவற்றின் தரம் என்ன..

படித்ததில்லை; கேள்விப்பட்டிருக்கிறேன்.
>
>அப்புறம் உறையூர் அகிலாண்டம் (அகிலன்)அவர்களின் ஆக்கங்கள் பற்றி
>என்ன நினைக்கிறீர்கள்...>
>'வேங்கையின் மைந்தன்' அவருடைய ஆக்கம்.

வேங்கையின் மைந்தன் சுமார்தான். ஆனால் அவருடைய
"கயல்விழி" நன்றாகயிருக்கும். அதில் ஒரு குறைபாடு என்னவெனில்
அறுபதாண்டு காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இரண்டுமூன்று
ஆஅண்டுகளில் நடந்துவிடுவதாக சித்தரித்திருப்பார்.

ஆனால் அவர் எழுத்துக்களிலேயே நான் மிகவும் விரும்புவது
"வெற்றியின் ரகசியம்". சுங்கைப் பட்டாணியில் முத்தப்பச்செட்டியார்
என்று ஒருவர் இருக்கிறார். திருமணங்களுக்குப் போகும்போது அவர்
இந்த நூலைத்தான் மணமக்களுக்குப் பரிசாகக் கொடுப்பார்.
நானேகூட இதுவரை முப்பதுக்கும் மேற்பட்டபிரதிகளை
அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.
அவருடைய ஆய்வுகள், அனுபவம், மற்றவர்களின் வாழ்வியல்
ஆகியவற்றை வைத்துத்தான் அந்நூலைஅமைத்திருக்கிறார்.
அபிராமி மாலையின் முதற்பாடலாகிய, "கலையாத கல்வியும்,
குறையாத செல்வமும் கபடு வராத நட்பும்"என்னும் பாடலில் வரும்
பதினாறு பேறுகள்/தன்மைகளை அஸ்திவாரமாக அமைத்து ஆரம்பிக்கிறார்.
கி.வா.ஜகன்னாதன், முத்துசாமி, மு.வ. , ஈஸ்வர ஐயர், ஜீ.டீ.நாயிடு
என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் இவர்களின் வாழ்க்கைக்
குறிப்புகளையும் அவர்கள் இவருக்குக் கூறிய அறிவுரைகளையும்
வழிகாட்டலையும் விளப்பியிருப்பார்.
நெப்போலியன் ஹில்லின் Law of Success, Think andGrow Rich,
நார்மன் வின்ஸெண்ட் பீலின் Powers of PositiveThinking ஆகியவற்றின்
வரிசையில் இடம் பெற வேண்டியநூல்.

அன்புள்ள

ஜெயபாரதி


பார்த்திபன் கனவு அகிலன்
>எழுதியதா அல்லது கல்கி அவர்களுடையதா...
>
>
>நன்றி.
>
>வாசன்
==============================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com