From jayabarathi Wed Apr 14 08:36:55 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1736 invoked by uid 7770); 14 Apr 1999 15:35:36 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.egroups.com with SMTP; 14 Apr 1999 15:35:36 -0000
Received: from umlugghc ([202.188.69.210]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990414153534.JFJR8@umlugghc>; Wed, 14 Apr 1999 23:35:34 +0800
Message-Id: <3.0.3.32.19990414233953.0084d100@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 14 Apr 1999 23:39:53 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "N. Swaminathan"
In-Reply-To: <008b01be85a5$ca827d40$b109b3d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Saandilyan's Novels#2
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 266

At 07:55 AM 4/13/99 -0400, you wrote:
>நண்பர் வாசன் கேட்டார்:
>
>பார்த்திபன் கனவு அகிலன்
>>எழுதியதா அல்லது கல்கி அவர்களுடையதா...
>
>
>பார்த்திபன் கனவு கல்கியின் ஆக்கம்.திரைப்படமாகவும் வந்தது. கதையில் இருந்த மர்மம்
>திரையில் உடைந்து போய்விட்டது.

பல கதைகள் திரைப்படமாக்கப்படும்போது கெட்டுவிடுகின்றன.
நன்றாக படமாக்கியிருந்தாலும்கூட, கதையைப் படிக்கும்போது
இகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் ஊன்றி, ஆழ்ந்து படித்து,
கவனிக்க முடிகிறது. மெதுவாக பத்துப்பக்கத்தில் படிக்கக்கூடிய
சங்கதி, அரை நிமிடத்தில் படத்தில்ஓடிவிடும். ஒன்றுக்கு மேற்பட்ட
பாத்திரங்கள் தோன்றும்போது அத்தனைபேரையும் நாம் கவனிக்க
முடியாது. ஆனால் கதையில் முடியும்.
மோகமுள்ளைப் பார்த்தீர்களா! எப்படிப்போய்விட்டது!
காவல்தெய்வம் பரவாயில்லை. ஆனால்யாருக்காக அழுதான், ஒரு
நடிகை நாடகம் பார்க்கிறாள், எத்தனைபார்வை எத்தனை கோணம்,
உன்னைப்போல் ஒருவன் போன்றவை ஜெயகாந்தனுக்குக்
கரம் கொடுக்கவில்லை.
பார்த்திபன் கனவில் எஸ்.வி.ரங்காராவின் ஆகிருதி, கருட
பார்வை, அங்க சேஷ்டை ஆகியவை அவரைக் காட்டித்தானே
கொடுக்கும்? ஆகவே மர்மம் உடைந்து விடுகிறது.
அந்தப் படத்தில் அப்பரைப்போய் குந்தவி பார்த்து, சோழ
நாட்டில் உள்ள விசேஷமான வாலிபனைப்பற்றி விசாரிப்பாள்.
ஆனால் அவரோ திருஞான சம்பந்தரைநினைத்துக்கொண்டு
பதில் சொல்வார். அப்போது வைஜயந்திமாலா, சரோஜாதேவியின்
முகங்களில் தோன்றும் கடுகடுப்பு; "சிலருக்கு வயதானாலேயே
என்ன பேசுகிறோம் என்று .....etc..."முணுமுணுப்பு.

>
>கற்பனைப்பாத்திரமாயினும் கண்முன் நிற்பவள் சிவகாமி !
>சிவகாமியின் சபதத்தில் முடிவில்சிவகாமி தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லி "சேர்ந்தனள்
தலைவன் தாளே" என்று முடியும். இந்தப்பாடல் எந்த இலக்கியத்திலிருந்து வந்தது ?

அதே எப்பிசோடில் "வடிவேறும் திரிசூலம் தோன்றும், தோன்றும்"
என்னும் திருப்பூவணத்துத் திருத்தாண்டகமும், "முன்னம் அவனுடைய
நாமம் கேட்டாள்", என்ற திருவாரூர்த்திருத்தாண்டகமும் வருகின்றன.
இவை ஓர் இசைத்தட்டில் இடம் பெற்றன.
இவற்றை இருபதாண்டுகளுக்கு முன்னர் ஓர்இசைநாடாவில்
பதிவு செய்திருந்தேன்.

அன்புடன்

ஜெயபாரதி
>
>அகிலனின் பாவை விளக்கு நல்ல நாவல்.திரைப்படமாகவும் வந்தது. அகிலன் பலபரிசுகள்
>பெற்று மிகவும் கெளரவிக்கப்பட்டவர். ""தமிழ் எழுத்தாளர்களில் வருமானவரிகட்டுகிறவன்
>நான் (மற்றவர்கள் என்னைப்போல் சம்பாதிக்கவில்லை என்ற பொருளில்)" என்றுசொல்லி
>மகிழ்ந்தவர்.
>
>இன்றைக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒருdaytime job தேவையாக இருப்பது வருந்த
>வேண்டிய விஷயம்.
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
==========================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com