From jayabarathi Thu Apr 15 02:04:59 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20343 invoked by uid 7770); 15 Apr 1999 09:04:56 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 15 Apr 1999 09:04:56 -0000
Received: from umlugghc ([202.188.69.187]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990415090453.TXJT553@umlugghc> for ; Thu, 15 Apr 1999 17:04:53 +0800
Message-Id: <3.0.3.32.19990415171205.00931280@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 15 Apr 1999 17:12:05 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
In-Reply-To: <3.0.6.32.19990415120857.007a9af0@...>
References: <3.0.3.32.19990414230219.00864400@...> <3.0.6.32.19990413081914.007a0b00@...> <00dc01be8567$10be8680$6165b2d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Saandilyan's Novels#1
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 271

At 12:08 PM 4/15/99 +0800, you wrote:
>At 11:02 PM 4/14/99 +0800, jayabarathi wrote:
>>
>> வரலாற்று நாவல்களில் historicity என்பது ஒரு முக்கிய
>>அம்சம். பெரும்பான்மையான் நாவல்களில் அதை அறவே கவனிப்
>>பதில்லை.
>>
>
>கல்கி இதிலே எப்படி என்று சுருக்கமாகச் சொல்லுங்களேன்!
>
>ரெ.கா.


"நீங்களே சொல்லிவிடுங்களேன் டாக்டர்" என்று நம்
முத்தைரையன் சார் மாதிரி சொல்லிவிடலாம்தான்.
ஏதோ ஆழந்தெரியாமல் காலைவிட்டுவிட்டேனோ என்று
"பதக் பதக்" என்கிறது.
இருங்கள். ஏதாவது பூபி ட்ராப் தென்படுகிறதா என்று
சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, பக்கவாட்டுப்பாய்ச்சல், பின்வாங்கு
வதற்கெல்லாம் வசதிகள் செய்து கொண்டுவிடுகிறேன்.

கல்கியின் பார்த்திபன் கனவில் ஹிஸ்டாரிஸிட்டி மிகக்
குறைவு. சிவகாமியின் சபதம் பரவாயில்லை.
பொன்னியின் செல்வனில் கற்பனை நிறையக் கலந்து
விளங்குகிறது.
ஆனால் ஒன்று. கல்கி அந்தக் கால சூழ்நிலையை அப்படியே
படம் பிடித்ததுபோல கண்முன் நிறுத்திவிடுவதாலும், அந்த உத்தியும்
ஹிஸ்டாரிஸிட்டி தன்மையில் சேர்ந்ததுதான் என்பதாலும் என்னுடைய
வோட்டு பொ.செ.க்கே.

(அனுப்புமுன் சரிபார்த்துவிடுகிறேன்.எங்காவது சறுக்கி
யிருக்கிறேனா.........? சமீபகாலமாகபெரிய பெரிய யானைகளெல்லாம்
நான்கு கால்களும் சறுக்கி விழுகின்றனவாம்! அது சரி சார்! நான்கு
கால்களும் சறுக்கிவிழுந்த பின்னர், அந்தமாதிரி sprawled out நிலைமையில்,
துதிக்கையும் முன்னால் நீட்டிக்கொண்டு,பரிதாபமாக "பக் பக்" என்று
முழித்துக்கொண்டல்லவா யானை கிடந்திருக்கும்? தானாக எழுந்திருக்க
முடியாதே? ஏதாவது crane வைத்து அல்லவாதூக்கியிருக்கவேண்டும்?)

அன்புடன்

ஜெயபாரதி

===============================================


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com