From jayabarathi Thu Apr 15 03:23:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14636 invoked by uid 7770); 15 Apr 1999 10:23:28 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 15 Apr 1999 10:23:28 -0000
Received: from umlugghc ([202.188.69.187]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990415102312.UBUA553@umlugghc> for ; Thu, 15 Apr 1999 18:23:12 +0800
Message-Id: <3.0.3.32.19990415183022.0093ad00@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 15 Apr 1999 18:30:22 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
In-Reply-To: <3.0.6.32.19990415180318.00809250@...>
References: <3.0.3.32.19990415171205.00931280@...> <3.0.6.32.19990415120857.007a9af0@...> <3.0.3.32.19990414230219.00864400@...> <3.0.6.32.19990413081914.007a0b00@...> <00dc01be8567$10be8680$6165b2d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Kalki's sense of historicity.
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 274

At 06:03 PM 4/15/99 +0800, you wrote:
>
>ஜேபி,
>
>அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உண்மையிலேயே தெரிந்து கொள்ளவே கேட்டேன்.
>கல்கி என் அபிமான எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களில் கருத்துப் பிழைகள்இருக்காதென்பது என் எண்ணம்.
>அதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி. கற்பனைகள் இருப்பது இயல்புதானே!
>
>கல்கி "எம் தந்தையர் செய்த விந்தைகள்"என்ற நூலில் தம் நூல்களுக்கு எடுத்துக்கொண்ட
>ஆராய்ச்சி முயற்சிகள் பற்றி எழுதியிருப்பதும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
>
>ரெ.கா.

அன்புள்ள டாக்டர்,

"கல்கி" ஓர் இணையற்ற எழுத்தாளர்.வரலாற்றுக்கதைகளை
எழுதுவதில் அவர் ஒரு மரபையே தோற்றுவித்தவர். அந்த மாதிரி இன்னும்
வேறு யாருமே எழுதவில்லை. தத்ரூபம், இயல்பான வசனம், கதையின்
சம்பவங்கள், (பொன்னியின் செல்வனின்கடைசி பாகத்தில்தான்
ஒருமாதிரியாகிவிட்டது), பாத்திரப்படைப்பு; அவருக்கு ஏற்றாற்போல்
மணியம் படங்களை வரைந்து விடுவார்.புலிகேசியும் நாகநந்தியும்
உருவில் அப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று இன்றும் நினைக்கத்
தோன்றுகிறதே!
பார்த்திபன் கனவை மீண்டும் மீண்டும் அந்த வசனங்களுக்காகவே
படித்திருக்கிறேன். பொன்னியின் செல்வனை முழுதுமாக முன்பு மூன்று
தடவைகள் படித்துவிட்டேன்.
உங்களின் கடைசிக்கருத்தும் எனக்குஉடன்பாடுதான்.
நான் சொல்லவந்தது, பாத்திரங்களின்பெயர்களைமட்டுமே வரலாற்றுப்
பெயர்களாக வைத்துக்கொண்டு மற்றவற்றையெல்லாம் சரக்கு மசாலா
செய்வதை முதன்மைப் படுத்திச் சொன்னேன்.
இன்னொன்று - முக்கிய சம்பவங்களையும்கற்பனை செய்தோ
மாற்றியோ சொல்லக்கூடாதல்லவா?
இதையெல்லாம் மணிசேகரன் சற்றும் கூசாமல் செய்வார்.
என்ன செய்வது? கலைஞரின் செல்லப்பிள்ளை.
பாத்திரங்கள் பேசிக்கொள்வதாகஉள்ளதெல்லாம் கற்பனையாகத்
தானே எழுதமுடியும். அவற்றிற்கு ஆவணச்சான்றுகள் இருந்தால், சொன்ன
வார்த்தைகளை இக்கால நடையில் சொல்லலாம்.
அருணகிரிநாதர் படத்தில் பார்க்கிறோமல்லவா-
"எனக்கு ஏதாவது சொல்லவேண்டியிருக்கிறதா?"
"ஆம்! சொல்லற. சும்மாயிரு!"
ஏதோ வால்ட்டர் ஸ்காட் நாவலில் பலகாலத்துக்கு முன்
படித்தேன். அதில் ஒரு வசனம், "Had I but diligentlyserved God
with the diligence that I served the king, he would not have forsaken
me in these dire times" என்று தாமஸ் பெக்கெட் சொல்வதாக
வரும்.
அப்போது திடுக்கென்று ஞாபகம் வரும்.தாமஸ் பெக்கெட்
உண்மையிலேயே இப்படி தலைபோகுமுன்னர் சொல்வார்.
இது அப்படியே ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியும் சொற்களும்
அல்லவா? அவ்வாறு கிடைக்கவில்லையெனில் கற்பனைதான்.
உப பாத்திரங்கள் நாவலுக்குத்தேவை; அவை கற்பனையாக இருத்தல்
தவிர்க்கமுடியாதது.
நீங்கள் எப்போது டாக்டர் வரலாற்று நாவல் எழுதப்போகிறீர்கள்?

அன்புடன்

ஜெயபாரதி
>
>
>At 05:12 PM 4/15/99 +0800, jayabarathi wrote:
>>
>> கல்கியின் பார்த்திபன் கனவில்ஹிஸ்டாரிஸிட்டி மிகக்
>>குறைவு. சிவகாமியின் சபதம் பரவாயில்லை.
>> பொன்னியின் செல்வனில் கற்பனை நிறையக் கலந்து
>>விளங்குகிறது.
>> ஆனால் ஒன்று. கல்கி அந்தக் கால சூழ்நிலையை அப்படியே
>>படம் பிடித்ததுபோல கண்முன் நிறுத்திவிடுவதாலும், அந்த உத்தியும்
>>ஹிஸ்டாரிஸிட்டி தன்மையில் சேர்ந்ததுதான் என்பதாலும் என்னுடைய
>>வோட்டு பொ.செ.க்கே.
=============================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com