From Thu Apr 15 04:04:22 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28107 invoked by uid 7770); 15 Apr 1999 11:01:47 -0000
Received: from usm.my (161.142.14.30) by vault.egroups.com with SMTP; 15 Apr 1999 11:01:47 -0000
Received: from kgesu ([161.142.13.141]) by usm.my (8.8.7/8.7) with SMTP id KAA10356; Thu, 15 Apr 1999 10:53:06 GMT
Message-Id: <3.0.6.32.19990415191118.007c79f0@...>
X-Sender: kgesu@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 15 Apr 1999 19:11:18 +0800
To: agathiyar@egroups.com, tamil@...
From: "Re.Ka"
In-Reply-To: <3.0.3.32.19990415171205.00931280@...>
References: <3.0.6.32.19990415120857.007a9af0@...> <3.0.3.32.19990414230219.00864400@...> <3.0.6.32.19990413081914.007a0b00@...> <00dc01be8567$10be8680$6165b2d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Sandilyan speaks.
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 275


சாண்டில்யனின் வரலாற்றுக் குறிப்புக்களின் மீது எழுப்பப்பட்ட சில விஷயங்களுக்கு சாண்டில்யனின் பதிலாக
அவருடைய "சாண்டில்யனின் போராட்டங்கள்" (1987) என்ற நூலிலிருந்து ஒரு பகுதி:

"கன்னி மாடம்" நாவல் பற்றிய விழாவில் "ஆர்வி" இந்த நாவலை "இலக்கியச் செறிவோ பண்புகளோ
பயனோ இல்லாத உருவம்" என்று பேசினராம்.

தலைமை வகித்த கி.வா.ஜ. "ஈழத்தார் நம் மீது படையெடுத்ததாக இந்த நாவலில்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி எந்தப் படையெடுப்பும் நம் மீது நடை பெறவில்லை. தமிழர்கள் ஈழத்தின்
மீது படையெடுத்ததாக வரலாறு உண்டேதவிர "ஈழத்தார் தமிழர் மீது படையெடுத்ததாக வரலாறு இல்லை"
என்று கூறினாராம். சரித்திரக் கதைகளை எழுதுபவர்கள் சரித்திரங்களை சரியாகப் படிக்க வேண்டுமென்றும்
என்றும் கூறினாராம்.

சாண்டில்யன் இப்படி எழுதுகிறார்:

"தமிழ் வரலாற்று அரிச்சுவடியை அறிந்தவர்களுக்குக் கூட ஈழத்தார் தமிழகத்தின்மீது படையெடுத்தது உண்டு
என்பது தெரியும். கி.வா.ஜ. ... நீலகண்டசாஸ்த்திரியார் ... அல்லது சாதாசிவப்பண்டாரத்தார்
... புத்தகங்களைப் படித்திருக்கலாம். ... பழைய தமிழ் மன்னர்களின் சாஸனங்களைப்பற்றிய ஏடுகளையாவது
புரட்டியிருக்கலாம். ... எனது புத்தகத்தின்முன்னுரையையாவது படித்திருக்கலாம். இவற்றில் எதைப்
பார்த்திருந்தாலும் நான் எழுதிய கதையின் சரித்திர அடிப்படை மிகவும் திடமானது என்பதைப் புரிந்து
கொண்டிருக்கலாம்."

இதன் பின் நீண்ட ஆதார மேற்கோள்களும்உள்ளன. ஆகவே சாண்டில்யன் பற்றிய உங்களின் கணிப்பு கொஞ்சம்
அவசரமானது என்று சொல்லலாமா?

இந்த கட்டுரையின் இறுதியில் சாண்டில்யன் இன்னொரு போடு போடுகிறார்:

"தழுவல் கூட அசல் கற்பனை இலக்கியமாகக் கருதப்படும். உதாரணமாக லார்டு விட்டன் எழுதிய "இரகசிய
வழி" என்ற ங்கில நூலைத் தழுவி பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதியுள்ள"மனோன்மணியத்தை" இந்த
வருஷத்துக்கு பி.ஏ. பாடமாக வைத்திருப்பதைப் பார்க்கலாம்."

உண்மையா? "மனோன்மணீயம்" தழுவல் நூல்தானா?

இந்த "அங்க வர்ணனைகள்" பற்றியும் சாண்டில்யன் பதில் சொல்லியிருக்கிறார். இதுகவர்ச்சிக்காகவும்
காசுக்காகவும்தான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார் (although rather defiantly).

ரெ.கா.



------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com