From Thu Apr 15 22:20:17 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 6508 invoked by uid 7770); 16 Apr 1999 03:05:47 -0000
Received: from usm.my (161.142.14.30) by vault.egroups.com with SMTP; 16 Apr 1999 03:05:47 -0000
Received: from loga.usm.my ([161.142.13.219]) by usm.my (8.8.7/8.7) with SMTP id CAA37332; Fri, 16 Apr 1999 02:57:08 GMT
Date: Fri, 16 Apr 1999 02:57:08 GMT
Message-Id: <199904160257.CAA37332@...>
X-Sender: loga@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "Dr.K.Loganathan"
Cc:
Subject: [agathiyar] Meykandar 3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 276

அன்பர்களே,
நண்பர் சுவாமினாதன் அவர்கள் Meykanadar2தொடர்பாக, கீழே வரும் கேள்வியைஎழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் கூறும் வகையில், இந்த சிறிய விளக்கக் கட்டுரை.

>>>>மொழிக்குத்தான் சுட்டுணர்வு தேவையேதவிர சுட்டுணர்வுக்கு மொழி தேவையில்லை என்று இருக்க
வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருமனிதன், குருடு, செவிடு, ஊமையாக இருந்தாலும்
(அதாவது, பார்வை, கேள்வி, பேச்சுஅற்றுப் போயிருந்தாலும் அந்த மனிதனுக்கும்
சுட்டுணர்வு என்று இருக்கலாம் அல்லவா?இது அனேகமாக எல்லோரும் ஒத்துக் கொள்ளக்கூடியது
என்று நம்புகிறேன்.

ஆனால் சுட்டுணர்வு இல்லாத ஒரு பிறவிக்கு மொழி என்று ஒன்று இருக்குமா? இருக்கக் கூடியதா?
இருக்கக் கூடலாம். ஆனால் இருக்குமா?மொழியியல் வல்லுனர்கள் (linguists ands speech
therapists and
neurologists) என்ன கூறுகிறார்கள்?>>>>

இங்கு இரண்டு முக்கியமான கருத்துக்கள் விளக்கம் பெறவேண்டியவைகளாக இருக்கின்றன: சுட்டுணர்வு
என்பதைப்பற்றியும் மொழி என்பதைப்பற்றியும் மெய்கண்டாரின் கருத்துக்கள் தான் என்ன?

முதலில் சுட்டுணர்வைக் காண்போம். முதல்சூத்திரத்தி ன் மூன்றாம் அதிகரணத்தில்இதன் விளக்கம்.

>
மேற்கோள்: இனி சங்காரமே முதல் என்றது

ஏது: சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வு இன்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது சுதந்திரமின்றி நிற்றலான்.

> இறைவனுக்கு உரிய உணர்வு சுட்டணர்வு இன்றி ஆகவே அந்நியம் எழாவகையில் அனைத்தோடும் அந்நியமின்றி
அவையேத் தானாகி நின்று அறிவது. இதற்கு புறம்பாய அனைத்தும் அது சாதாரணமாக மொழிய வருகின்றதோ
அல்லையோ, சுட்டுணர்வுகளே. அங்கே அதுவென சுட்டறியும் வகையில் அந்நியம்இருக்கின்றதோ ஆகவே
யாதாவதோர் வகையில் ஓர் பார்வைஇருக்கின்றதோ அங்கே சுட்டுணர்வு இருக்கின்றது என்றே பொருள்படும்.
இதனால் பொறிபுலங்களை இழந்த மக்கள்கட்கும் ஒன்றறிவதாகிய உயிர்கட்குங்கூட சுட்டுணர்வு
இருப்பதாகவேப் படும். கனவுகள் வழியும்அதனைப் போண்ர அவத்தைகள் வழியும் அறிய வரும் அனைத்தும் இதனால்
சுட்டுணர்வு என்றே படும்.

மொழி என்பதை தாங்கள் பேச்சு மொழிஎன்றே கொள்வதாகத் தெரிகின்றது. ஆனால் மெய்கண்டார் மிகமிக
ஆழ்ந்தகன்ற முறையில் மொழி விளக்கம்கொண்டிருக்கின்றார். இதனால் மொழியியல் அ றிஞர்களின்
போக்கிலிருந்து தனது கொள்கையை பிரித்து நிறுத்த மொழியை " வாக்கு" என்றே கூறுவார். சில சைவ
நூற்கள் இத்தகைய வாக்குகளை நாங்கென சில ஐந்தெங்கும். இவற்றில் ஒலியங்களோடு செவிபுலனிற்கு
எட்டுவதாக வருவது 'வைகரி ' எனப்படும்.

இதனை அருணந்தியார்

>> வைகரி செவியிற் கேட்பதாய் அத்தவசனமாகி
மெய்தரும் உதான வாயு மேவிட விளைந்த வன்னம்
பொய்யற அடைவுடைத்தாய்ப் புந்திகாரணமதாகி
ஐயமில் பிரணவாயு அடைந்து எழுந்துஅடைவுடைத்தாம்>>>


என்பர்.

இவ்வாறு வெளிப்பட ஒலியன்களோடு வந்தாலும் இசைத்து மொழியமுடியா வகையில் இலங்கும் மொழிகளை,
'மத்திமை' வாக்கு என்பர்.`

>> உள்ளுணர் ஓசையாகிச் செவியினில் உறுதல் செய்யாது
ஒள்ளிய பிராணவாயு விருத்தியையுடையதன்றித்
தெள்ளிய அக்கரங்கள் சிந்திடுஞ்செயலதன்றி
மெல்லவே எழுவதாகும் மத்திமைவேறதாமே>>>

இனி இவ்வாறான பிராணவாயு விருத்திக்கும் முற்பட்ட மூலவடிவில் ஓர் ஒடுங்கியவடிவில் இருக்கும் மொழி
'பைசந்தி' எனப்படுகின்றது.

>> வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறுவிபாகமாகித்
தோற்றுதல் அடிவொடுக்கிச் சுயம்பிகாசமாகிச்
சாற்றிய மயிலின் அண்டந் தரித்திடுஞ் சலமே போன்றங்கு
ஆற்றவே யுடையதாகிப் பைசந்தி யமர்ந்து நிற்கும்>>>


இனி இவற்றிற்கு அப்பால், எவ்வித சலனங்கட்கும் ஆளாகாது நாத மாத்திரையாய்நிற்பது சூக்குமை வாக்கெனப்படும்.

>> சூக்கும வாக்கு அது உள் ஓர் சோதியாய்அழிவதன்றி
ஆக்கிடும் அதிகாரத்திற்கு அழிவினை தன்னைக் கண்டால்
நீக்கமில் அறிவானந்த முதன்மைநித்தியம் உடைத்தாய்ப்
போக்கொடு வரவு இளப்பும் விகாரமும் புருடன் இன்றாம்>>>>

இவ்வாறு அருணந்தியார் கூறிச் செல்ல யானும் இதனை பிறிதோர் வகையில் எனதுதிருநெறித் தெளிவிலும்
இன்னும் அச்சேறாத அழிவிலுண்மையிலும்விளக்கி இருக்கின்றேன். இன்னும் மெய்கண்டாரின் வாக்கு கோட்பாட்டை
Metaphysica Universalis எனும் நூலில் நாங்காம் சூத்திரத்து விளக்க உரையில் காணலாம்.
வளகத்தில் இது கிடைக்கும்

இதனால் சுட்டுணர்வுகளை சேடிப்பதே வாக்குகள் எனப்பட, மொழியின்றி சுட்டுணர்வுகள் இல்லை என்பதே
மெய்கண்டாரின் கோட்பாடு எனத் தெரிகின்றது.

இப்படிப்பட்ட பண்டையக் கருத்துக்களை இப்பொழுது வளர்ந்து கணினி செயற்கைமொழிகளோடு ஒப்பிட்டுப்
பார்ப்பது நல்லது என்றே நினைக்கின்றேன். வாக்குக் கருத்து மந்தராயணத்தோடுதொடர்புடையது. இந்த
மந்திரவுலகும் பண்டையர் கண்ட cyberspace ஆகஇருக்கலாம். பல ஒற்றுமை கூறுகள் இருக்கின்றன.


அன்பன் கி.லோகநாதன்




------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com