From jayabarathi Mon Apr 19 21:36:54 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 26752 invoked by uid 7770); 20 Apr 1999 04:26:58 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 20 Apr 1999 04:26:58 -0000
Received: from umlugghc ([202.188.69.220]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990420042657.KANG553@umlugghc>; Tue, 20 Apr 1999 12:26:57 +0800
Message-Id: <3.0.3.32.19990420123325.007d9e70@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 20 Apr 1999 12:33:25 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Chandrasekaran, Periannan"
In-Reply-To: <19990419231900.23382.rocketmail@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: a veNpA: primAthip puththANtu vAzththu
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 295

At 04:19 PM 4/19/99 -0700, you wrote:
> உ
> இன்னிசை வெண்பா
>
>அரிமாவைப் போலேநின் ஆளுமையே யோங்கப்
>பரிமாவைப் போல்நீ தடைதாண்டிப் பாயக்
>கரிமாவின் கண்நின்னைக் காக்கத் தமிழா
>பிரமாதிப் புத்தாண்டு வாழ்த்து.
>
>அரி = சிங்கம்; பரி = குதிரை; கரி = விநாயகன் (யானை) ;
>மா = விலங்கு, திருமகள்
>
>
>பெ. சந்திரசேகரன்
>அட்லாண்டா, ஜியா, அமெரிக்கா.
>perichandra@...

பாராட்டுக்கள் சந்திரசேகரன்,

முதல் அடியிலேயே நீங்கள் இன்னொருஅருமையான
நயத்தையும் வைத்துவிட்டீர்கள்.

"அரிமா" என்பதனை சிங்கம் என்றும்"அரி"+"மா" என்றும்
பொருள்கொள்ளலாம். அரி=விஷ்ணு;மா=திருமகள்.
ஆளுமை என்பது அரசைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம்.
அரசு என்பது ஐஸ்வரியங்களில் ஒன்று;லட்சுமிகரத்தில்
"ராஜலட்சுமி" என்று சொல்வார்கள். அரசன் திருமாலின் அம்சம்
பெற்றவன் என்ற நம்பிக்கை உண்டு. "தேவராஜா வழிபாடு" என்பது
கம்போடியா, ஜாவா போன்ற நாடுகளில் விளங்கியது அல்லவா?

"திருமாலும் திருமகளும் போல இசைந்துஇருந்து, அரசவாழ்வும்
வளமும் பெற" வாழ்த்தும் அமைப்பாக முதல்வரி விளங்கும்.

வாழ்த்துப்பா மரபில் மங்கலச்சொல்லுடன் தொடங்கி மங்கலகரமான
அர்த்தங்களைத்தாங்கி விளங்கவேண்டும்என்று சான்றோர்
சொல்வார்கள்.

அவ்வகையிலும் உங்களுடைய இன்னிசை வெண்பா அமைந்துள்ளது
இரட்டிப்பு லாபமே.

அப்படியே உங்களுக்கும் அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன்

ஜெயபாரதி


>
> inncai veNpA
>
> arimAvaip pOlEn-in ALumaiyE Ongkap
> parimAvaip pOln-I thataithANtip pAyak
> karimAvin kaNn-innaik kAkkath thamizha
> piramAthip puththANtu vAzththu.
>
> ari = lion; pari = horse; kari = vin-Ayakan (elephant);
> mA = vilangku and thirumakaL.
>
> P.Chandrasekaran
> Atlanta, GA, USA
========================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com