From Mon May 3 00:03:03 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 2737 invoked by uid 7770); 3 May 1999 07:02:30 -0000
Received: from usm.my (161.142.14.30) by vault.egroups.com with SMTP; 3 May 1999 07:02:30 -0000
Received: from loga.usm.my ([161.142.13.219]) by usm.my (8.8.7/8.7) with SMTP id GAA70172; Mon, 3 May 1999 06:45:45 GMT
Date: Mon, 3 May 1999 06:45:45 GMT
Message-Id: <199905030645.GAA70172@...>
X-Sender: loga@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "Dr.K.Loganathan"
Cc: "< agathiyar@egroups.com> "
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 103
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 403

அனபர்களே,

என் இளமை காலத்திலிருந்து இன்னொருகவிதை, ஓர் சுய சரிதை குறிப்போடு.இதனைச் சொல்வதற்குக்
காரணமே, மெய்யுணர்வு அடைவதற்கு சாத்திரங்களை ஓதுவதைவிட மெய்யாக வாழ்ந்து கற்பதே மேல் என்று
எனக்குப்படுவதுதான். வாழ்ந்து கற்றல் என்றுஒன்று இருக்கின்றது ஆகவே வாழ்க்கையைஒதுக்காது நன்றாக வாழ்ந்து
பட்டறிவுகள் பலபெற்று பிறகு அவற்றையே சிந்தனைப் பொருளாக்கித் தெளியும்போதே ஆழமான உண்மைகள் நம்
உணர்வோடு கலந்தவையாகின்றன. இந்தக்கவிதைக்கு மூலம் ஓர் வேதனை நாடகம்.யாரையும் தெரியாத 21
வயது இளைஞனாக, டநீடன்(Dunedon) எனும் நகரத்தில் ஒட்டாகோ பல்கலையின் ஓர் விடுதி ஒன்றில்
எனக்குப் பேருதவியாக ஓர் அழகிய வெள்ளை இளம் பெண். பரிவும் பாசமும் அசுரவேகத்தில் காதலாக மலர
பெரும் பெரும் முரண்பாடுகள். அவளோ ஓர்திவிர கிரித்தவப் பெண், தந்தையோpresbiterian church
எனப்படும் ஓர் கிரித்துவப் பரிவின்பாதிரியார், தம் சமயத்தில் தீவிரநாட்டம் உடையவர். விடுமுறை
நாட்களில் அவளது அழைப்பினை ஏற்று அவள் குடும்பத்தாரோடு தங்குவதுண்டு. அப்போதெல்லாம் அனைவரும் அஞ்சும்
வகையில் எனக்கும் அவள் தந்தை யாருக்கும்சமயத்தைப் பற்றி தீவிர வாக்குவாதம் நடக்கும். முடிவில் பிளவு,
பிரிவு. எப்படித்தான் முயன்றாலும் என்னால் மதம் மாற முடியவில்லை. அவளாலும்தான். அவர்களிடம்
தீர்க்கமாக கூறியும் விட்டேன்: என்னைஒரே ஒரு மறைநூலிற்கு அடிமையாக்க முடியாது, என்னை இந்துவென்றோ
எப்படியே கூப்பிட்டுக்கொள்ளுங்கள், என்னையே நான் அவ்வாறு சிறைபடுத்திக் கொள்ள முடியாது. எல்லா
சமயங்களிலும் ஏதோ ஒர் வகையில் ஒரே ஒரு இறைவன் தான் வெளிப்பட்டு நிற்கின்றான், அவனை அறிய
எல்லா சமயங்களையும் எவ்வித உளத்தடிப்புமின்றி அறிந்து தெளிவதே சிறப்புஎன்று கூறிவிட்டேன். அவளும்
வேதனைப் பொறுக்காது வேறோர் பல்கலைக்கு மாறிச் சென்றுவிட்டாள், தனது சர்ச்சைச் சேர்ந்த ஒருவனையே
திருமணம் செய்துகொண்டாள். இது நடந்தஓராண்டிற்குப் பிறகு எனக்கு சற்றுச் சாதகமாக இருந்த அவள் தங்கை
என்னை வந்து சந்தித்துச் சென்றபின் மறைந்த வேதனைகள் மீண்டும் வர அந்த வேதனையில் விளந்த கவிதை
இது. இந்த அனுபவமே சமயாதீத சைவத்தில் பெருத்த ஈடுபாட்டைக் கொண்டுவந்ததோடு அல்லாது, அதனை
பெரிதும் விரித்த மெய்கண்டாரைப் போற்றவும் செய்தது.


அன்பன் கி.லோகநாதன்

103. வேதனை

அனுபவங்கள்
குத்தும் முள்வளையம்
ஆசைகள்
மயக்கும் இசை அலைகள்
உந்தும் ஆற்றல் வினைகள்
வேதனை
படர்ந்து இருள் பரப்பும் நச்சு
வளைத்து இறுக்கி முறுக்கிக் கொல்லும்
மலைப்பாம்பு
அனுபவம் கொணர்ந்த
அழல் தீக்காடு
ஆசைகள் இட்டுச் சென்ற
அனல் பொய்கை
காலம் காட்டும் உண்மை
வடிவு
வாழ்வின் வடிவு
வாழ்பவன் அழுந்தி எழுந்து
அழுந்தி மறையும் அதிசயப் பொய்கை
வேதனையே!
என் உள்ளத்தை அரித்துத் தின்று
எனை அழிக்கும் வேதனையே!
செல்வாய் எனைவிட்டு
மறைவாய் உலகைவிட்டு!
காட்டாத பொருளெல்லாங் காட்டி
சொல்லாத பொருளெல்லாம் சொல்லி
கொள்ளாத கொள்கையெலாங் கொளவைத்து
எனைத் திகைப்பித்து
அழித்து அமைத்து அழித்து விளையாடும்
வேதனையே!
போதும் போதும் போய்விடு!
இல்லையேல் நான் நீயே யாவேன்
நீங்காவகை!

(6-10-67 11.00 pm)







------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications