From Tue May 4 01:43:24 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12109 invoked by uid 7770); 4 May 1999 08:43:06 -0000
Received: from usm.my (161.142.14.30) by vault.egroups.com with SMTP; 4 May 1999 08:43:06 -0000
Received: from loga.usm.my ([161.142.13.219]) by usm.my (8.8.7/8.7) with SMTP id IAA146452; Tue, 4 May 1999 08:31:17 GMT
Date: Tue, 4 May 1999 08:31:17 GMT
Message-Id: <199905040831.IAA146452@...>
X-Sender: loga@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "Dr.K.Loganathan"
Cc: "< agathiyar@egroups.com> "
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 105
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 416

அன்பர்களே,

இப்பொழுது இணையத்தில், ஒர் கவிதைஎழுவதற்கான வித்துக்களை ஓர் கவிஞன்எப்படிப் பெறுகின்றான் என்ற
கேள்வி எழுந்துள்ளது. மிக அழகியக் கேள்வி. திக்குத் தெரியாத காட்டில் புதுந்துவிட்டு திரிவது, இதுதான்
வழி என்று தெரியாத ஆழ்கடலுள் துணிந்துநீந்துவது, முன்பு யாரும் புகாத ஓர் இருண்டகுகைக்குள் துணிந்து புதுந்து
திரிவதுபோன்ற அனுபவங்களில் விழஇப்படிப்பட்ட வித்துக்கள் தானே உதிக்கின்றன என்று சொல்லலாம். இன்னும்
பல விளக்கங்களையும் பெறலாம். என் இளமைக் காலத்தில் எழுதிய இன்னொரு கவிதை ஓர் ஆழமான சிந்தனைச்
சிக்கலில் மாட்டிக் கொண்டு திணறியபோது எழுந்த ஒன்றாகும். Newton காலத்தைப்பற்றி விளக்கும் போது
காலம் வெளி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று என்றும் மாறாப் படித்தாக விளங்குவது என்று
கூறிச்செல்ல ஐன்ஸ்டெய்ன் வந்து அதனைதகர்த்தார். ஒளியின் வேகத்தோடுதொடர்புடையது கால உணர்வு
என்றார். காலஞ் சுறுங்கக் கூடியவொன்று என்று விளக்கி அணுசக்தியைக் கண்டு பிடிப்பதற்குக் காரணமான பல
புதியக் கருத்துக்களைச் கூறிச் சென்றார்.ஆயினும் காலத்தைக் கடப்பதுபற்றி ஒன்றும் கூறவில்லை. ஐரோப்பிய
உலகில் இன்று கூட அபடி யாருங் கூறுவதாகத் தெரியவில்லை. மெய்கண்டாரோ இறைவன் காலத்தாக்கமின்றி
நிற்கின்ற அறிவுப்பொருள் என்கின்றார். இந்திய உபகண்டத்தில் எனக்குத் தெரிந்த வரையில்
காலவுணர்வினைக் கடந்து அறிவது என்பதை முதன் முதலில் திருமூலரே தமது மூன்றாவது தந்திரத்தில் பல
இடங்களில் விளக்குகின்றார். F.H Bradley என்பார் வேதாந்திகளைப் போல காலவுணர்வு ஏனைய
உணர்வுகளைப்போல பொய்யென்பார். அவருக்கு Kant என்பார் காலவுணர்வும் வெளியுணர்வும் கடந்தறி யெதுவும்
ஓர்வகையான கற்பனையே (transcendental imagination) என்ற தத்துவ விளக்கத்தோடு பிணக்கு.
இவற்றையெல்லாங் கற்று ஓர் தெளிவற்றுகிடந்த ஞான்று, எப்படித்தான் இந்த காலவுணர்வு தோன்றுகின்றது என்று
சிந்தித்து சிந்தித்துத் திணறினேன்.ஒன்றுமே புரிய வில்லையே என்று அங்கலாய்த்தேன். அப்பொழுது இந்தக்
கவிதை உதித்தது, ஓர்வகையானத் தெளிவும் பிறந்தது.

அன்பன் கி.லோகநாதன்

105. வாழ்க உணர்வுகள்


வாழ்க உணர்வுகள்
வாழ்க காலம்
வாழ்க நினைவுகள்
நடப்பவை நடந்தவை
நடக்கப் போபவை
இங்கென்றும் அங்கென்று நின்று
முன்னதென்றும்
பின்னதென்றும்
முதிர்ந்ததென்றும்
முதிராதென்றும்
விளங்கி
எனை மயக்குகின்றன நானும்
மயங்கித் திளைக்கின்றேன்
கோலங்களாகியும்
கொள்ளை அழகு காட்சிகளாயும்
வேதனை மிகு வீழ்ச்சிகளாயும்
சாதனைத் திகழ் எழுச்சிகளாயும்
ஏக்கங்கள் ஆக்கியும்
எச்சங்கள் காட்டியும்
சூழ்ச்சிகள் நிறைத்தும்
எனை மயக்குகின்றன நானும்
மயங்குகின்றேன்

அது பொழுது
திகைப்பும் தத்தளிப்பும்
மிகைப்பும் உக்களிப்பும்
துன்பக் கொப்பழிப்பும்
தோன்றி மறையும்
இன்பப் பண்ணிசைப்பும்
யானே யானே என்கின்றேன்

வானூர்தி பேரிரைச்சல்
வளர்மதி தண்பாய்ச்சல்
நாடும் நதி ஓடும் நெறி
நல்ல மக்கள் பாடும் நெறி
தேனூறும் சிறு மழலை
தெவிட்டாத குழலோசை
காண் அறிவின் தெளிந்த நிலை
கவர்ந்து பேணும் மாட்சிக் கலை
யானே யானே என்கின்றேன்

மலரின் கண்ணே
பனிநீர் தூக்கம்
மலராமொட்டின்
பெண்மை நாணம்
திகழாதவற்றின் இல்லாந்தன்மை
முகிழ்வனவற்றின்
முயக்க இன்பம்
தளரா விழுப்பம்
தயக்க ஒடுக்கம்
சிணுங்கா ஒழுங்கு
வணங்காச் செரூக்கு
யானெ யானே என்கின்றேன்

வாழ்க உணர்வுகள்
வாழ்க காலம்
வாழ்க நினைவுகள்

(12-11-67 10 pm)


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications