From Wed May 5 03:48:49 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 9016 invoked by uid 7770); 5 May 1999 10:48:45 -0000
Received: from dfw-ix10.ix.netcom.com (206.214.98.10) by vault.egroups.com with SMTP; 5 May 1999 10:48:45 -0000
Received: (from smap@localhost) by dfw-ix10.ix.netcom.com (8.8.4/8.8.4) id FAA00697; Wed, 5 May 1999 05:48:21 -0500 (CDT)
Received: from pc-92-252.corp.3com.com(139.87.92.252) by dfw-ix10.ix.netcom.com via smap (V1.3) id rma000693; Wed May 5 05:48:16 1999
Message-ID: <001e01be96e4$9f102d60$d1f2578b@...>
From: "Mani M. Manivannan"
To: "K.M. Sulaiman" ,
Cc:
References: <19990505094630.10257.qmail@...>
Date: Wed, 5 May 1999 03:47:05 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Subject: [agathiyar] Re: [tamil] ethu kavithai?
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 421

> > >>எது கவிதை?
> > >>பெய்யெனப் பெய்யும் மழையா?
> > >>சொல்லோவியங்களா? [...]
> > >
> > >சொல்லழகு பூட்டி
> > >கொள்ளும் மனங்களின்
> > >உள்ளுணர்வை மீட்டி
> > >வெல்லுகின்றவை !
> >
> >கலைமனங் கொண்டச் சுலைமான் தம்பீ!
> > கற்றவர் படைத்தக் கவியொன்று தருவேன்
> >மலைப்பை விடுத்து மனந்தொட்டுச் சொல்நீ
> > மாலை மாற்றுஞ் சுழிகுளங் கவியா?
> >
> >நீகாவா மாமா வாகாநீ
> >தாமாவா தாதா வாமாதா
> >வாவாகோ தாதா கோவாவா
> >மாதாதா மாமா தாதாமா.
> >
> >பீநீகா மாமா காநீபி
> >நீகாமா வாவா மாகாநீ
> >காமாவா கோகோ வாமாகா
> >மாவாகோ தாதா கோவாமா.
> >
> >மாநீகா மாமா காநீமா
> >நீகாமா வாவா மாகாநீ
> >காமாவா கோகோ வாமாகா
> >மாவாகோ தாதா கோவாமா.
> >
> >மாமாதா நீநீ தாமாமா
> >மாதீயா காகா யாதீமா
> >தாயாவே டாடா வேயாதா
> >நீகாடா யாயா டாகாநீ.
> >
> >அன்புடன்,
> >
> >மணி மு. மணிவண்ணன்
> >பிரிமான்ட், கலி., அ.கூ.நா.
> >< >< >< >< >< >< ><
>
> மாமாதா மாமாதான்னா, நான் என்னத்தை கொடுக்கறதுன்னு தெரியல ?
> அண்ணே, இந்தமாதிரி பழிவாங்குனா எப்படி ? :-)
>
> தமிழ்க்கவிதை ஏதாவது எழுதியன்னுப்புனால்ல,
> என்னை மாதிரி அரைகுறைக்கெல்லாம் புரியும்.
>
> நீங்க அனுப்புன கவிதைக்கு நீங்களே ஒரு விளக்கவுரைய அனுப்பி,
> எனக்கு ஒரு தெளிவை உண்டாக்குங்க !

அன்புத்தம்பி சுலைமான், ;-))))

இது என்னுடைய கவிதை அல்ல! இதற்கெல்லாம் விளக்கம் தரமுடிந்தால் நானு ஏனு
புதுக்கவிதை எஸ்துனாறு! (அட நமக்குத் தெலுங்கும் கொத்தில்லா ஸ்வாமி!)
இது சித்திரக்கவி, சித்திரக்கவின்னு ஒரு மரபுக்கவி வகையிலே வந்த செய்யுள்.
இது "சருப்பதோபத்திரம்"முன்னு சொல்லுது யாப்பருங்கல விருத்தி. நல்லாப்
பாருங்க, ஒவ்வொரு வரியிலும் எட்டே எழுத்துதான். அது மட்டும் அல்ல.
இது "மாலை மாற்று", "சுழிகுளம்" என்று இரண்டு சித்திரக்கவிவகைகளை
ஒண்ணாச் சேத்து யாத்த செய்யுளாம். இந்த மாதிரிச் சித்திரக்கவிகள் பத்தி
எல்லாம் நம்ம ஜேபி அய்யா அழகா விளக்கம் கொடுத்திருக்காரு முன்னாலே.
"மாலைமாற்றுப்பதிகம்" என்ற தலைப்பில். (இப்போ அதை வலையிலேக்
காணோம், குமார் மல்லிகார்ஜுனனைத்தான் கேக்கணும்). முதல்லே
மாலை மாற்று. ஒவ்வொரு வரியையும் நல்லாப் பாருங்க. இஅதை இடமிருந்து
வலம்நோக்கிப் படித்தாலும், வலமிருந்து இடம் நோக்கிப் படித்தாலும்
ஒரே பாடல் வரிதான் வரும். (Able was I ere I saw Elba ஞாபகம்
வருதா?) சரி சுழிகுளம் அப்படின்னா என்னா? "முதலும் ஈறும் கழித்து
வாசித்தாலும் அப்பாட்டே ஆவது" அப்படின்னு விருத்தி சொல்லுது.

விளக்கவுரையா? இதுக்கா? அய்யா, தைத்தானே சொல்ல வந்தேன்!
அய்யா ஜெயபாரதி அவர்களுக்குதான் இதற்குப் பொழிப்புரை எழுதவரும்.
இதெல்லாம் இலக்கணமுறைப்படி இயற்றிய செய்யுள். ஆனால், பாத்தா
செப்பிடு வித்தை மாதிரி இல்லை? இது கவிதையா? கட்டாயம்!
புரியுமா? வித்தை தெரிஞ்சவுங்களுக்குக் கட்டாயமாப் புரியும்!
இதிலே சுவை இருக்கா? சதுரங்க ஆட்டம் தெரிஞ்சவுங்களுக்குச் சுவையா
இருக்கும், மற்றவங்களுக்கு, இந்தப் பசங்களுக்கு வேற வேலை இல்லன்னு
எரிச்சல் வரும். சிலபேரு ஆடிக்கிட்டு இருக்கறப்ப வந்து கலைச்சுட்டுப்
போவாங்க! (எங்கூடப் பிறந்த இரட்டைவால் வானரங்க மாதிரி!)
அதே மாதிரி, யாராவது பல்லாங்குழி, தாயம் ஆடிக்கிட்டு இருந்தா எனக்கு
எரிச்சல் வரும். கலைச்சுட்டுப் போவேன். அது மாதிரிதான்.

புதுக்கவிதை புடிச்ச புள்ளைங்களுக்கு அதுலே ஏதோ ஒரு சுவை.
மரபுக்கவிதையைச் சுவைத்து மகிழும் அறிஞர்களுக்கு அதில் இன்பம்.
எனக்குப் புடிக்கல, அதனால ஆடக்கூடாதுன்னு கலைக்கறது சிறுபிள்ளைத்தனம்.
நான் இப்போ கொஞ்சம் வளந்துட்டேன். அதனால எரிச்சல் வந்தாக்கூட
கலைக்கறதெல்லாம் பண்ண மாட்டேன்னு நினைக்கிறேன். ஆனா,
என் தம்பிப் புள்ளையாண்டான் இருக்கானே, அவன் தாயக்கட்டத்துலே
புளியாங்கொட்டையை வச்சுச் சதுரங்கம் ஆடறேன் பேர்வழின்னு
எங்க ரெண்டு பேரையும் வெறுப்பேத்துவான். கடைசியிலே எங்க
அப்பாக்கிட்டயே ஒதை வாங்குவான். அப்படி, தளை ஒடிந்த
கவிதைகளை, "நமது கதை புதுக்கவிதை, இலக்கணங்கள் இதற்கு இல்லை"
அப்படின்னு சொல்லி ஜகா வாங்கிக்கிட்டா, புலவர்கள் நம்ம
தலையை விட்டு வைப்பாங்க. இல்லாட்டா, 'வழு' என்பது குற்றம்,
அவை நான்கு வகைப்படும், எழுத்து வழு, சொல் வழு, பொருள் வழு,
யாப்பு வழு அப்படின்னு சொல்லி,

'திண்ணிதின் நடாத்தல் தெள்ளியோர் கடனே'ன்னு
முட்டிக்கு முட்டித் தட்டிடுவாங்க. அதனாலெ, அடுத்ததடவை,

'தத்தித்தா தூதூதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது'

அப்படின்னு மரபுக்கவிதை எழுதினீங்கன்னா, எழுத்தெண்ணி,
யாப்பறிந்து, மரபு வழுவாமல் எழுதுங்க. சொற்பொருள்
உணர்வு வண்ணங்கள் தொடர்ந்து, குற்றமின்றி, அவை தத்தமுள் தழுவும்
கோள் உடையவாய், இன்பம் பெருக்கி, அம்மை முதலாகிய வனப்பு
அலங்காரமும் செம்மையும் செறீவும் பெறுவுழிப் பெற்று, இம்மை மறுமைக்கு
நன்மை பயந்து, எல்லார்க்கும் புலனுற யாப்பு, பாட்டு, செய்யுள்
எழுதி நீடூழி வாழ்க. அப்படி இல்லே, தப்பித்தவறிக்கூட அடிமறி
மண்டில ஆசிரியப்பா, வெண்கலி கொச்சகக் கலிப்பான்னு மூச்சு
விடாதீங்க! சும்மா யாராவது

வில்லாள ருள்ளரேல் வாளிலர் வாளாளர்
வில்லாள ருள்ளாரை வெல்வாரேல் - வில்லாளர்
வல்லாள ருள்ளாரை வைவ ரவர்வயின்
வல்லாள ருள்ளார் வலி

என்று எழுதினால் வலியைப் பொறுத்துக்குட்டுப் போயிடுங்க, சரியா?

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
பிரிமான்ட், கலி., அ.கூ.நா.


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications