From jayabarathi Thu May 6 01:57:07 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 24872 invoked by uid 7770); 6 May 1999 05:14:53 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.egroups.com with SMTP; 6 May 1999 05:14:53 -0000
Received: from umlugghc ([202.188.69.39]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990506051451.DZXS5389@umlugghc>; Thu, 6 May 1999 13:14:51 +0800
Message-Id: <3.0.3.32.19990506132755.00846100@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 06 May 1999 13:27:55 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: vassan ,"N. Swaminathan" , Palaniappan A ,
In-Reply-To: <00c101be956a$a0a20fc0$5ac0b3d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Balakumaran's poem-Vassan's query
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 433


Vassan wrote:
>"அள்ளி
> கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
> நதிக்கு அந்நியமாச்சு.
> இது நிச்சலனம்
> ஆகாயம் அலைபுரளும் அதில்
> கை நீரைக் கவிழ்த்தேன்
> போகும் நதியில் எது என் நீர் "

> [ஆக்கியவர் யாரென்றெரியேன்,ஒருபுதினத்தில் கண்டது]
>
>வாசன்
>
>கேலப்,புது மெக்சிக்கோ..அ.கூ.நா

------------------------

JayBee wrote:

ஹோ!ஹோ!ஹோ!
இதுதானய்யா அத்வைதம்.
எங்கே என்னுடைய பரிசு?

அன்புடன்

ஜெயபாரதி

------------------------

Dr.Swaminathan wrote:

>பாலகுமாரன் நாவலில் வருகிறது இது. இது ஏதாவது ஒரு சுலோகத்தின் தமிழாக்கமோ?
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்

-----------------------------

JayBee wrote:


இது பழைய உபநிஷத் தத்துவந்தான்.
மண்கலசத்தில் இருக்கும் நீர்;
கலசத்துடன் கடல்நீரில் முக்கி,
கலசமும் உடைக்கப்பட்டுவிட்டால்
எது கடல்? எது கலச நீர்?

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்
பூர்ணம் உதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணம் ஏவ அவசிஷ்யதே

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

தத் த்வம் அஸி

இவற்றின் சாரத்தின் ஒரு கருத்துதான் அந்த உரைவீச்சு.
பாலகுமாரன் காஞ்சி பரமாச்சாரியசுவாமிகளின் பூரண
ஆசியைப் பெற்றவர்; யோகி ராம்சுரத்குமாரைத் தன் குருவாக
ஆச்ரயித்திருக்கின்றவர்.

அன்புடன்

ஜெயபாரதி

--------------------------------

Vassan wrote:

அன்புடன் ஜேபி அவர்களுக்கு

மிக்க நன்றி.

சில வருடங்களுக்கு முன் பாலகுமாரனின்"ஆசை என்னும் வேதம்"
புதினத்தை படித்தபோது அதில் கண்டஇக்கவிதையை இதுவரை புரிந்து
கொள்ள இயலவில்லை.

நீங்கள் சொல்லுங்கள் என்ன பரிசு வேண்டுமென :-)

சிங்கை வழியே சென்னை செல்ல உள்ள என் மனைவியிடம் கொடுத்தனுப்புகிறேன்.
அவர் சிங்கை நண்பர் திரு.பழனியிடம்கொடுத்துவிடலாம்.

ஓர் ஆலோசனை ;)

ஒரு டர்காய்ஸ் (turquoise) கல் பதித்த வெள்ளிமோதிரத்தை அனுப்ப
அநுமதிப்பீர்களா...உங்கள் மோதிரவிரலின் அளவு வேண்டும் .ஒரு நூலில்
அளந்து எத்தனை செ.மீ எனச் சொன்னால்போதும்.

-------------cut

அன்புடன்

வாசன்

===================================




------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications