From jayabarathi Tue May 11 04:06:02 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 6183 invoked by uid 7770); 11 May 1999 11:05:51 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 11 May 1999 11:05:51 -0000
Received: from umlugghc ([202.188.69.239]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990511110546.JMUM4223@umlugghc> for ; Tue, 11 May 1999 19:05:46 +0800
Message-Id: <3.0.3.32.19990511173802.00815760@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 11 May 1999 17:38:02 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
In-Reply-To: <199905110701.HAA34062@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Meykandar 7
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 463


அன்புள்ள தத்துவராயரே(லோகநாதன்),

இதுவும் நான் கொடுக்கும் பெயர்தான்.ஏற்றுக்கொள்க.
"தத்துவக்கவிராயர்" என்பதன் சுருக்கம்.

ஒரு கேள்வி.

கோளகி மடம் என்றால் என்ன?

அன்புடன்

ஜெயபாரதி


At 07:01 AM 5/11/99 GMT, you wrote:
>
> மெய்கண்டாரின் சமயாதீதம்
> --------------------------------------
>
>
>அன்பர்களே,
>அவதாரக் கருத்தைப்பற்றி எனக்கும் டாக்டர் கண்ணன் அவர்கட்கும் நடந்துவந்தகலந்துரையாடலில், உடன்பாடா
>கருத்துவேறுபாடா என்பது தெளிவற்றுப்போய்விட, அவர் எழுப்பிய சில அடிப்படைக் கேள்விகள் மிகத்
>தெளிவாக இருக்க அவற்றிக்கு விளக்கம்தரும் வகையில் மெய்கண்டார் ஞானத்தைவிளக்கலாம்
>என்றிருக்கின்றேன். பல கேள்விகளை அவர் எழுப்பியிருக்க ஒன்றொன்றாக அவற்றைப் பார்க்கலாம் என்றும்
>எண்ணுகின்றேன். இங்கு ஒன்றை மீண்டும்சொல்லவேண்டும். எந்த ஓர் அபிமானத்தின் காரணமாகவும் நான்
>மெய்கண்டாரை கண்மூடித்தனமாகப் போற்றவில்லை. உண்மையைக் கண்டு உன்மையைச்சொல்கின்றார், அதனாலேயே
>"மெய்கண்டார்" என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். மெய்யைக் கண்டு மெய்யைஉரைக்கின்ற அத்திறத்தாலேயே
>அவர் மதிப்பிற்குரிய ஒருவராகின்றார். இதனால் அவரிடம் குறையே இல்லைஎன்பதில்லை.
>சிவஞானபோதத்தில் விடப்பட்ட விசயங்களும் தெளிவாக விளக்கப்படாதவிசயங்களும் பல. அவற்றையெல்லாம்
>களைந்து அதனைவிட இன்னும் பெரியவோர் , 27 சூத்திரங்களால் ஆகிய 'அழிவில்உண்மை" என்ற நூலையும்
>எழுதி இப்பொழுது வாரந்தோறும் அன்பர்கள் பலருக்கு வகுப்புக்களும் நடத்தி வருகின்றேன். நமக்கு வேண்டியது
>உண்மையைத் தவிர்த்து வேறொன்றுமில்லை.
>
>இப்பொழுது டாக்டர் கண்ணன் எழுப்பியகேள்விக்கு வருவோம்.கிழே அது:
>
>"Dr.K.Loganathan" wrote:
> 3. சொல்வழக்கு சோர்வின்றி வணங்குவார் வணங்கார்
> எல்வழக்கு இயல்பினெழிற் சிவன்
>
>: பலவகை மறை நூற்களையே ஓதி ஓதிஅவற்றின் வழியேதான் இறைவனை அறியமுடியும் என்று அவற்றை
>வணங்கித் தொழும் ( வேதியர்கள்) போன்றோர், அருட்பெருஞ்சோதியாய் அனைவர் அகத்தும் சுடர்ந்து
>ஒளிர்ந்துகொண்டே இருக்கும் சிவப்பரம்பொருளைக் காணாதொழிவர்.
>-----------
>
>நீங்கள் சித்தர்கள் வழியில் இப்படிச்சொன்னாலும். பண்டு தொட்டு வரும் தமிழகப் பாரம்பரியத்தில்
>"அந்தணர்" அல்லது மறை ஓதுவது மெய்ஞானவழியாகத்தானே கருதப் பட்டு வந்துள்ளது. வள்ளுவன் - "அந்தணர்
>என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டு ஒழுகலான்" என்று சொல்வதும். புனல் வாதம் செய்த
>ஞான சம்பந்தர் ஆரம்பத்திலேயே மறைகள் வாழவேண்டும், வேதியர் வாழ வேண்டும்என்றுதானே வாழ்த்துகிறார்.
>அப்படியிருக்க மறை நூல் வழி அவசியமில்லை என்று சொல்வது போல் படுவது முரணாக இல்லை.
>
>இது ஒரு விளக்கத்திற்குத்தான். உடனே எனக்கு "ஐயர்" என்று பட்டம் கட்டி விடாதீர்கள். நான் ஒரு குல
>தர்மத்தை நியாயப் படுத்த இதைக் கேட்வில்லை. மறை வழிச் செல்லுதல் ஞானத்திற்கு இட்டு செல்லுமா?
>செல்லாதா? என்பதுதான் என் கேள்வி.
>--------
>
>விளக்கம்
>----------
> மறை நூற்களை ஓதுதல் வேண்டப்படுவதேஆயினும் அவற்றையும் ஓர் காலகட்டத்தில்தூக்கி வீசிவிட்டு மேலே
>செல்லவேண்டும், அப்பொழுதான் மெய்ஞானத்தை மகிழ முடியும் என்பதே என் கருத்து.உலகத்து மறை நூற்களும்
>பிறவும் ஏணிகள் போன்றவை; ஏறுவதற்குபயன்படுத்திக் கொண்டு விட்டுவிட வேண்டும். இப்படி விடாது,
>விடவேண்டும் என்றும் நினைக்காது ஓர்வெறியோடு யார் ஓர் மறைநூலைப் பற்றிக் கொண்டு இருக்கின்றார்களோ,
>அவர்களே "சொல் வழக்கு சோர்வின்றிவணங்கும்" திறத்தவர் ஆகும். இவ்வாறு மறைநூற் பற்றிலேயே வீழ்ந்து
>கிடக்கும் இவர்கட்கு பற்றற்றப் பற்று தலைப்பட முடியாது போக, பார்வையற்ற பார்வையும் வழங்காது
>போகின்றது, இதனால் அந்நியமெல்லாம்போக்கி அனைத்தொடும் அநந்நியமாகநின்றறியும் மெய்ஞானம்
>சித்தியாது போகின்றது. இப்படிப்பட்டஓர் ஞானநிலை அடைந்து மகிழும் பேறுஎல்லார் உள்ளத்திலேயும் அன்றே
>இருக்கின்றது, அதனால் எல்லார்க்கும்உரியவொன்றாகவும் இருக்கின்றது, சமயாதீத நிலை அடைந்தோர்க்கே
>இது சாத்தியம் என்பதே, திருமூலர்காலந்தொடங்கி இன்றளவு தமிழச்சைவர்களிடையே போற்றி
>வளர்க்கப்படும் சமயாதீத சைவம் என்பது.
>
>முதலில் வரலாற்று நோக்கில் சிலவிளக்கங்கள்.
>------------------------------------------------------------
>
>பதியினைப் போல் பதி பசு பாசம் அநாதி என்ற அநாதிப்பொருளியல் வரையரையே சைவ சித்தாந்தத்தின்
>அடிப்படை கோட்பாடு. இதனை முதன் முதல்தெளிவாக சொற்படுத்தியவர் திருமூலர் ஆகும். மேலும் இவரே "சைவ
>சித்தாந்தம்' என்ற சொல்லாட்சியையுங்கொண்டு வந்து, அதனை சமயாதீத சைவமாக தெளிவுறுத்தியும்
>இருக்கின்றார்.
> கீழ்வரும் ஐந்தாம் தந்திரத்துப் பாடல்கள் இதற்குச் சான்று:
>
>1395 சத்தும் அசத்தும் சதசத்துங் தான் கண்டு
> சித்தும் அசித்தும் சேர்வுறாமே நீத்து
> சுத்தம் அசுத்தமுந் தோய்வுறாமேநின்று
> நித்தம் பரஞ்சுத்த சைவருக்கு நேயமே
>
>1396 கற்பன கற்று கலைமன்னு மெய்யோகம்
> முற்பத ஞான முறைமுறை நண்ணியே
> சொற்பத மேவித் துரிசற்றமேலான
> தற்பதங் கண்டுள்ளோர் சைவசித் தாந்தரே
>
>
>பொருளாய்வில் சத்து எது அசத்து எது சதசத்து எது என்றும் ஆய்ந்து, சித்துப் பொருட்களோடும்
>அசித்துப்பொருட்களோடும் இருக்கின்றபற்றுக்களை எல்லாம் பாரித்து, சுத்தம் எது அசுத்தம் யாது என்று
>விசாரித்து இரண்டையுங் கழன்று கால இட வுணர்வுகளைக் கடந்த சுத்த நித்தத்தில்கிடப்பதே வேண்டுவதாக
>யார் வாழ்கின்றார்களோ அவர்களேசமயாதீத சைவர்கள் ஆகும். கற்று அறிந்து விட்டு நீங்கவேண்டும் என்பது
>அடிப்படையாக இங்கு இருக்கின்றது. இதனால்தான் மேலான தற்பரச் சிவனையும் கண்டு யாதிலும் தோய்வற்று
>இருக்கமுடியும் என்றுங் கூறுகின்றார்.
>
>இக்கருத்துக்களையே இன்னும் ஆழமாக மெய்கண்டார் தமது சிவஞானபோதத்து மிகவும் கடினமான ஆறாம்
>சூத்திரத்தில் விளக்குகின்றார்.
>
>
>சூத்திரம்: உணர் உரு அசத்து எனின், உணராது இன்மையின்
> இருதிறன் அல்லது சிவசத்தாம் என
> இரண்டு வகையின் இசைக்கும் மன் உலகே
>
>இதற்கு விளக்கம் கூறப் புகுகையில், யாதுயாது சுட்டி அதுவென அறியப்படுகின்றதோ, அந்நிலையில் தோன்றும்
>அறிவுகள் எல்லாம் அசத்து, ஏனெனில்,பிரகாசமாய் ஒன்றினைக் காட்டி நிற்கும் அதே பொழுது
>அப்பிரகாசமாய் வேறொன்றினைக் காட்டாது மறைத்துவைப்பதின் என்கின்றார்.இது சுட்டறிவுகளின் இயல்பு;
>ஒன்றினை உணரத்தரும் அதேபொழுதுபிறிதொன்றினை காணவொட்டாது செய்து விடுகின்றது. இதனால் மறைப்பு
>நீங்கும் போது , அறிவுகளும் பண்பில்மாறுகின்றன, புத்துரு அடைகின்றன.
>இனி இப்படிப்பட்ட சத்து அசத்து எனும்பேதங்களுக்கு அப்பால் இருப்பதே சிவசத்தாகிய சிவஞானம் என்றுங்
>கூறுகின்றார். இச்சிவஞானத்திற்கு என்றும் ஒரேபடித்தாய் இருப்பதே இயல்பாகும்.
>
>இரண்டாம் அதிகரணத்தில் வெளிப்பட்டு யாது பிரகாசமாக நிற்கின்றதோ, அதற்கு இன்னும்
>பிரகாசிக்கவேண்டுவததில்லை. யாதுவெளிப்படாது இருளில் அப்பிரகாசமாக நிற்கின்றதோ அதற்கு அறிவுப்
>பொருளாகும் பண்பில்லை. சிவசத்தாயுள்ள சிவப்பொருள் இவ்விரண்டு தன்மையுமின்றி வாக்கு மனாதீத
>கோசரமாய் நிற்பதன் இபடிபட்ட அறிவுகளால் அறியப்படான் என்கின்றார். ஆயினும் எவ்வாற்றானும் உணரப்படாது
>எனின், இல்பொருள் ஆய்விடுமே , அதானால் எப்படி இருப்பினை உணருகின்றோம் என்ற கேள்வி எழ, மிக மிக
>விரிவாக நாங்கு எடுதுக்காட்டு வெண்பாக்கள் வழியாக விளக்குகின்றார்.
>
>இவற்றில் மிகச் சிறப்பான ஒன்று:
>
> அறிய இரண்டு அல்லன்; ஆங்குஅறிவு தன்னால்
> அறியப் படான்; அறிவில்உள்ளான்-- அறிவுக்குக்
> காட்டாகி நின்றானைக்கண்ணறியா மெய்யென்னக்
> காட்டாது அறிவு அறிந்து கண்டு
>
>
>
> இறைவன் ஏனைய பொருட்களைப்போலஅந்நியநிலையில் நின்று அதுவென சுட்டிஅறியவருகின்றவன் அல்லன்.
>எதனை எதனை ஓர் ஆன்மா அறிந்து மகிழ்கின்றதோ, அதனையெல்லாம் காட்டிக் காண்க என்று ஆடுபவனாக
>இருக்கின்ற இறைவனை அப்படிபட்ட காணல்களில் காண முடியாது. இவ்வாறு காண்பதையெல்லம் விட்டு நீங்கி
>கழன்று காண்பிப்பான் யார் என்று நிற்கவே தான் வெளிப்பட்டு தானே அறிவில்ஆகுவான் என்றவாறு இங்கு
விளக்கம்.
>
>வேதமாகங்கள் தேவார திவ்விய பிரபந்தங்கள் மற்றும் உலகத்து ஏனைய மறை நூற்கள் அனைத்துமே பல்வேறு
>காட்டுகள், வெளிப்பாடுகள். காட்டப்படுவதையே கண்டு கண்டு சுவைத்துக்கொண்டு, இன்பமும் துன்பமுகாக அனுபவித்து
>அனுபவித்து மகிழ்ந்துக் கொண்டிருந்தால்,காட்டுகளை சேடிக்கின்ற இறைவனை அறியாதே கிடப்போம். அறிவு
>தன்னால் அறியப்படா இறைவனை கற்றுதேர்ந்து அறியும் வேட்கையை விடும் பொழுதே அறிய முடியும் என்பதே
>இதன் பொருள். அந்நிலையில் பயில்கின்ற இரூப்புநிலை சுத்த மோனம் என்ன, அந்த மேலான மோனத்திலேதான்
>இறைவனை மெய்யாக அறிய முடியும்.
>
>பிற்காலத்தில் தாயுமானவர் இந்த மேலான மோனத்தில் வீழ்ந்து சிவஞானத்தைத் தூய்த்து மகிழ்ந்து ஞானத்
>தழும்பல்களாக பற்பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் ஒன்றினைத் தந்துஇம்மடலை முடிப்போம்.
>
>
> அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்தப் பூர்த்தியாகி
> அருளொடு நிறைந்தது எது? தன் அருள்வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெல்லாம்
> தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிருக்கு உயிராய்த் தழைத்தது எது? மன வாக்கினில்
> தட்டாமல் நின்றது எது? சமயகோடிகளெலாம் தம் தெய்வம் எம்தெய்வம் என்று
> எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது? எங்கணும் பெருவழக்காய்
> யாதினும் வல்ல ஓர் சித்துவாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது? மேல்
> கங்குல்பகல் அறநின்ற எல்லை உளது எது? அது கருத்திற்கு இசைந்தது அதுவே
> கண்டன எலாம் மோன உருவெளியதுஆகவும் கருதி அஞ்சலி செய்குவாம்
>
>
>அன்பன் கி.லோகநாதன்
>
>
>
>------------------------------------------------------------------------
>@Backup - The #1 Online Backup Service
>Automatic, Safe, Reliable Backup and Restores. FREE for
>30 Days. INSTALL Now and have a chance to win a Palm Pilot V!
>http://clickhere.egroups.com/click/218
>
>eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
>http://www.eGroups.com - Simplifying group communications
>
>
>

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications