From Palaniappan A Tue May 11 04:22:28 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12738 invoked by uid 7770); 11 May 1999 11:22:24 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.egroups.com with SMTP; 11 May 1999 11:22:24 -0000
Received: from pop3.pacific.net.sg (pop3.pacific.net.sg [203.120.90.45]) by sunny.pacific.net.sg with ESMTP id TAA27957 for ; Tue, 11 May 1999 19:22:23 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp149.dyn70.pacific.net.sg [210.24.70.149]) by pop3.pacific.net.sg with SMTP id TAA03571 for ; Tue, 11 May 1999 19:22:21 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990512191042.00b2d350@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Wed, 12 May 1999 19:10:42 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] parade of the planets
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 464

இஅன்பு நண்பர்களே,
ஒன்பதும் ஒரே கோட்டில்
புதிய நூற்றாண்டில் வான்வெளி அதிசயம்
என்ற தலைப்பில் இன்றைய தமிழ் முரசில்வந்த செய்தியை உங்களுக்காக அனுப்புகிறேன்.
அன்புடன்
பழனி

இன்னும் 7 மாதங்களில் 2000த்தாவது ஆண்டுபிறக்கப்போகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 21ம்
நூற்றாண்டிற்குள் நாம் காலடி எடுத்துவைக்கவிருக்கிறோம்.

இந்த முக்கியமான கால கட்டத்தில்விண்வெளியிலும் பல அதிசயங்கள் நடக்கப் போகின்றன. அவற்றில்
ஒன்றுதான் சூரிய மண்டல கிரகங்கள் ஒரேவரிசையில் அணிவகுக்கும் அபூர்வ நிகழ்ச்சியாகும்.

சூரியனுக்கு அருகே உள்ள புதன் கிரகம் முதல், கடைசி வரிசையில் உள்ள புளூட்டோ வரை நமது பூமி உள்பட
9 கிரகங்களும் சூரியனில் இருந்து 19 டிகிரி கோணத்தில் ஒரே வரிசையில் அணிவகுத்து நிற்கப்போகும்
இந்த வான்வெளி அதிசயம் அடுத்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி நடக்கப்போகிறது.

இதன் தொடக்கமாக ஒரு சில கிரகங்கள்இப்போதே வரிசையில் நிற்கத்தொடங்கிவிட்டன. புதன்,
வியாழன், சனி ஆகியவை வான் மண்டலத்தின் கிழக்குப் பகுதியில் ஒன்றுக்கு ஒன்றுநெருங்கி வந்துள்ளன.
இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் நெருங்கி வருவது ஒரு விசேஷ நிகழ்ச்சிதான். அந்த வகையில் இப்போது 3
கிரகங்கள் அருகருகே வந்து இருப்பதுகுறிப்பிடத்தக்க சம்பவமாகக் கருதப்படுகிறது.

அதிகாலை நேரத்தில் கிழக்குத் திசையில் மேஷ ராசி மண்டல்ததில் இந்த 3கிரகங்களையும் நாம் பார்க்க
முடியும். சனி கிரகம் சூரியனுக்கு அருகில் வந்துள்ளது. இந்த மாத இறுதியில் அதிகாலை நேரத்தில் சனி
கிரகம் பிரகாசமாகத் தெரியும். ஆனாலும் கிரகங்கள் அணிவகுப்பால் பூமியில்எந்த மாற்றமும் இருக்காது.
எந்த ஆபத்தான சம்பவங்களும் நடந்து விடாது.

வருகிற ஆகஸ்ட்டு மாதம் 11ந் தேதி முழு சூரிய கிரகணம் நடக்க இருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்த
நிகழ்ச்சியாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதி சூரிய கிரகணமான இதை இந்தியாவில்
தெளிவாகப் பார்க்க முடியும்.

குஐராத் மாநிலம் வடோதரா என்ற இடம்தான் முழு சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கான பொருத்தமான
இடமாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்துக்கு வடக்கே 60 கிலோ மீட்டர்
தூரத்திலும் இது நன்றாகத் தெரியும்.

இந்தியாவின் முழு கிரகண நேரம் 1 நிமிடம்தான். ஐரோப்பிய கண்டத்தில் 2 நிமிடம் நீடிக்கும்.
சென்னையைச் சேர்ந்த வான்வெளி ஆய்வுத்துறை நிபுணர் G கோபிநாத் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
- நன்றி தமிழ் முரசு

இது பற்றி,
டாக்டர் JB, தம்பி அன்புமணி மற்றும் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்?


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications