From Tue May 11 21:52:56 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20862 invoked by uid 7770); 12 May 1999 04:52:54 -0000
Received: from usm.my (161.142.14.30) by vault.egroups.com with SMTP; 12 May 1999 04:52:54 -0000
Received: from loga.usm.my ([161.142.13.219]) by usm.my (8.8.7/8.7) with SMTP id EAA11080; Wed, 12 May 1999 04:41:16 GMT
Date: Wed, 12 May 1999 04:41:16 GMT
Message-Id: <199905120441.EAA11080@...>
X-Sender: loga@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
To: agathiyar@egroups.com
From: "Dr.K.Loganathan"
Cc: Tamil iNaiyam
Subject: [agathiyar] Re: kuRaL yaappil..
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 471

திரு சந்திரசேகர்ன் அவர்களே,
தங்களது கேள்விக்குப் பிறகு மீண்டும் அந்த நூற்பாவைப் பார்த்தேன். நான் ஒரு தவறுசெய்திருப்பதையுங் கண்டேன்.

பாடலின் மெய்வடிவம் இதோ

35. இவற்றால் பெரியேம்யாம் என்றேஎழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம்.


இங்கு " என்றே" வருவதால் தனியோர் சீராக நிற்கின்றது. ஆகவே முதலடி நாங்குசீர்களை உடையதாகவே
விளங்குகின்றது. ஏகாரத்தை விட்டது என்தவறு. ஆயினும் ஏனைய பல பாடல்கள் குறள் வெண்பாவா என்று எனக்கு
உறுதியாகத் தெரியவில்லை. தாழிசையாகச் சில பயில்கின்றன என்றே நினைக்கின்றேன். காட்டாக:

175. அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார்
ஒருங்கு அடையும் மாண்பு திரு

181. நச்சரவு அணிநிழல் பச்சைமா மலைதனை
நிச்சலும் நினப்பவர்க்கு அச்சம்இல்லையே

என்பன. இன்னும் பல ஏடுகளைத் தேடி நல்லதிருத்தமான ஒர் பதிப்பினை கொண்டுவர வேண்டும் போலும்.

அச்சிட்ட நூலில் "இகழ்க்கில்" என்றுதான்இருக்கின்றது. நான் என்ன செய்ய? எங்கேபிழை என்று
தெரியவில்லை. பல சமண நூற்களில்வழக்கத்திற்குப் புறம்பான சொல்லாடல்களி கண்டிருக்கின்றேன். தனக்கென
சில சிறப்புக்களைக் கொண்டதாக "சமணத்தமிழ்" என்றவொன்று இருந்ததுபோலும்.ஆராயப்பட வேண்டிய ஒன்றாக
இக்கருத்தை முன்வைக்கின்றேன்.

தத்துவராயன் கி.லோகநாதன்





At 01:52 PM 5/11/99 -0700, you wrote:
>
>
>--- "Dr.K.Loganathan" wrote:
>> இது உண்மையெனில், திருக்குறளிற்குஅடுத்தாற்போல் குறள் யாப்பில் தோன்றிய பழைய நூல் இந்த
>> அருங்கலச்
>> செப்பு ஆகின்றது.
>>
>>
>> 35. இவற்றால் பெரியேம்யாம் என்றுஎழுந்தே
>> இகழ்க்கில் இறக்கும் அறம்
>>
>> அன்பன் கி.லோகநாதன்
>>
>
>அன்புள்ள திரு லோகநாதன் அவர்களே,
> அந்த அரிய நூலை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
>
>பாடல் 35-இல் தளை தட்டுகிறதே, இப்பாக்கள் குறள் *வெண்பாக்களாயின் *.
>முதல் அடியில் மூன்று சீர்களே உள்ளன ( என்று + எழுந்தே = என்றெழுந்தே என்று
>ஒரு சீர் ஆகிவிடும்). அதன் பின்னர் வரும் "இகழ்க்கில்" காய் முன் நிரை என்னும்
>தளையைத் தட்டுகின்றது. தட்டுப் பிழைபோல் (typo) தோன்று கிறது (இரட்டை மொழி !
>pun intended ...and புன் (puN ...புண்) நாட் இந்டெண்டெட்)!
>
>சந்திரசேகரன்.
>
>
>_________________________________________________________
>Do You Yahoo!?
>Free instant messaging and more at http://messenger.yahoo.com
>
>------------------------------------------------------------------------
>@Backup - The #1 Online Backup Service
>Automatic, Safe, Reliable Backup and Restores. FREE for
>30 Days. INSTALL Now and have a chance to win a Palm Pilot V!
>http://clickhere.egroups.com/click/218
>
>eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
>http://www.eGroups.com - Simplifying group communications
>
>
>


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications