From Wed May 12 20:36:03 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29132 invoked by uid 7770); 13 May 1999 03:35:58 -0000
Received: from usm.my (161.142.14.30) by vault.egroups.com with SMTP; 13 May 1999 03:35:58 -0000
Received: from loga.usm.my ([161.142.13.219]) by usm.my (8.8.7/8.7) with SMTP id DAA17452; Thu, 13 May 1999 03:24:14 GMT
Date: Thu, 13 May 1999 03:24:14 GMT
Message-Id: <199905130324.DAA17452@...>
X-Sender: loga@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "Dr.K.Loganathan"
Cc: "< agathiyar@egroups.com>"@usm.my
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 115
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 476

அன்பர்களே,

நாத்திக வாழ்க்கை தேவையற்ற ஒன்று என்பது மாத்திரம் அல்ல , பொய்யான ஒன்றுஎன்பதுமாம். ஆத்திகர்கள்
எனப் பேர் போடுகின்றவர் அற்பர்களாகஇருக்க அவர்கள் மேல் இருக்கின்ற சினத்தின் காரணமாக ஆண்டவன்
இல்லை என்பதும் பழிப்பதும் நமக்கு நாமேகுழித் தோண்டி புதைத்துக் கொள்வது போன்றது. காஞ்சிப் பெரியவர்
ஓரிடத்தில் மருத்துவருக்கு மருத்துவம் போல, வழக்கறிஞர்கட்கு வழக்காடுதல் போல பார்ப்பனர்கட்கு உரியத்
தொழில் சமயத்தைப் பேணுவது என்றவாறுமிக அற்பமான ஓர் கருத்தைக் கூறி சமயஉணர்விற்கே ஓர் பெரிய
களங்கத்தை விளைவித்துள்ளார். அவர் கூறிய எல்லாக் கருத்துக்களும் அற்பம் என்றுகூறவில்லை. நல்லதுங்
கூறியிருக்கின்றார். ஆனல் இப்பேர்ப்பட்ட கருத்துக்களையுங் கூறி இருப்பது வேதனைக் குரிய வொன்றாகும்.
இறைவனைப் பேணுவதும், அறியாதோருக்கு அறியக் காட்டுவதும் ஓர் சாதீயத் தொழிலல்ல; எல்லாருக்கும்
உரியவொன்றாகும். பக்குவம் முதிர முதிர இறைவனோடு சாமீப்பிய சாயுச்சியப் பேறுகள் விளைய "யான்
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்றதிருமூலர் வாக்கிற்கு இணங்க, பிறரையும் துன்பம் போக்கி இன்பமாக
வாழ உதவுகின்ற முயற்சி எல்லாருக்கும்உரித்து. அதற்கு சாதீய அடிப்படையிலோ பாலியல் அடிப்படையிலோ
தடைகளைக் கொண்டுவருவது அறமல்ல. இன்றுதீவிர சமய ஈடுபாட்டில் விழவும் பண்டாரங்களாக மகளிர்
இறைவனுக்குத் தொண்டு செய்யவும் நல்லதோர் சூல்நிலை இல்லை. இது பெண்களுக்கு ஆண்ஆதிக்கம் செய்யும் பெரும்
பாவமாகும். தெய்வத் தொண்டு என்பது அகத்து அநாதியே செறிந்திருக்கும் மலமாசுக்களை போக்கி சுத்தமாகி
உயர்ந்திட இறைவனே அமைத்துத் தந்துள்ளஓர் சாதனமாகும். உள்ளொளி பெருக்கிப் பெருக்கி மனநலமும் உடல்
நலமும் பெற்று இனிதே வாழ்ந்திட இறைவனே காட்டியருளி யுள்ள ஓர் சாதனமாகும்.

தாயுமானவர் பாடுகின்றார்:

அறியாத என்னை அறிவாயும் நீயென்று அகம் புறமும்
பிறியாது அறிவித்த பேரறிவுஆம்சுத்தப் பேரொளியோ?
குறியாத ஆனந்தக் கோவோ? அமுதுஅருள் குண்டலியோ?
சிறியேன் படும்துயர் கண்டுகல் ஆல்நிழல் சேர்ந்ததுவே.

இப்படிப்பட்ட சுத்தப்பேரொளியில் புகுந்து சுத்தமாக வாழ்வது எல்லாருக்கும் உரித்து, குறிப்பாக மகளிர்கட்கும்
உரித்து. வேதப் பார்ப்பனர்களும் வீணானபண்டாரங்களும் தேவையில்லை. இப்படிப்பட்ட கருத்துக்களோடு இன்றைய
கவிதை.

அன்பன் தத்துவராயன் கி.லோகநாதன்




115: அருள் வீழ்ச்சி


விளையாட்டல்ல அன்பனே வெகுளாதுகேள்!
நிறைந்த வீரியத்தோடு நெடுங்காலம் வாழலாம்
தளர்ந்துபோய் வீழாது
தள்ளுநடை பயிலாது
விரைந்து விரைந்து பல ஆடலாம்
வெற்றி வேந்தனாய் முடி சூடலாம்
கரந்து நிற்குங் கடவுளை அந்தக்
கருணாகரத் தேவனை
கருதியே நீ வாழ்ந்தால்!

நச்சு ஆணவத்தை நசித்திடும் வன்மையை
உச்சிக் குன்று ஓங்காரக் குகைக்குள்
ஒளித்து ந்ந்திருக்கின்றான்
நச்சி நாதவிந்து சிவலிங்கத்தை
நாடுவார்க்கு
மெச்சி அவன் தருவான்
வீரியத்துக் குண்டலியை

காண்கின்ற அசுத்தங்களைக் கடிந்து
கடுமையாகப் போரிட்டு வென்று
உயிரை உண்ணுகின்ற
உயிரோடு உறைகின்ற மலங்களை
உதிர்ந்து விழ வைப்பீரேல்
உண்டங்கே அமுத வுணவாக
உயிரோம்பும் அருள்வீழ்ச்சி
உண்மையெனும் உணர்வுடனேயே வரும்
உள்ளொளி பெருக்கம்

கள்ளமும் கரப்பும் கபடமும்
சிறந்தவைப் போற்றாச் செருக்கும்
வீணவாவும் வெகுளியும் வெறுப்பும்
விளங்கிடு உள்ளங்களில் இல்லை
சுத்தமும் சுகந்தரும் மெய்ச்சுடரும்

கத்துக் குரல் கம்மிட
காயமும் வறட்சி உற்றிட
காலன் கொண்டு செல்வான் கண்டு
கடவுளைப் பேணார்
கலங்கி வீழ்ந்திட





------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications