From Thu May 13 18:04:25 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1292 invoked by uid 7770); 14 May 1999 01:04:15 -0000
Received: from usm.my (161.142.14.30) by vault.egroups.com with SMTP; 14 May 1999 01:04:15 -0000
Received: from loga.usm.my ([161.142.13.219]) by usm.my (8.8.7/8.7) with SMTP id AAA15426; Fri, 14 May 1999 00:52:35 GMT
Date: Fri, 14 May 1999 00:52:35 GMT
Message-Id: <199905140052.AAA15426@...>
X-Sender: loga@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "Dr.K.Loganathan"
Cc: "< agathiyar@egroups.com>"@usm.my
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 116
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 479

அன்பர்களே,

இன்றைய அவசர உலகில் பெரிதும் பாதிக்கப் பட்ட ஒன்றாக இருப்பது குடும்ப வாழ்க்கையின் சிதைவு என்றால்
மிகையாகாது. திருமணம் என்றால், ஆண் பெண் உறவு என்றால் உடன் பாலியல் உணர்வுகள் தான் நினைவிற்கு
வருகின்றன. திருமணம் என்பதை பாலியல்இன்பம் தூய்க்கவே என்று நினைக்கின்றனர். அது கிட்டாதுபோக
மணமுறிவு என்று போகின்றனர். திருமணம் என்பது ஆழமான அன்பின் உறவு, அபூரணமாயிருக்கும் இரண்டு
ஆன்மாக்கள் உள்ளத்தளவில் ஒன்றி பிறகுஉடலளவில் கலந்து வேறற்று வாழ்ந்துஅத்துவிதமாக இருப்பது என்ற
கருத்துக்களெல்லாம் பழங்கதையாகி விட்டன. இதற்குக் காரணமே உலகாயத சிந்தனைகளின் வலுவான பிடிகள்
தாம். ஆண்பெண் இடையே வலுவான அன்பின்உறவுகள் தெய்வீகமான அகச்சூழல் இருக்கத்தான் தோன்றும். உள்ளங்கள்
சுத்தமாக ஆண் உள்ளத்தில் அரனே வெளிப்பட்டு ஆட்சி செய்ய பெண் உள்ளத்தில் உமை அம்மையே வந்து
குடிகொள்வாள். இப்படிப்பட்ட ஆண்கள் பெண்கள் இடையேத்தான் வைரபந்தத்து உயிரோடு உயிர் கலந்த உறவுகள்
மலரும். இரண்டு உள்ளங்களும் ஊடுருவி ஊடுரூவி உள்ளெ உள்ளே சென்று யாண்டும் பிரிக்க முடியாத அத்துவிதமான
ஓர் உறவில் விழும். ஆண்பெண் உறவிற்குஇப்படிப்பட்ட ஓர் பண்பு இருக்கின்றது.அவ்வுறவில் படுவோர்
பேய்க்கரும்போடு திரிந்த பட்டினத்தாராக எழார்; முதல் குழந்தை பிறந்த ஞான்று மனைவியைத் துறந்த
சித்தார்த்தன் ஆகார். மாறாக வள்ளுவர்வாசுகியைப் போல வாழ்வார். தொல்காப்பியர் வகுத்ததுபோல்,
காமஞ் சான்ற கடைகோட்காலை, நற் சுற்றமொடு வாழ்ந்து சிறந்தது பல செய்து இனிதே வாழ்வர். வையத்து
வாழ்வாங்கு வாழவேண்டும். அது தெய்வீகமான அன்பின் அமையும் தாம்பத்திய உறவில்தான் இருக்கின்றது. தமிழப்
பண்பாட்டில் தொல்காப்பியர் காலந் தொட்டு இது மறவாது வளர்க்கப் பட்டுள்ளது.திருவள்ளுவர் அன்பின்
காமத்துபாலைத்தான் பாடினாரேத் தவிர அங்கசேட்டைகளின் காமசூத்திரத்தைஅல்ல.

அனப்ன் தத்துவராயன் கி.லோகநாதன்

116. பூரணத்தின் பூரணம்


அருளின் திருமேனி உமை யவள்
அரன் ஒருவனுக்கே உரியவள்
திருவின் மாட்சியெல்லாம் அங்கு
செகத்தின்
சிறப்பெல்லாம் அங்கு

மங்கையை வெறுத்தொதுக்கும் மடமையின்
தங்குவிக்கும் தணிவையெலாம் இழந்து
பொங்கும் கனலில் வீழ்வர்
பொசுங்கியே மாய்வர்

சிந்தித்துச் சிறந்து செகத்தின்
மயக்க அறிவெல்லாம் மாய்க்க மகிழ்ந்து
திருவளர்ச் செல்வியாய் வருவாள் உமை
சேர்ந்திருந்து உயிரோடு உயிராக
செறிகின்ற மங்கையாய்
அன்பின் விளைகின்ற
அமுதம் ஊட்டுவாள்

அதற்கு முன்பு

சிக்கல் வளைக்குள் இழுப்பாள் அவள்
இருட் செறிந்த
குகைக்குள் அழைப்பாள் அவள்
வழிநெடுக தவறி விழச் செய்யும்
குண்டலினிப் பாம்புகளை குவித்தும்வைப்பாள்

வீழ்வோர்க்கு உரித்து வேதாந்தத்துறவு
விரக்தியின் பெண்மை வெறுப்பு
வீழார்க்கு
வெறுப்பும் விருப்பும் வெந்துயரும் போக்கும்
அருள் விழி உமையின்
அணைப்பும் அதனோடு வரும்
பூரணத்தின் பூரணம் புரிந்தமரும்
பரிபூரணமும்




------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications