From Krishnan Sun May 16 07:08:04 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 13852 invoked by uid 7770); 16 May 1999 14:07:58 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by vault.egroups.com with SMTP; 16 May 1999 14:07:58 -0000
Received: from pop3.pacific.net.sg (pop3.pacific.net.sg [203.120.90.45]) by snoopy.pacific.net.sg with ESMTP id WAA08882; Sun, 16 May 1999 22:07:54 +0800 (SGT)
Received: from default (ppp124.dyn95.pacific.net.sg [210.24.95.124]) by pop3.pacific.net.sg with SMTP id WAA23239; Sun, 16 May 1999 22:07:52 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990516220530.0082a810@...>
X-Sender: kisna@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Sun, 16 May 1999 22:05:30 +0800
To: Tamil-Hinduism@...
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Thirumurai [திருமுறைகள்]
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 494





* திருமுறை* #1
^^^^^^^^^^^^


" நமச் சிவாயா வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்நீங்காதான் வாழ்க "

மக்கள் வாழ்க்கையை அகம், புறம் என்று பகுத்து அதன் இயல்புக மிக நுட்பமாக ஆய்ந்து சங்க
காலத்தை ஒட்டிப் புறப் பொருளின் ஒருபகுதியாகிய " அறத்தின் " சிறப்பினை எடுத்து உரைக்கும்
அறநூல்கள் பல இயற்றப்பட்டன.சங்க நூல்களில் இருந்து அமைப்பு முறையாலும், பாடுபொருளாலும்
மாறுபட்டவைகள் அவை. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களாகிய பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களில் பதினோரு நுல்கள் நீதிநூல்களாகும். நீதி நூல்கள் என்று குறிப்பிடும் வழக்கம் தேவார
திருமுறை காலங்களில்தான் தோன்றியது. அதற்கு முற்பட்ட காலத்தில் " அறம் " என்ற சொல்லையே
கையாண்டு வந்தனர் என்றும் திரு. க. த.திருநாவுக்கரசு கூறுகிறார்

சமண சமயத்தின் செல்வாக்கு தமிழகத்தில் பெருகி இருந்த காலத்தில்தான் "நீதி " என்ற
சொல்லாட்சி தமிழில் வழங்கித்தொடங்கியது. " நீதி " என்பது தமிழ் சொல்லன்று ; அது
வடமொழிச் சொல் ; அறம் என்பதே தமிழ்ச் சொல். ஆனால் அறத்திற்கும் வட நூலார் கூறும் நீதிக்கும்
மிகுந்த வேறுபாடு உள்ளது. அறத்தின் பொருள் மிக விரிந்தது ; ஆஅழமானது ; இயல்புகளையும்
அணைத்துச் செல்லும் தன்மையானது.

" அறம் " என்பதை வரையறுத்துக் கூறுவது எவ்வளவு சிக்கலானதோ அதைவிடச்சிக்கலானது " சமயத்தை
" வரையறுத்துக் கூறுவது. எனினும் " மெய்யான ஒழுக்கநெறி " என்பது ஐம்பொறி வாயிலாக
பிறக்கும் வேட்கையினை வென்று வாழ்வதே இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியாகும்.

இவ்வாறு இறைவனோடு தொடர்புடைய ஒழுக்க நெறியைச் "சமயம் என்றும் , " மதம்" என்றும் " கடவுள்
நெறி " என்றும் சாறோர் கூறுவார்கள்." சமயம் " என்பதற்க்கு "மனிதனுடைய ஆன்மாவைப் பக்குவப்படுத்தும்
நெறி"என்றும், " மதம் " என்பதற்குக் கடவுளிடம் கொள்ளப்படும் அசைக்க முடியா நம்பிக்கை " என்றும்
சான்றோகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மற்றவை நாளை...


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications