From Krishnan Tue May 18 03:07:48 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14968 invoked by uid 7770); 18 May 1999 10:07:42 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.egroups.com with SMTP; 18 May 1999 10:07:42 -0000
Received: from pop3.pacific.net.sg (pop3.pacific.net.sg [203.120.90.45]) by sunny.pacific.net.sg with ESMTP id SAA15500; Tue, 18 May 1999 18:07:37 +0800 (SGT)
Received: from default (ppp163.dyn64.pacific.net.sg [210.24.64.163]) by pop3.pacific.net.sg with SMTP id SAA12402; Tue, 18 May 1999 18:07:34 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990517215242.007a8100@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Mon, 17 May 1999 21:52:42 +0800
To: Tamil-Hinduism@...
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Thirukurai [திருமுறை .3]
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 507




திருமுறைகள் # 3
************


சாத்திர நூல்கள் இறைவனின் அருள் திறன் நிலைகளை இறைவனோடு
இரண்டறக் கலத்தல், இறைவன் வடிவம் பெறல், இறைவனுடன் இருத்தல்,
இறைவன் உலகில் இருத்தல் என்று நான்காக குறிப்பிடும்.

" சன்மார்க்கம் , சகமார்க்கம் , சற்புத்திர மார்க்கம், தாதமார்க்கம்
என்றும் சங்கரனை அடையும் நன்மார்க்கம் நால் அவைதாம்.
ஞானம், யோகம், நல்கிரியா,சரியைஎன செய்வார்,
முன் மார்க்க ஞானத்தால் எய்தும் முத்தி முடிவு என்பர் ;
மூன்றினுக்கும் முத்திபதம் என்பர் "

இவ்வாறு இறைவனின் அருள் திறம் பெற்றிட அருளாளர்கள் வழி
வகுத்துக் காட்டிய தோத்திரம் - சாத்திரமுமே திருமுறைகள். இறைவனின்
நால்வகை அருள் திறனுக்கேற்ப நால்வகைநெறிகள் வகுத்து காட்டப்
பெற்றுள்ளன. சரியை , கிரியை , யோகம் , ஞானம் என்னும் நால்வகை
நெறிகளையும் தோத்திரத்தாரும் -சாத்திரத்தாரும் கூறியதோடு அல்லாது
தங்கள் வாழ்விலும் செயல் படுத்திக்காட்டினார்கள்.

நால்வகை நெறிகளில் ஒன்று சரியையாகிய தாத மார்க்கம். இதனை
அடிமை நெறி என்றும் குறிக்கலாம். அடிமை நெறியின் ஒரு கூறு " புகழ்ந்து
பாடல் " இதனை தோத்திரர் அப்பர் அடிகள் " பூமாலை புனைந்து ஏத்திப்
புகழ்ந்து பாடியது " என்பார். சாத்திரராம் அருணந்தி சிவ ச்சரியார்,
" பூந்தார் மாலை கண்ணி புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடி " என்பார்.

இப்படி புகழ்ந்து பாடுதல் என்ற கூற்றில்அமைந்தவைகளே தோத்திரங்கள்
திருமுறைகளைச் சமயப் பெரியார்கள்தோத்திரத்தில் அடக்கிக் காட்டும்போது
தோத்திரங்களில் காணப்பெறும் பாடல்களை உரையாசிரியர்கள் அவற்றைப்
பாடாண் திணைப் பாட்டு என்பர்.

திருமுறைகள் புறத்தினையும் , அகத்திணையும் மக்கள் போற்றி பாடுகின்ற
செய்யுட் குறிப்பினைக் கொண்டது.

தலைவனாகக் கொண்டு அவனைக் காதலித்து அகத்துறையாகப் பாடாண்
பாட்டைப் பாடலாம் என்பது தெளிவுகிறது. இம்மாதிரி பாடுகின்ற பாடாண்
பாட்டை ' கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயத்தல் " என்று கூறலாம்.

இதன் அடிப்படையில்தான் தேவாரத் திருமுறை போன்ற அருளாளர்கள்
பாடிய தோத்திரங்கள் அருட் பாமாலையில் காணப்பெறுகின்ற அகத் துறைப்
பாடல்களை " கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கமாக " க்
கொள்ளும் மரபு பண்டு தொட்டு இன்று வரைபக்தி உலகில் இருந்து வருகிறது.
இம்மரபில் தம்மால் போற்ற பெறும் இறைவனை நாயகனாகக் கொண்டு -
அருளாளர்கள் தம்மை நாயகியாக் கொண்டு நாயக - நாயகி பாவத்தில் பாடி
மகிழ்ந்தனர்.

தொடரும்...
கிருஷ்ணன்


------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications