From Fri May 21 09:36:32 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 17002 invoked by uid 7770); 21 May 1999 16:36:22 -0000
Received: from gull.prod.itd.earthlink.net (207.217.120.85) by vault.egroups.com with SMTP; 21 May 1999 16:36:22 -0000
Received: from default (pool194-cvx.ds61-ca-us.dialup.earthlink.net [209.179.192.194]) by gull.prod.itd.earthlink.net (8.9.3/8.9.3) with SMTP id JAA06521 for ; Fri, 21 May 1999 09:36:21 -0700 (PDT)
Message-ID: <005d01bea38d$66640620$c2c0b3d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Fri, 21 May 1999 09:25:30 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Thirumurai
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 530



உடம்படுமெய்

நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள உயிர்மெய்களை ஒன்று சேர்க்க வரும் மெய்
உடம்படுமெய் ஆகும். உடன்படச்செய்தல் என்று பொருள். உடம்பாகப்பொருந்தும் மெய் எனவும்
சொல்லலாம்.

யகர மெய் தோன்றுமிடம்
==================
இ, ஈ, ஐ என்ற மூன்று உயிர் எழுத்துக்களில் ஒன்றை கடைசியில் பெற்றிருக்கும் சொல்லுக்குமுன்
உயிர் எழுத்து வந்தால் இடையில் யகரமெய் தோன்றும்

மணி + அழகு = மணியழகு

தீ + எழுந்தது = தீயெழுந்தது

பனை + ஏடு = பனையேடு


வகர மெய் தோன்றுமிடம்
===================

இ, ஈ, ஐ என்ற மூன்று உயிர் எழுத்துக்கள் இல்லாமலும் மற்றைய ஒன்பது உயிர் எழுத்துக்களில் ஒன்றைக்
கடைசியில் பெற்றிருக்கும் சொல்லுக்கு முன் உயிர் எழுத்து வந்தால் இடையில் வகரமெய் தோன்றும்.

கோ + ஆணை = கோவாணை

சே + ஏறினான் = சேவேறினான் (சே = எருது)

பூ + இரண்டு = பூவிரண்டு

அது போலவே,

தே + ஆரம் = தேவாரம் (தே = கடவுள், ஆரம் = மாலை)

புணர்ச்சி விதிக்குட்பட்டு , பொருளும் சரியாகத்தானே தோன்றுகிறது !

(நன்றி : எளிமைத்தமிழ் இலக்கணம்)

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

=============================


1. தே + வாரம்
2. தே + ஆரம்
>
> ***இரண்டாம் பொருள் பொருத்த்மான தன்று.
>அஃது இடைக்காலத்தில் இசைத் தமிழை மறந்து இயற்றமிழின் உயிரான
>பொருள் இலக்கணத்தையும் மறந்த மக்கள் கூறியதாகும்.
>இசைத்தமிழ் அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் என்பவர் இதை அறிவுறுத்துகின்றார்.***
>



------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications