From Krishnan Sat May 22 05:39:12 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 25138 invoked by uid 7770); 22 May 1999 12:39:03 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.egroups.com with SMTP; 22 May 1999 12:39:03 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id UAA16334; Sat, 22 May 1999 20:38:58 +0800 (SGT)
Received: from default (ppp140.dyn70.pacific.net.sg [210.24.70.140]) by pop1.pacific.net.sg with SMTP id UAA10071; Sat, 22 May 1999 20:38:55 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990522203547.0083e1e0@...>
X-Sender: kisna@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Sat, 22 May 1999 20:35:47 +0800
To: Tamil-Hinduism@...
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Thirumural [ திருமுறைகள். 7]
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 542


திருமுறை: #7
***********


" அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அது"
என்கிறார் வள்ளுவர்.
அன்பையும் அறத்தையும் போற்றினால்இல்வாழ்க்கை சிறக்கும்.

" நினைப்பெனும் நெடுங் கிணற்றை நின்று நிறையாரே
மனத்தினை வலித் தொழிந்தேன் அவலம் வந்தடையாமைக்
கனை தெழு திரள் கங்கை கமழ் சடைக்கரந்தான் தன்
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதே "
மக்கள் அடையும் இன்னல்களுக்கு எல்லாம்அடிப்படைக் காரணம்
ஆசை என்னும் நெடுங்கிணற்றில் வீழ்வதுதான் என்று கூறுகிறார் புத்தர்.
பேராசையாகும் போதுதான் தீமைகள்அதிகரித்து , அறம் மறைந்து ,
மறம் ஆட்சி புரியத் தொடங்குகிறது.





" அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்
நான்கும் இழுக்கா இயன்றது அறம் " என்கிறது வள்ளுவம்.
சம்பந்தர் போல் திருநாவுக்கரசரும்அறநெறிப் பண்புகளை உணர்த்ததுகிறார்.திருநாவுக்கரசர் தேவாரம்
மூன்று திருமுறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருமுறை வரிசையில் அவை நான்கு , ஐந்து , றாம்
திருமுறைகளாக அமைந்து உள்ளன. திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் ஆகிய மூவரது
பாடல்களையும் ' தேவாரம்' என்ற சொல்லாலும் , சுந்தரரது திருவாக்கினைத்'திருப்பாட்டு ' என்ற
சொல்லாலும் , சம்பந்தருடைய திருவக்கினை 'திருக்கடைக்காப்பு ' என்று குறிக்கும் வழக்கம் வந்தது.

"அப்பர் " என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் திருவாக்கிற்க்கு தேவாராம் என்ற வழக்கு இருந்தது.
உள்ளத்தை உருக்கும் இறைவன் திருவடிக்குஅன்பை விளைவிப்பத்தில் அடிகளார்பாடல்களுக்கு தனித் திறன்
இருந்தது. அனுபவித்து உணரப்பட்ட அடிகளார் பதிகம் மனத்தையும் கனி வித்து உருக்கச் செய்வது.

" அத்தாவுன் அடியேனை அன்பால் ஈர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை யானாய்
எனை யாண்டு கொண்டு இரங்கி ஏற்றுக்கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயன் நாயேன்
பிழைகள் எத்தனையும் பொறுத்தாய்
இத்தனையும் எம்பரமோ ஐயா , ஐயோ!
எம்பெருமான் திருக்கருணை இருந்தவறே"

மனிதர் குறைபாடுடையவர் என்பதையும் ,எம்பெருமானிடம் உருக்கமாக
எடுத்தோதும் அப்பர் , மனிதரது குறைகளை உணர்ந்தே இறைவன் அருள்
பாலிக்கிறான் என்ற கருத்தையும் கூறுகிறார் ; தவறு செய்வது இயல்பு ; அதை உணர்ந்து திருந்துபவனே பண்பு
மிக்க மனிதன்.
திருஞான சம்பந்தர் , திருநாவுக்கரசரும்போல் சுந்தரரும் அறநெறிப்
பண்புகளை உணர்த்தியுள்ளார். ஞானசம்பந்தரும் , திருநாவுக்கரசரும் ஒரே காலத்தவர் ; ஏழாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர். அவ்விருவரும் பாடிய தேவாரப் பாடல்கள் முதல்று திருமுறைகளாகத்தொகுக்கப்பட்டுள்ளன.



எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரதுபாடல்கள் ஏழாம் திருமுறையாக அமைக்கப்பெற்றுள்ளன.
சுந்தரர் பாடல்களில் நமக்கு இன்றுகிடைத்திருப்பவை 1026. அவருடைய பாடல்களில் துறவும் உலக
வெறுப்பும் காண்பதற்கு அரியவை.
சிவனடியார்களின் திருத்தொண்டுகளையும் , பக்தித் திறங்களை உலகம் அறியச்செய்ய பெருமை சுந்தரருகே
உரியதாகும். முதலில்
திருத் தொண்டர்த் தொகையைப் பாடித்தில்லை வாழ் அந்தணர் முதலாக நாயன்மார்களை அறிமுகம் செய்து
வைத்தவர் இவரே.பின்னர் , நம்பியாண்டவர் நம்பி" திருத்தொண்டர் புராணம் " பாடவும் மூல முதற்பொருளாய்
அமைந்தது.
இறைவனிடம் தோழமை நெறியில் வேடிக்கையாக விளையாடிப் பாடி பரவுகிறார்.
திருகடைக்காப்பில் தம்மையும் தமது தமிழையும் அத்தமிழையும் ஓதுவார் பெறும் பயனையும் உரைக்கும்
பகுதிகளும் சுந்தரரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றன.
" உலோபியை வள்ளல் என்றும் கல்லாதவனைக் கல்வியில் வல்லவன் "
என்றும் , பொய்யான வாழ்வுடைய செல்வனைப் புகழ்ந்து பாடாதீர்கள் என்று புலவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்
சுந்தரர். இடர் நீங்கி இன்பமாய் வாழவேண்டுமானால் சிவபெருமானைப் பாடுங்கள் என்கிறார்.

இன்று இளைஞர்கள் பலர் நவீன மோகங்கொண்டு மேலை நாட்டுத் தாக்கத்தால் தகாத வழிகளில் சென்று
தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள்.அறிவியல் , பொருளியல் துறைகளில் மேலை நாட்டவர்
அடைந்துள்ள வளர்ச்சியைப் பின்பற்றுவதில் தவறில்லை.னால் பண்பாட்டுத் துறையில் - அறநெறியில் தமிழன்
கண்டுள்ள ஒப்புயர்வற்ற நெறிகளை கடைபிடிக்கவேண்டும்.அறநெறி கோட்பாடுகளை வழுவாது கடைபிடிக்க
திருக்குறள் போன்ற அறநூலும் , திருமுறைபோன்ற சமய நூல்களையும் நம்
இளையர்கள் படித்து வாழ்வாங்கு வாழவேண்டுகிறேன்.

அன்புடன்,
கிருஷ்ணன்


------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications