From jayabarathi Sun May 23 03:59:25 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 7994 invoked by uid 7770); 23 May 1999 10:59:23 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 23 May 1999 10:59:23 -0000
Received: from umlugghc ([202.188.69.223]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990523105921.HVJS5243@umlugghc> for ; Sun, 23 May 1999 18:59:21 +0800
Message-Id: <3.0.3.32.19990523011608.007bb640@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 23 May 1999 01:16:08 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Mime-Version: 1.0
Subject: [agathiyar] vegetarianism#3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 550


அன்பர்களே,

இந்த பதிலை நேற்றே முழுமையாக எழுதிவிட்டேன். அதனை வெட்டி
ஒட்டும்போது "பசக்"கென்று மறைந்துவிட்டது. இவ்வாறு எழுதிமுடித்தபிறகு
மறையும் எட்டாவது மடல் இது. பூராவையும்மீண்டும் டைப் அடிக்கவேண்டி
யுள்ளது. என்ன செய்வது? என்னிடம் இதற்கெல்லாம் ஆள் அம்பு சேனையா
இருக்கிறது? ஒரு கையால் - அதுவும் ஒரு விரலால் பெரும்பாலும் அடிப்பது;
சில சமயங்களில் இடது கை நடுவிரல் உதவும். "ஒரு கை" என்றதும் காளிதாசன்
கவிதை ஞாபகத்திற்கு வருகிறது. சாமிநாதன், முன்பொரு தடவை ஏதோ
"ஏக ஹஸ்த்தே கிம்திதே" என்ற மாதிரியாக என்னவோ சொன்னமாதிரி
நினைவு இருக்கிறது.

உண்மையான சைவம் என்றால் என்ன?
அதைப் பற்றி பேசுமுன்பாக உங்களிடம்ஒரு புதிர் போடுகிறேன்.
அடுத்து தொடரலாம்.

முதற்கட்டம்:

பிற்கால சோழர்கள் தீவிர சிவவழிபாட்டினர்; ஆழ்ந்த சிவபக்தி
யுடையவர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னாலேயே கோச்செங்கணான்
என்பவர் காவிரிக்கரையில் எழுபத்திரண்டு சிவாலயங்கள் கட்டியிருக்கிறார்.
பல்லவ பாண்டிய பேரரசர்கள் சமணர்களாக விளங்கி, அந்த சமயத்தையே
ஆதரித்து வந்த காலத்தில்கூட சோழர்கள் சிவமதத்தைச்சேர்ந்தவர்களாகத்
தானிருந்திருக்கின்றனர்.
அப்பர் தன்னுடைய சிவப்பணியைத் தொடங்கிய காலத்திலேயே,
அவருக்கு பழையாறையைச் சேர்ந்த சோழமன்னன் ஒருவன் ஆதரவு
கொடுத்துள்ளான். அதன்பின்னர், பாண்டியநாட்டில் மீண்டும் சிவமதம்
தழைக்கச்செய்ய சம்பந்தரை அங்கு அழைப்பித்ததுவும் பாண்டிமாதேவியாக
விளங்கிய "வளவர்கோன் பாவை"மங்கையற்கரசியார்தான்.
விஜயாலயசோழர் வழிவந்தவர்களில்அவருடைய கொள்ளுப்பேரர்
கண்டராதித்த சோழர் ஒரு பெரும் சிவனருட்செல்வர். அவருடைய
"திருவிசைப்பா" ஒன்பதாம் திருமுறையில் திகழ்கிறது.
அவருடைய மனைவியார் செம்பியன்மாதேவியார் ஒரு சிவப்பழம்.
கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயரின் பேரர்தான் அருண்மொழிவர்மர் எனப்படும்
ராஜராஜசோழர். இவரை தீவிர சிவப்பற்று மிக்கவராக செம்பியன்மாதேவியார்
வளர்த்துவிட்டார்.
ராஜராஜர் ஆட்சியில் செய்த முக்கியகாரியங்களில் இன்றும்
பெருமை குன்றாமல் திகழ்வது அவர் தேவார திருமுறைகளைத் தில்லையிலிருந்துநம்பியாண்டார் நம்பியைக்
கொண்டு வெளிப்படச்செய்ததுதான். பின்னர்
நம்பியுடன் அறுபத்து மூன்று நாயன்மார்களின் மரபில் உதித்த பாணப்பெண்மணியின் உதவியுடன்
தேவாரப்பதிகங்களுக்கு பண்ணடைவு செய்வித்தார்.
அன்று நிலவிய சிவசமய இஅருட்பாடல்களைத் திரட்டசெய்தார்.
நம்பி அவற்றையெல்லாம் திருமுறைகளாகத் தொகுத்தார்.
தனது சொந்த வழிபாட்டிற்காக "தேவார தேவர்" என்ற பெயரில்
ஒரு சிவமூர்த்ததை நிறுவி அனுதினமும்தேவார திருமுறைகளை ஓதி வழிபாடு
செய்துவந்தார். பிரம்மாண்டமான சிவாலயம் ஒன்றை எழுப்பி, பெரும் கோயில்கள்
கட்டும் மரபையும் அங்கு தேவாரப்பதிகங்கள் ஓதும் மரபையும் நிறுவினார்.
சிவாலயங்கள் சமுதாய மையங்களாகத்திகழுமாறு ஏற்பாடு செய்தார்.
அவருடைய மகன் ராஜேந்திர சோழர்,கங்கைகொண்ட சோழபுரத்தில்
மிகச்சிறப்பான அமைப்புக்கொண்ட பெரும் சிவாலயம் எழுப்பினார்.
அக்கோயிலுக்கும் சித்தர் கருவூர்த்தேவர் திருவிசைப்பா ஒன்றை பாடியுள்ளார்.
அதனையும் உடனிருந்த நம்பியாண்டார்ஒன்பதாம் திருமுறையில்
சேர்ப்பித்து விட்டார்.
பின்னர் முடிவாக பதினோரு திருமுறைகளாக தொகுப்பை
நம்பியாண்டார் பூர்த்தி செய்தார். அதேவடிவில் அவை அடுத்து நூற்று
இருபது ஆண்டுகளுக்கு விளங்கின. ஐந்துதலைமுறைகளைச்சேர்ந்த
எட்டு சோழர்கள் ஆட்சி கழிந்து ஆறாவதுதலைமுறையில் ஒன்பதாம்
சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கனுடைய முதலமைச்சர்
சேக்கிழார் பெருமான், "திருத்தொண்டர்புராணம்" என்னும் இயற்றினார்.
அதனுடன் சேர்ந்து திருமுறைகள் மொத்தம்பன்னிரெண்டாகின.
அப்படியே இன்றளவும் நிலவுகின்றன.திருத்தொண்டர் புராணத்தின்
சுவடிகளையும் சேக்கிழார் பெருமானையும் யானைமீதேற்றி
அரங்கேற்றத்திற்காக தில்லைக்கோயிலுக்கு குலோத்துங்கன் கொண்டு
வந்தான். அப்போது சேக்கிழாரின் பின்னால் யானையின் அம்பாரியின்மீது
நின்றுகொண்டு அவருக்குக் கவரி வீசினான்.
(அந்தக் காலங்களில் இப்படியெல்லாம்மரியாதை இருந்தது.
அதைப் பற்றியொரு குறுங்கதை அடுத்துசொல்கிறேன். இவற்றையெல்லாம்
"Tamilian Sagas" என்ற தலைப்பில் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்).
இவர்கள் எல்லாருமே தீவிர சிவமதத்தவர்; ஆழ்ந்த சிவப்பற்று
மிக்கவர்கள். சிவனையே முழுமுதற்பொருளாககொண்டவர்கள்.
சிவவழிபாட்டை முனைப்புடன் செய்தவர்கள். சிவமதம் தழைப்பதில்
பெருந்தொண்டாற்றியவர்கள்.
சோழர்கள் காலத்தில் சில சீனத்தூதுக்குழுக்கள் சோழர்களின்
தலைநகருக்கு வந்தன. அவர்களில் ஒரு தூதுவர் சோழமன்னர் தந்த
விருந்தைப் பற்றியெழுதியிருக்கிறார்.
"....He(the Prince) does not drink wine, but he eats meat,
and, as is the native custom, dresses in cotton clothing and eats flour
cakes."
அவர்களெல்லாம் மாமிச உணவு சாப்பிட்டவர்கள்தாம்.

இரண்டாம் கட்டம்:

அடார்ல்ஃப் ஹிட்லர் பெரும்போராட்டங்களுகிடையில்
ஜெர்மனியின் பெருந்தலைவராகியவர்.அவருக்கு ஓர் அக்காள் மகள்.
அவளை ஹிட்லர் மிக ஆழமாகக் காதலித்தார். பேய்க்கோபவெறி கொண்ட
ஹிட்லரை அவளுடைய கனிவு ஒன்றே இந்தஉலகத்தில் கட்டுப்படுத்தக்
கூடியது.
ஆனால் அந்தப் பெண் இளவயதிலேயேஇறந்துவிட்டாள்.
அவளுடைய இழப்பைத் தாங்கிக்கொள்ளஹிட்லரால் இயலவில்லை.
தற்கொலை செய்துகொள்ள நினைத்த ஹிட்லரைத் தடுத்தவர்கள்
அவருடைய நெருங்கிய நண்பர்களான ஹெஸ்ஸும் கெரிங்கும்தான்.
அவளுடைய நினைவாக ஹிட்லர் அன்றிலிருந்து மாமிசம்
சாப்பிடுவதை விட்டுவிட்டார். திருமனத்தைப் பற்றியும் நினைக்கவே
இல்லை.
தான் சாவதற்கு சில மணி நேரத்துக்குமுன்னரேயே அவர்
எவா ப்ரானைத் திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் தனது மரக்கறி உணவைமட்டும் இறக்குமட்டும்
விடவேயில்லை. அவருடைய கடைசி உணவுமரக்கறி உணவுதான்.

இப்போது சொல்லுங்கள்.
இவர்களில் சைவம் யார்?
சோழரா? ஹிட்லரா?

அன்புடன்

ஜெயபாரதி

===================================================





















------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications