From Mon May 24 18:35:35 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 177 invoked by uid 7770); 25 May 1999 01:35:32 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by vault.egroups.com with SMTP; 25 May 1999 01:35:32 -0000
Received: from jaring.my (j20.byb34.jaring.my [161.142.146.34]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id JAA23498; Tue, 25 May 1999 09:34:58 +0800 (MYT)
Date: Tue, 25 May 1999 09:34:58 +0800 (MYT)
Message-Id: <199905250134.JAA23498@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 123
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 567

கன்பர்களே,

சைவ அறிஞர்களாலும் சித்தப்பெருமக்களாலும் போற்றப்பட்ட ஓர் விசயம்: சிவதத்துவங்களாகிய நாத விந்து
அடிப்படையில் உலகத்து அனைத்தையும் அலசி தெளிவதாகும். இந்த நாத விந்துநர்த்தனமே எங்கெங்கும் காணக்
கிடக்கும் சிவத் தாண்டவமாகும். நாதத்து சிவன் விண்ணென்றால், வைந்தவ சக்திமண்ணாகும். நாதம்
அனைத்தையும் துறந்து மேலே மேலே செல்லும்படியான ஓர் ஊந்தலைத் தந்து கொண்டே இருக்க, விந்துவின் பெண்மை
கீழேக் கீழே இழுத்த வண்ணம் செயல்பட்டுதன்னையேத் தான் அகழ்ந்து ஆயச் செய்கின்றது. இது அச்சம் தரும்
ஒன்றுமாகும். உள்ளக் குகையில் ஒளிந்துகொண்டிருக்கின்ற கள்ளக் கபட உருக்களைக் காண இயல்பாகவே ஓர்
அச்சம். தன்னைப் பற்றியே தான் கொண்டிருக்கின்ற ஓர் மிதப்பான எண்ணத்திற்குமரணம் கொண்டு வருவதால்
இது. மேலும், வீழ்ந்து இந்த உலக பந்தத்தில் மீண்டும் மாட்டிக் கொண்டு அவதிபடவேண்டுமா என்றோர் அச்சம்.
தப்பித்து தன்னைதான் அகழ்ந்து ஆயாது வானத்து கற்பனைகளில் சுகமாக இச்சித்தவாறு கோட்டைகள் கட்டி வாழ்ந்து
மகிழலாமே என்றோர் எண்ணம். இப்படிதவிக்கின்ற தவிப்புக்களின் வெளிப்பாடாகவே சமயவாழ்க்கையின்
வேடங்களும் விரதங்களும் பிறவும் என்றுநினைக்கின்றேன். இவையெல்லாம் தேவையா என்றோர் கேள்வியும்
எழுகின்றது. இப்படிப்பட்ட தற்காப்பு செயல்களில் ஈடுபட்டு காலத்தை விரயம் செய்வதை விடுத்து, உண்மையான
ஆய்வாகிய உள்ளத்தை அகழ்ந்து உண்மையைக் காண்பதை செய்தால் நன்மை பயக்கும் என்று நினைக்கின்றேன். ஆழுள
நுழைவுத் தேர்வுகள் இதற்குப் பெரிதும் உதவும் என்றும் நினைக்கின்றேன். சம்ய வாழ்க்கையின் அடிப்படையாக
இப்படிபட்டத் தேர்வுகளையும் கொள்ள வேன்Tஉம் என்றும் நீனைக்கின்றேன்.

இத்தகையக் கருத்துக்களோடு இன்றைய கவிதை

அன்பன் தத்துவராயன் கி.லோகநாதன்.


123. அகழ்வாய்வு


பாம்பு விரல்களின் பணிவு மொழியும்
பாய்ந்து பற்றுவதின் வரும்
பரிசச் சுகமும்
மூலக் கனல் மூட்டி
எரியும் நெருப்போடு
இதத்தின் கங்கையும் எழுந்தோடி
முதுகந் தண்டினைத் தாக்க
ஆழமூச்சுக்களின்
ஆனந்தப் பெருஞ்சுகமும்
அமுத மருந்தாகத் தருகின்ற அம்மையே!
அமுதக் குண்டத்து அன்பு மங்கையாய்
அவனியும் வந்துதித்து
தாக்கணங்காய் வரும் உன்
நோக்குகளோடு நோக்கொக்க
நோய்களோடும் ஏன் நீ வரவேண்டும்?

நெஞ்சினைப் பிளந்து நீடு நீடு உட்சென்று
உயிரின் அந்தரங்க அறையில்
அலைந்து திரியும் அம்மையே
வேதனைகளையும் தந்து நீ ஏன்
விளையாடவேண்டும்?

உயிரைப் பிடித்திழுத்து
உம்பர் செலாத் தடுத்து
உணர்வின் இருள் குகைக்குளிழுத்து
அகழ்வாய்வு செய்ய எனை யாண்டும்
அழைகின்றாயே ஏன்?

உனக்கஞ்சி ஓடுவார் உடுக்கின்றார்
காவியோடு காய்ந்த அக்கமாலை
கவசப் பெருங்கோட்டையாகக் கண்டு
உணர்வின் கிளர்ச்சிகளை ஒடுக்க
உண்கின்றார் சுத்தபோசனம்
தரிக்கின்றார் பற்பல சமயவேடங்கள்
தாக்கணங்கைக் கொல்ல தகும்
போர்கருவிகள் இவையென!

வீழ்ச்சிக்கும் அஞ்சும் விபரீதங்களாய்
விளையும் இவற்றால் விளையா
அஞ்சாது உனை அணைப்பதின் வரும்
அவதியெல்லாம் போக்கு அற்புத
சிவஞானம்
அறிந்திதை அணைப்பேன் உனை
அஞ்சாது!


------------------------------------------------------------------------

eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
http://www.egroups.com - Simplifying group communications