From Krishnan Tue May 25 05:36:17 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 31566 invoked by uid 7770); 25 May 1999 12:36:15 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by vault.egroups.com with SMTP; 25 May 1999 12:36:15 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id UAA18477; Tue, 25 May 1999 20:36:14 +0800 (SGT)
Received: from default (ppp28.dyn70.pacific.net.sg [210.24.70.28]) by pop1.pacific.net.sg with SMTP id UAA21195; Tue, 25 May 1999 20:36:11 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990525203225.0084a530@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Tue, 25 May 1999 20:32:25 +0800
To: Tamil-Hinduism@...
From: Krishnan
Cc: tamil@..., agathiyar@egroups.com
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Uththiraasam #2
Content-Type: text/enriched; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 582



ffff,0000,0000

" உத்திராட்சம் "#2



^^^^^^^^^^^^^^^^



ffff,0000,0000 ஒரு முகம் [
ஏகமுக] உத்திராட்ச சிவன் என்பர். இதனை அணிந்தால்

பிரம்ம வாதன-பாவம் நீங்கும்என்பார்கள்.



இருமுக உத்திராட்சத்தினை சிவ சக்தி , - கவுரி சங்கர்
என்றும்

சொல்வார்கள். இரு முக உத்திராட்சம் , மந்திரதந்திர சக்தி கொடுக்கும்-

கொலைப் பாவம் போம்.



மும்முகம் அனலைக் குறிக்கும். வினை தீரும், அதிர்ஷ்டத்தையும்

கொடுக்கும் என்பர்.



நான்முகம் அதிதெய்வம். பாவம் தீரும் ,எதிர்பாலிரை ஈர்க்க உதவும்.



ஐம்முகம் தீங்கு தீரும், பிரச்சனைக்கும்தீர்வு காணும்.



ஆறுமுக உருத்திராட்சத்திற்க்கு அதிபதி ஆறுமுகனே. பிரவதை பாவ

நிவர்த்தியையும் கொடுக்கும்.



ஏழு முக உருத்திராட்சத்திற்கு ஈசன் நாகேசன் ; அபாயத்திலிருந்து

காக்கும்.



எட்டு முக உருத்திராட்சத்திற்க்கு உரியவர் விநாயகர்; திருட்டுக்

குற்ற பாவம் தீரும்.



ஒன்பது முக உருத்திராட்சத்திற்க்கும்தெய்வம் வயிரவன்; இதை

அணிந்தால் கொலைப் பாவம்தீரும்.



பத்து முகத்திற்க்கு பதி அரி ; இதனைஅணியின் பேய் அஞ்சி நீங்கும்.



பதினொன்று [ ஏகாதாச ] இறை உருத்திரர் ; இதை பூண்டவர்க்கு

விக்கினம் நீங்கும்.



பன்னிரு முகத்திற்க்கு தேவர் ஆதித்தர்; காதில் கோத்து அணிந்தால்

ஊறுகள் போம்.

எண்ணங்கள் நிறைவேறும்.



பதின் மூன்று முக உத்திராட்சத்திற்க்குதெய்வம் பரமசிவன்; இதனை

தலையில் அணிந்தால் முக்திஉண்டு.



பதினாங்கு முக உத்திராட்சம் ருத்ரநேத்திரத்திலிருந்து உண்டானது.

இதை அணிந்தால் எல்லா வியாதிகளும் போய் எப்போதும்
ஆரோக்கியமும், நலனும் உண்டாகும்.



இப்படி ஒவ்வொரு முகத்திற்க்கும்ஒவ்வொரு பலனாக உள்ளது.

உருத்திராட்சத்தை 3,4,5,6, எண்ணிகையில் வளையமாக கோர்த்து
அணிவர்,

கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54 , 108 என்ற கணக்கில் இருக்கும்.

கழுத்தில், கையில் அணியும்உத்திராட்சம் அஃகுபங்சர் போல் செயல்பட்டு

பயனளிக்க கூடியதாம்.



ஆரம்பத்தில் இந்தோஷியாவில் விளைந்த இது , இப்போது
நேப்பாளத்திலும், ஹரித்துவாரிலும் பயிராகிறது. நேப்பாளத்தில் பசுபதிநாத்
கோயிலில்

உத்திராட்ச மரம் ஓரளவு நங்கு வளர்ந்த மரத்தினை பார்த்தேன். ஆனால்,

காய்களை இல்லை.



அபூர்வமான இந்த உருத்திராட்சத்துக்குகிராக்கி அதிகம். இதன் மகிமை

உணர்ந்து, மரத்திலால் செதுக்கிய போலிகளும், அரக்கினால் உருக்கிய

போலிகளும் விற்பனையில் நிறைய உள்ளது.

[ நண்பர் ஒருவர் ரிஷிகேசத்தில் ஒருஉத்திராட்சம் வாங்கி நீண்டநாள்

அணிந்திருந்தார். ஒருநாள் உடம்பு வலிஎன்று நல்ல உடல் தாங்கும்

அளவு சுடுநீரில் குளித்தார். குளித்தப்பின் அவரது உருத்திராட்சமும்

உருகிவிட்டது. அரக்கிலால் செய்தது.கூடுதலான சுடுநீர் பட்டதும்

உருகிவிட்டது ]



உருத்திராட்சம் வாங்கினால் அது குறித்து அறிந்தோர், விபரம் தெரிந்தோர்

மூலம் வாங்கவும்.

போலியா , நிஜமா என்று அறியஅதனை தண்ணீர் போடவும்.

மூழ்கினால் அசல், மிதந்தால் நகல்!



மற்றவை நாளை பார்க்கலாம்...



ffff,0000,0000அன்புடன்,

கிருஷ்ணன்