From Palaniappan A Thu Sep 9 04:36:13 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 27597 invoked from network); 9 Sep 1999 11:39:04 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qh.egroups.com with SMTP; 9 Sep 1999 11:39:04 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id TAA21971 for ; Thu, 9 Sep 1999 19:39:02 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp231.dyn91.pacific.net.sg [210.24.91.231]) by pop1.pacific.net.sg with SMTP id TAA20643 for ; Thu, 9 Sep 1999 19:38:59 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990909191935.01aa6730@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Thu, 09 Sep 1999 19:19:35 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <00ac01befa58$01e7ff40$b2ab15a5@sanjay01>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Some names-laughable
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1934

இஅன்புடையீர்,
வணக்கம். வழக்கம்போல டாக்டர் JB அவர்கள் தனக்கே உரித்த பாணியில் எழுதி நம்மை எல்லாம்
அசத்தியுள்ளார்.

காந்தி உணவகம்
**************
பற்றி திருமதி ஜெயந்தி எழுதினார்.சிங்கப்பூரில் உள்ள பல செட்டிநாட்டுஉணவகங்களில் இதுவும் ஒன்று.
அக்கடையின் உணவை இந்தியர்களைவிடசீனர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர். என் அலுவலகத்தில்
பணிபுரியும் சீன நண்பருக்கு அக்கடை என்றால் உயிர்.
அதைப்போலத்தான் பனானாலீப் கறிஸ்,முத்தையா உணவகம், ஏ ஒன் போன்ற உணவகங்களும் செட்டி
நாட்டுக்கடைகள்-எல்லாமே பிரபலமானவை. பனானா லீப் உணவகம் மீன் தலைக்கறிக்கு( இது சீன-இந்திய
கலப்பின், ஒற்றுமையின் எடுத்துக்காட்டு)ஆசியா நாடுகளில் பிரபலமடைந்துள்ளஒரு கடை. செல்லப்பா
என்பவரால் நடத்தப்படுகிறது. முத்தையாஉணவகத்தின் உரிமையாளர் முன்பு செட்டியார்களின் கிட்டங்கியில்
சமைத்தவர். இப்போது செட்டி நாட்டிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல
உள்நாட்டு இந்திய சீன மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. நிற்க.

சிராங்கூன் சாலையில் செல்லா விலாஸ்என்று ஒரு சைவ உணவகம் இருப்பது தெரியுமா? அங்கு பலர்
செல்லா(ர்) இருப்பினும் அங்கு பல ஆண்டுகளாகத் தொழில் நடந்துகொண்டுதான் வருகிறது. வடநாட்டுக் கடைகள்
பல உள்ளன. அவற்றின் பெயர் பெரும்பாலும் மஹால் என்று முடிவடையும். ராங் மஹால்போன்று. மஹால்
என்றால் விலை அதிகம் என்று மலாய் மொழியில் பொருள்படும். ஆகவே அத்தகையகடைக்குப் போகும் முன்னர்
உன்னால் அக்கடையில் எனக்கு சாப்பாடுவாங்கித்தரமுடியுமா என்று வேடிக்கையாகக் கேட்பதுண்டு.

இங்குள்ள பல சாலைகளின் பெயர்களை பழைய தலைமுறையினர் வேடிக்கையாகச்சொல்வதுண்டு. North Bridge
Roadஇ என்பதை நாக்குப் பூச்சி ரோடு என்றும், Havelock Roadஇ என்பதை அவளுக்கு ரோடு என்று
சொல்வார்களாம்.

மலேசியாவில் மங்கிலிஷ் இருப்பதுபோல சிங்கப்பூரில் சிங்கிலிஷ் நடப்பில் உள்ளது. அதனைஅடிப்படையாகக்
கொண்டு ஒரு நகைச்சுவை நாடகத் தொடர்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. மிகவும்
பிரபலமடைந்துள்ள நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று. ஆனால் அது பல சீன,ஏன் வழக்கமாக நல்ல ஆங்கிலம்
பேசும் இந்தியர்களையும் பாதிக்கத்தொடங்கிவிட்டதால், நல்ல ஆங்கிலம் பேசுங்கள் என்ற ஓர் இயக்கத்தை
அரசாங்கம் அடுத்த ஆண்டு முதல் நடத்தத்திட்டமிட்டுள்ளது என்பதை அண்மையில் சிங்கப்பூர் பிரதமர்
தெரிவித்தார். அத்துடன் அந்த நகைச்சுவை நாடகத்தில் சிங்கிலிஷ் பேசும் முக்கிய கதாபாத்திரத்தை நல்ல
ஆங்கிலம் கற்றுக்கொள்ள பயிற்சி வகுப்பிற்கு அனுப்பவேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அன்புடன்
பழனி


>
>அன்புடன்,
>ஜெயந்தி
>-----Original Message-----
>From: jaybee
>To: agathiyar@egroups.com
>Date: Wednesday, September 08, 1999 11:23 PM
>Subject: [agathiyar] Some names-laughable
>
>
>>
>>அன்பர்களே,
>>
>> மலேசியாவில் சில பெயர்களும் சிலபெயர்களை உச்சரிக்கும்
>>உச்சரிக்கும்விதமும் வேடிக்கையாக இருக்கும்.
>>
>> கோலாலும்பூரில் புக்கிட் பிந்த்தாங்என்னும் இடம் இருக்கிறது.
>>அங்கு ஒரு தனியார் மருத்துவமனையின்பெயர்ப்பலகை எப்போதுமே
>>கவனத்தை ஈர்க்கும்.
>> "Chin Ear Nose Throat Clinc" என்று எழுதியிருப்பதைக்
>>காணலாம்.
>> "யென்னடாயிது? தொண்டை,காது,மூக்குவைத்தியத்தைத்
>>தான் ENT என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தாடைக்குமா வைத்தியம்?
>> தாடையில் அப்படி என்னதான் ஸ்பெஷலிஸ்ட் வைத்தியம் பண்ண
>>வேண்டியிருக்கும்? ஒருவேளை தாடையில்ப்லாஸ்டிக் சர்ஜரி செய்கிறாரோ?"
>>என்றெல்லாம் குழம்பவைக்கும்.
>> ஒன்றுமில்லை. அந்த டாக்டரின் பெயர்Chin Boon Kheng. Chin
>>என்று சீன வழக்கப்படி தன்னுடைய surnameஐவைத்து Chinஉக்குச்
>>சொந்தமான Ear Nose Throat Clinic என்றுஎழுதிவைத்திருக்கிறார்.
>>
>> கோத்தா பாரு என்னும் ஊரில் இருக்கும்போது அங்கிருந்த இளைஞர்
>>இயக்கத்தின் தலைவர் ஒருவர், "நான் எப்போதும் மலேசியா டெய்லரிடம்
>>மட்டுமே தைத்துக்கொள்வது. ஏனெனில் அவன் தான் பெயர்ப்பலகையில்
>>தமிழில் எழுதியிருக்கிறான்". என்றார்.
>> "அப்படியானால் நீங்கள் பக்கத்துக் கடையில் அல்லவா தைக்கவேண்டும்?
>>அந்த சீனன் தான் அசல் தமிழிலேயேபெயர் வைத்திருக்கிறான்" என்றேன்.
>> "அப்படியா? இது நாள்வரை தெரியாதே?அது யாரவன்?" என்று
>>கேட்டார்.
>> "Poh Wah Tailors", என்று சிரிக்காமல் சொன்னேன்.
>>
>> ஒரு தமிழர். அவருக்கு தமிழ் சரளமாகப் பேசவராது.ஆனால் தமிழ்
>>நன்றாகப்புரியும். ஒருநாள் வந்து,
>> "I say, Doc! You should hear this. I heard a China man
>>talk beautiful Tamil in the radio-lah. Really suprised-lah boss.
>>How one Chinaman can talk so well? He was talking about
>>Thirukural, you know-ah, boss?"
>> எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. செக்நாட்டினர், ஃபின்லாந்துக்காரர்,
>>பிரெஞ்சுக்காரர்களாக உள்ள சிலதமிழாய்வாளர்கள் தமிழ் பேசுவது
>>அறிந்திருக்கிறேன். ஆனால் சீனர் தமிழில் சரளமாக...... அதுவும்
>>திருக்குறளைப் பற்றி ரேடியோவில்பேசுவதாவது?
>> ஆகவே கேட்டேன், "Really-ah? Never heard-lah about
>>Chinaman talking Tamil like that! Do you remember his name?"
>> "Yah-lah boss. Sure. His name was Kee Ah Pey or
>>something like that."
>> "அடப்பாவி. கி.ஆ.பெ.விசுவநாதத்தையே சீனராக்கிவிட்டாயே!"
>>என்று மனதில் நினைத்துக்கொண்டு, "Oh! He isa Tamil alright.
>>His name is Visvanathan. His initials are K.A.P. In Tamil
>>they become Kee Aa Pey. He is always addressed by his
>>initials only."என்றேன்.
>> "Can't blame me-lah, boss. There are Chinese names
>>like that also",என்றார்.
>> "There may be. But the Chinese will never give that
>>type of name. Because, in Chinese, it would mean different.
>>It will mean, "Old devil" or "Devilish old man".
>>
>> கிளந்தான் என்னும் மாநிலத்தின்மலாய்க்காரர்கள் பேசுவது மிகவும்
>>வித்தியாசமாகயிருக்கும். அவர்கள்பெயர்களைச் சுருக்கிவிடுவார்கள்.
>> ஒருமுறை ஒரு நர்ஸ் பழங்கள் வாங்கிவைத்திருந்தாள். மருத்துவமனை
>>ஊழியர்கள் சிலருக்கு தோப்பு துரவு இருக்கும். அங்கிருந்து பழங்கள்
>>கொண்டுவந்து மற்ற ஊழியர்களிடம் விற்பார்கள் .
>> நான் அவளிடம்,"Oi, How much you buy fruit?" என்று
>>கேட்டேன்.
>> "Wan dollah" என்றாள்.
>> "Aiyaaah! I din ask who sell the fruit. How much?"
>> "Yah-lah. I tol you, wan dollah."
>> "No. The price. Harga. Harga." என்றேன்.
>> "Yaah-laaah! Its price, wan dollah. So' riyal."
>> அப்போதுதான் தெரிந்தது One Dollar என்பதைத்தான் அவள்
>>அவ்வளவு அழகாக "wan dollah" என்று உச்சரித்திருக்கிறாள்.
>>Abdulla என்னும் பெயரைச் சுருக்கி Dollah என்பார்கள். Wan Dollah
>>என்பது ஆசாமியின் பெயர். Riyal என்பதுகிளந்தானில் ரீங்கிட் பணத்தைக்
>>குறிக்கும். Satu என்பதை so' என்றே சொல்வார்கள்.
>> கிளந்தானின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மலேசியாவின்
>>முன்னாள் நிதிஅமைச்சராக இருந்தார்.அவருடைய பெயர் Tengku Razali
>>Hamzah என்பது. அதனைச் சுருக்கி "Ku Li" என்றுஅழைப்பார்கள்.
>>கிளந்தான் தமிழர்கள் அந்தப்பெயரைஅப்படிச் சொல்ல கூச்சப்படுவோம்.
>>ஏனெனில் தமிழில் "கூ லி" என்றால் வேறு அர்த்தமாகிவிடுகிரது அல்லவா?
>> அவராவது பரவாயில்லை. அவருடைய பங்காளி ஒருவர் இருக்கிறார்.
>>பெயர் Tengku Radhi.
>> அந்தப் பெயரைமட்டும் தமிழர்களாகிய நாங்கள் மறந்தும் சுருக்கிச்
>>சொல்வதில்லை.
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
>>
>>================================================================
>>
>>
>>
>>
>>
>>
>>------------------------------------------------------------------------
>>MyPoints-Free Rewards When You're Online.
>>Start with up to 150 Points for joining!
>>http://clickhere.egroups.com/click/805
>>
>>
>>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>>http://www.egroups.com - Simplifying group communications
>>
>>
>>
>
>
>------------------------------------------------------------------------
>MyPoints-Free Rewards When You're Online.
>Start with up to 150 Points for joining!
>http://clickhere.egroups.com/click/805
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>