From Vassan Thu Sep 9 07:42:24 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12805 invoked from network); 9 Sep 1999 14:45:15 -0000
Received: from mailer.cia-g.com (207.66.82.36) by qg.egroups.com with SMTP; 9 Sep 1999 14:45:15 -0000
Received: from default (gup-040-dpm1.cia-g.com [207.66.82.104]) by mailer.cia-g.com (8.8.8/8.8.5) with SMTP id IAA23811 for ; Thu, 9 Sep 1999 08:45:04 -0600 (MDT)
Message-Id: <3.0.6.32.19990909085525.0079b620@...>
X-Sender: vishnu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 09 Sep 1999 08:55:25 -0600
To: agathiyar@egroups.com
From: Vassan
In-Reply-To: <3.0.3.32.19990909191935.01aa6730@...>
References: <00ac01befa58$01e7ff40$b2ab15a5@sanjay01>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Some names-laughable
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1935


At 07:19 PM 09/09/1999 +0800, Palaniappan A wrote:
>இஅன்புடையீர்,
>வணக்கம். வழக்கம்போல டாக்டர் JB அவர்கள் தனக்கே உரித்த பாணியில் எழுதிநம்மை எல்லாம்
>அசத்தியுள்ளார்.
>
>காந்தி உணவகம்
>**************
>பற்றி திருமதி ஜெயந்தி எழுதினார்.சிங்கப்பூரில் உள்ள பல செட்டிநாட்டுஉணவகங்களில் இதுவும் ஒன்று.
>அக்கடையின் உணவை இந்தியர்களைவிடசீனர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர். என் அலுவலகத்தில்
>பணிபுரியும் சீன நண்பருக்கு அக்கடைஎன்றால் உயிர்.
>அதைப்போலத்தான் பனானாலீப் கறிஸ்,முத்தையா உணவகம், ஏ ஒன் போன்ற உணவகங்களும் செட்டி
>நாட்டுக்கடைகள்-எல்லாமே பிரபலமானவை. பனானா லீப் உணவகம் மீன் தலைக்கறிக்கு( இது சீன-இந்திய
>கலப்பின், ஒற்றுமையின் எடுத்துக்காட்டு)ஆசியா நாடுகளில் பிரபலமடைந்துள்ளஒரு கடை. செல்லப்பா
>என்பவரால் நடத்தப்படுகிறது. முத்தையாஉணவகத்தின் உரிமையாளர் முன்பு செட்டியார்களின் கிட்டங்கியில்
>சமைத்தவர். இப்போது செட்டி நாட்டிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல
>உள்நாட்டு இந்திய சீன மக்களுக்குவரப்பிரசாதமாக விளங்குகிறது. நிற்க.
>
>சிராங்கூன் சாலையில் செல்லா விலாஸ்என்று ஒரு சைவ உணவகம் இருப்பது தெரியுமா? அங்கு பலர்
>செல்லா(ர்) இருப்பினும் அங்கு பல ஆண்டுகளாகத் தொழில் நடந்துகொண்டுதான் வருகிறது.

[நறுக்]

நண்பர் சிங்கை பழனி

வணக்கம்.

உங்களூர் வழியாக என் தூய(!)சைவ தங்கைஒருவரை அழைத்துக்
கொண்டு சென்னை சென்றேன் ஒருமுறை.சிராங்கூன் சாலை பகுதியில்,
பசிவேளையில் அருகில் இருக்கும் இந்திய உணவம் எது என்று பார்த்ததில்
Banana Leaf என்றொரு பெயர் பலகை தெரிந்தது.

நிச்சயம் தலைவாழை இலையில் சைவ உணவு உண்ண போகிறோம்
என்று கிட்ட தட்ட நாக்கை சப்புகொட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தோம்.
[21 மணி நேர தொடர் விமான பயணத்தில்,விமான உணவு சாப்பிட்டு நாக்கு
செத்து போயிருந்தது].

உள்ளே நுழைந்தால் ஒரு நூறு பேர்களாவதுஇருப்பார்கள் போன்று
ஜே,ஜே வென மக்கள் கூட்டம். அவனவன்கள்இலையில் எறும்பு குன்றுகள் [ant hills]
போன்று எலும்புகளை குவித்து வைத்திருக்கிறான்கள் :(

எள்ளும்,கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது என் தங்கை முகத்திலிருந்து,
அருகிலிருந்த சமையலறைக்கு போகாமலேயே :(.

அவ்வுணவக பணியாளர் ஒருவர் நாங்கள்பேசுவதை வைத்து,ஊகித்துக்
கொண்டு"இருங்கள்,இதோ வருகிறேண் என்றுசொல்லி சென்றார்".

எங்களுக்காக அருகிலிருக்கும் ஓர் வட இந்திய உணவகத்தில் போய்
மாமிசமற்ற உணவை வாங்கி வந்தார்!மதிய வேளையில்,நிறைய
வாடிக்கையாளர்கள் இருக்கும் போதும் அவர் வெளியே சென்று உணவு
வாங்கி வந்தது, என்னை நெகிழ வைத்தது!

அந்த நேரத்தில் அவர் செய்த அந்த மாபெரும் உதவி,சென்னையை சேரும்
வரை என்னை ஒரு வசைபாடலிலிருந்துகாப்பாற்றியது என்றே சொல்லலாம் :)

-----




வாசன்

கேலப்,புது மெக்சிக்கோ..அ.கூ.நா