From Thu Sep 9 15:14:44 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 25160 invoked from network); 9 Sep 1999 22:17:35 -0000
Received: from dragonfirex2.delta-air.com (HELO satlmsghub04.delta-air.com) (216.79.105.21) by qh.egroups.com with SMTP; 9 Sep 1999 22:17:35 -0000
Received: by satlmsghub04.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Thu, 9 Sep 1999 18:17:34 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C308@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Thu, 9 Sep 1999 18:17:27 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] Nithyashree Mahadevan's north american concert tour
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 1940

அன்புள்ள அகத்தியர்கட்கு
வணக்கம்.

புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர் திருவாட்டி. நித்யஸ்ரீ மகாதேவன் வடவமெரிக்கச் சுற்றுலாவுக்கு
வந்துள்ளார்கள்.

ஜீன்ஸ் திரைப்படத்தின் 'கண்ணோடு காண்பதெல்லாம்' என்னும் மிக வினிய பாடலைப் பாடியவர் அவரே.
அவர் ஆக்டோபர்த் திங்கள் முதல் இங்குச் சுற்றுவார்கள்.


அவர் "ஆண்டாள் திருப்பாவை", "பாரதியார் பாடல்கள்" மற்றும் "பாரதிதாசன் பாடல்கள்" என்று
பல சிறந்த தமிழிசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.
அவரை உங்கள் ஊரில் இசைநிகழ்ச்சிக்கு அழைத்துச் செந்தமிழ்ப்பாடல்களை இசைத்தமிழிற்
பாடுவிக்கவும். பலர் கருநாடக சங்கீதம் என்றால் தெலுங்கு வடமொழிப் பாடல்கள்தாம் நினைவுக்கு
வருவதால் அதை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். மேலும் இவர் போலும் மிகச் சிறாந்த கலைஞர்கள்
வரும்போது தமிழர் மன்றங்கள் அல்லாத சில குழுக்கள் அவரை அழைத்து மிகவும் குறிப்பாகத்
தமிழைத் தவிர பிற எந்த மொழியில் வேண்டுமானாலும் கிருதிகளைப் பாடுமாறு பட்டியல்கள்
கொடுத்துப் பாடுவிப்பர். ஒரு கச்சேரியில் தமிழைத் தவிர மராட்டி இந்தி போன்ற மொழிகளில்
பாடப் பட்டன!
கம்பராமாயணம் என்னும் தலைப்பில் கம்பனின் பாடல்கள் சுமார் 40-ஐ மிக வினிமையாகப் பாடி
ஒரு தொகுப்பை AVM நிநுவனத்தின் வழி வெளியிட்டுள்ளவரும் திருப்புகழ் மணி (?) என்னும் பட்டம்
பெற்றவருமான
மதுரைத் திரு T.N.சேஷகோபாலன் அவர்களையே அவர் பாடிய தமிழ்ப் பாடல்கள் மறந்துபோமளவு
இந்த நிலை உள்ளது; அவருடைய தொகுப்பிலிருந்து "கண்டனென் கற்பினுக்கணியைக் கண்களால்"
என்னும் சிறப்பான பாடலைப் பாட விண்ணப்பித்தும் அவர் பாடல் மறாந்துவிட்டதென்றார்;
பிறகு "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்" என்னும் அழகிய பாடலைப் பாட முடிவு செய்து
மகிழ்வித்தார். தமிழர் மன்றங்கள் அவர்கள் கச்சேரிகளை நடத்துவதில்லை யாதலால் அவருக்குத் தமிழிற்
பாட ஊக்கம் இல்லை; அவர் ஒரு பெரிய இசை ஞானி; தாளக் கணக்கிற் புலி (ஆதலாற்றான் தாளப் பேரரசன்
அருணகிரியின் திருப்புகழைப் பாடும் அரும் பணியை மேற்கொண்டு ஒளிரமுடிகிறது).

அதற்கு நேரெதிராகத் தமிழ் மன்றங்கள் இசை நிகழ்ச்சி யென்றால் பிரபலத் திரைப்
படப் பாடகர்கள் திரைப்படப் பாடல்கள் இசைக்கும் நிகச்சி யொன்றே நடத்துவர்; அவற்றிற்குப் பெருந்தொகை
செலவு செய்து பெரும்பாடு பட்டு அல்லற் படுவர்.

இது தமிழருக்குத் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெரும் இழப்பே; நாம் பெற்ற பிள்ளையை நம் கண்முன்னேயே
கடத்த வழிசெய்து வேருமொழியில் பெயர்சூடப் பட்டு வேறு மொழியில் பேசிக் கொண்டிருப்பதையும்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்; இரக்கமில்லாத குணமே யென்று சொல்ல வேண்டுமோ?. தமிழ் இனிய
மொழி யென்பதைப் புத்தகத்தில் படிப்பதைப் பார்த்து உணர வியலாமல் முழுதும் நான் நம்ப வில்லை;
இசைத் தமிழில் தேவாரம் திருவாசகம்...பாரதியார் பாடல்கள் பாபநாசம் சிவன் இயற்றித் தியாகராச
பாகவதர் இசைத்த பாடல்கள் ஆகியவற்றைக் கேட்ட பின்னர்த்தான் அக்கூற்றின் உண்மையை உணரமுடியும்; அதில்
வியப்பில்லை; தமிழர் கண்ட இசையோடு தமிழர் மொழிப் பாடல்களைப் பாடினால் அம்மொழியின் முழு
இனிமையும் மிடுக்கும் வெளி வந்தாக வேண்டுமே! உண்மையான தமிழ் அழுத்தம் (accent) அந்த இசையில்
பாடும்போடுதான் வெளிவரும்.
[கண்ணோடு காண்பதெல்லாம்..; இந்தியன் படத்தில் "டெலபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா" என்னும்
பாடலில் பெண் குரல் ஒரு மிடுக்குடன் எடுப்பாக ஒலிப்பது இந்த விளைவே";
திருவாட்டி. சுதா இரகுநாதன் பாடிப் பாரதியின் 112-ஆம் பிறந்தநாள் நினைவாக "அமுதம்"
நிறுவனத்தாரின் சின்னத்தில் வெளிவந்துள்ள பாரதியார் பாடல்கள் தொகுப்பின் இறுதியில் உள்ள "யாமறிந்த
மொழிகளிலே
...வாழிய செந்தமிழ்..." என்னும் தடம் பாரதியின் சொல் பொருட் செறிவுடன் மிகவும் இனிமையாக
ஒலிக்கிறது... "...ஊமையராய்க் குருடர்களாய் வாழ்தல் நன்றோ....ஒரு சொற் கேளீர்" என்னும் இடம்
நம்மை உண்மையிலேயே முன்னிறுத்தி இனிமையாகத் திட்டி வினவுவதுபோல் தோற்றுவிக்கிறது..பின்னர்
"..தெருவெல்லாம் தமிழ்முழக்கம் .செழிக்கச் செய்வீர்" என்று ஆணையிட்டு "வாழிய செந்தமிழ் வாழ்கநற்
றமிழர்" என்று தாளத்துடன் குதூகலமாக வாழ்த்திப் பாடி முடிவடைகிறது. [எச்சரிக்கை: அத்தடத்தின்
முதற்பகுதி தாளமின்றி (மத்தளமின்றி) விருத்தமாக (அதாவது பண்மற்றும் தோன்ற) பாடப் படும்...5
நிமிடங்களுக்கு..சிறிது பொறுமையுடன் ஒவ்வொரு எழுத்தையும் சொல்லையும் கேட்டுச் சுவைக்கத் தயாராய்
இருக்கவும்! சில தடவை கேட்டபின்னர் அப்பகுதிதான் அத்தட்டிலேயே மிகவும் படித்ததாக
மாறிவிடும்...பிறகு ஆயிரம் தடவை கேட்டாலும்
சலிக்காது]

.

பல தமிழ் நண்பர்கள் என்னிடம் உள்ள தேவாரம், திருவாசகம், திருப்பாவை, சுப்பிரமணிய பாரதியாரின்
பாடல்கள், கோபால் கிருட்டிண பாரதியாரின் நந்தனார்ப் பாடல்கள், பாபநாசம் சிவனின் பாடல்கள் உள்ள
தட்டுகளையும் நாடாக்களையும் கேட்டு இன்பமும் வியப்பு மடைகின்றனர். எனவே இஃதோர் அறிமுகப் பிரச்சினை
யென்பது தெளிவு. மேலும் முன்பே சில முறை குறிப்பிட்டதுபோல் கருநாடக இசை யென்பது இசைத்தமிழே
(துல்லியமாக சொன்னால் சங்கக்கால இசைத்தமிழின் கூறு) என்பதை அறியாமல் அது வேற்றுப் புலத்தி னின்றும்
தோன்றித் தமிழகத்திற் புகுந்ததென வொரு கருத்துப் பிரச்சினயும் அடிப்படையில் உள்ளது. அதனாலேயே
இவ்விசைப் பாணியில் உண்மையாகவே இனிய தமிழ்ப்பாடல்களைக் கேட்டாலும் அதனைப் பல தமிழர்
விலக்குகின்றனர்.

எனவே கருநாடக இசை தமிழருடையதே என்று மக்களுக்குச் சொல்லி மனப்பான்மையை மாற்றி இக்கச்சேரிகளில்
நித்யஸ்ரீ போன்ற கலைஞர்களை அழைத்து *தமிழில் மட்டுமே* பாடுமாறு கச்சேரி அமைத்து அந்தத் தவறான
கருத்தை நீக்கவும் தமிழர் மன மகிழவும் வுதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.
இக்கச்சேரிகளின் தொடக்கத்தில் மேற்கூறிய உண்மைகளை யெடுத்துக்கூறி மனத்தைப் பின்னர்ப் பொழியும்
இசைமழையைக் கொள்ள அகலத் திறப்பிக்கவேண்டும்.

நித்யஸ்ரீ அவர்களை வரவழைக்க வேற்பாடு செய்பவர்கள்:
திருவாட்டி. பார்கவி சுந்தரராசன்
(அல்லது அவர் தந்தையார்)
திரு. வாசுதேவன்: நியூ ஜெர்சி: (732) 819-0773

[முகவுரைக்கு வேண்டிய குறிப்புகள் வேண்டுமெனில் நான் பொருளிலக்கணத்தின் படிப் பண்டைத்
தமிழர் இசைக்கு நேரம் கடவுள்களை வகுத்திருந்ததையும் பண்கள் இடப்பட்டிருந்த செந்தமிழப்
பெயர்களை மறந்து எவ்வாறு இந்நாள் வடமொழிப் பெயர்களை யேற்றன என்பதான சுருக்கமான ஆனால்
வலுவுள்ள குறிப்புகளை எழுதித் தர முன்வருகிறேன்.]


நன்றி
பெ.சந்திரசேகரன்,
அட்லாண்டா, அமெரிக்கா.