From Thu Sep 9 18:31:13 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 19456 invoked from network); 10 Sep 1999 01:34:04 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qh.egroups.com with SMTP; 10 Sep 1999 01:34:04 -0000
Received: from jaring.my (j28.sja.jaring.my [161.142.117.222]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id JAA03341; Fri, 10 Sep 1999 09:33:44 +0800 (MYT)
Date: Fri, 10 Sep 1999 09:33:44 +0800 (MYT)
Message-Id: <199909100133.JAA03341@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 228
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1941

அனப்ர்களே,

முன்னைப் பழம் பொருளுக்கும் முன்னை பழம்பொருளாகிய சிவபெருமான் பின்னைப்புதுமைக்கும் பேர்த்தும்
பெற்றியவன் ஆவன். உலக ஓட்டத்தோடு ஒட்டியும் ஒட்டாதும் நின்று காலத்திற்கேற்ற வகையில் புதுப் புது
வடிவங்களில் தோன்றியவாறு புதுமைச்சிந்தனைகளை ஊக்கியவாறும் இருக்கின்றான். அவ்வகையில் செம்மேனிச்
சிவனாகவே தோன்றி வந்துள்ள சிவபெருமான் இப்பொழுது நீலம் பூத்தத் திருமேனியோடு ஆயினும் அதே
பொழுது தட்சிணாமூர்த்தியாகவும் என்விழிக்கனவுகளில் எழுந்து என் அகத்தேபுதுக் புதுக் கருத்துக்களை
சனிப்பித்தவாறு இருக்கின்றான். திருமாலும் சங்கரனும் சரிபாதியாக விளங்கும் சங்கர நாராயண வடிவத்திற்கு
மேம்பட்டதாக இவ்வடிவம் விளங்குகின்றது. புத்தம் சமணம் வேதாந்தம் போன்ற பெண்களை ஒதுக்கும், இல்லறத்தை
துறக்கச் செய்யும் துறவறத்தை வற்புறுத்தாது, இல்லறத்தில் இருந்துக் கொண்டே ,உலகவாழ்க்கையில்
இருந்துக்கொண்டே திருமால்-இலக்குமி அருளைப் பெற்றவாறு வாழ்ந்துக் கொண்டேஆயினும் சிவஞானத்தையே
தேடும் ஓர் செம்மலாக வாழவேண்டும் என்று இவ்வடிவம் எனக்கு உணர்த்திக்கொண்டேஇருக்கின்றது. ஆயினும்
இதுவும் புதியதல்ல என்பதையும் உணர்கின்றேன். கண்ணுடைய வள்ளலார் என்பார் 14ஆம்நூற்றாண்டில் தாம் எழுதி
உபகரித்த ஒழிவில் ஒடுக்கம் என்ற அழகிய ஞான நூலில் இப்படிப்பட்ட வாழ்க்கைநெறியைத் தான் கூறிச்
சென்றார். ஆனால் அவர் நூலை இன்று படிப்பார் யாருமில்லை. காவிவேட ஆதீனங்கள்அவர் நூலை முற்றாகப்
புறக்கணிக்கின்றனர்.19ஆம் நுற்றாண்டு கடைசியில் இந்த வள்ளலார் ஆதீனமும் இல்லாது போயிற்று என்பார்
அறிஞப் பெருந்தகை மு. அருணாசலம் அவர்கள். இந்த நீலசிவனார் வடிவம் உணர்த்தும் உண்மைகள் சிலவற்றை
இக்கவிதையில் தருகின்றேன். படித்துமகிழுங்கள். சிந்தித்துத் தெளியுங்கள்.


தத்துவராயன்


228: நீலசிவனார்


உண்டு உமிழ்ந்து உலகாளும் திருமால்
தன்னுள் ஒளிந்தவா
ஒடியாது உஞற்றும்
பஞ்சக் கிருத்தியப் பரமனைக் கண்டு
அஞ்சுவது ஒழித்து அழகாக
பஞ்சாக்கர மோதி பரமனார் பத்தனாய்
எழுந்தான் எம்பிரான் திருவடிகள்போற்றி!

நீல நாரணனைத் தன்னுள் அடக்கிய
நீலசிவனாய் நெடிது வளர்ந்து
தனக்கென
புதுவடிவெடுத்துப் புகலிடமாய் நிற்கும்
புண்ணிய மூர்த்தியை
பொழுதெல்லாந் தொழுதான்
பொழுதென்பதைப் போக்க!

அந்தமில் இன்பத்து அழிவில்
வைகுண்டம் விட்டகன்று
பந்தமில் சிறப்பின் பாழ்வெளி
சிவகுண்டம் சேர்வான் பொருட்டு
சேவிக்கின்றான் சிவனை
திருவெல்லாம் தின்னத் தரும் திருமால் தன்னை
சிவப்பாக்குவென செப்பியவா!

உண்டும் உமிழ்ந்தும் மகிழ்ந்த உலக பந்தம்
உவர்ப்புத் தட்ட
என்றும் ஒன்றாய் இருக்கும் படியான
ஏணிநிலைத் தாவென்று இறைஞ்சி
ஏணிவேறில்லா ஏந்தலை
எம்பிரானென ஏத்தித் தொழுது
ஏகுகின்றான் சிவலோகம்
எல்லாம் விட்டு! ஆயினும்
அன்பெனும் அருளை ஓர் சிறிதும்
அகலாதேக் கொண்டு!

நீலம் பூத்த மேனியின்
நிமலப் பெரும்பொருள் நீலசிவனாவெழுந்து
அழியா அன்பின் அரியினை அருளின்
அணைக்கின்றான் தன்னுள் தானாய்
தங்கவுஞ் செய்கின்றான்!




------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan