From Palaniappan A Thu Sep 9 19:57:08 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28705 invoked from network); 10 Sep 1999 02:59:57 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qh.egroups.com with SMTP; 10 Sep 1999 02:59:57 -0000
Received: from pop2.pacific.net.sg (pop2.pacific.net.sg [203.120.90.86]) by snoopy.pacific.net.sg with ESMTP id KAA11095 for ; Fri, 10 Sep 1999 10:59:55 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp45.dyn78.pacific.net.sg [210.24.78.45]) by pop2.pacific.net.sg with SMTP id KAA02124 for ; Fri, 10 Sep 1999 10:59:51 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990910104021.01aaac80@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Fri, 10 Sep 1999 10:40:21 +0800
To:
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [GlobalTAMIL] Re:வங்காளம் போன பழனி (2)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1944

அன்பு நண்பர்களே,
விமான நிலையத்தை விட்டு வெளியில்வந்ததும் ஒரு கூட்டம் எங்களை மொய்த்தது.குளுகுளு அறையிலிருந்து
வெளியில் வந்து வாகனத்தில் ஏறி நாங்கள் தங்கியிருக்கப்போகும் ஓட்டலுக்குச்செல்லுவதற்கு முன்னர் அதனை
நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.நாங்கள் முகத்தைச் சுளிப்பதைப் பார்த்தஜோதிஷ், சீக்கிரம்
வாகனத்திற்குள் ஏறிக்கொள்ளுங்கள்அப்போதுதான் தொல்லையிலிருந்துதப்பித்துக்கொள்ளலாம் என்று எங்களை
அவசரப்படுத்தினார். வாகனத்திற்குள்ஏறிக்கொண்டு முகத்திலும் கைகளிலும்தடித்துப்போன இடங்களைத்
தடவிக்கொடுத்தபோது, காலரா, வாந்தி, பேதி மருந்து என்று பலவற்றையும் தூதுக்குழுவின் சார்பாகத் தூக்கி
வந்த நான் mosquito repellant கொசுக் கடி எதிர்ப்புக் கிரீமை எடுத்துவர மறந்து விட்டோமே
என்று வருத்தப்பட்டுக்கொண்டேன்.

வாகனம் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலைநோக்கி விரைந்தது. இரவு மணி பதினொன்றைத் தாண்டிவிட்டதால்
சாலைகளில் வாகனங்கள் அதிகமாக இல்லை. இருப்பினும் சாலைகளின் இருமருங்கிலும் குப்பைக்கூளங்கள்
நிறைந்துகிடந்தன. ஓட்டலுக்கு அருகில் உள்ள "ரவுண்டாணாவில்" அந்நேரத்திலும் வாகனம் சற்று மெதுவாகச்
செல்லவேண்டியிருந்தது. மனிதர்களை அமரச் செய்து இழுத்துச்செல்லும் ரிக்ஷாக்களும் ஆட்டோக்களும்
போட்டிபோட்டுக்கொண்டு ஒன்றை ஒன்றுமுந்திச்செல்ல முயற்சித்தன. அவற்றையும்மீறி எங்கள் வாகன ஓட்டுநர்
முந்திச் செல்ல முனைந்தார். அவர் ரிக்ஷாக்களையும் ஆட்டோக்களையும் மற்ற வாகனங்களையும் உராசிச்செல்லும்
அளவிற்கு தன் வாகனத்தை ஓட்டிச் செல்வதைக் கண்டபோது , விமானத்தில் பயணம்செய்தபோது ஏற்படாத ஒரு
மரணபயம் ஏற்பட்டது.

மறுநாள் மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டோம். கூட்டம் நாங்கள்தங்கியிருந்த ஓட்டலிலேயே
நடைபெற்றதால் வெளியில் செல்லுவதற்கு அதிகமான வாய்ப்புக்கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த
வாய்ப்புக்களை நழுவ விடவில்லை.
முதல் நாள் பிற்பகல் நேரத்தில் வங்காளதேசத்தின் நண்பண்-தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான்
அவர்கள் வாழ்ந்த -நாட்டின் தேசிய காப்பகங்களில் ஒன்றான-வீட்டைக்காண அழைத்துச்செல்லப்பட்டோம்.
மொத்தமாக நான்கு பெரிய பஸ்கள்(பேருந்துகள்)வழி மாநாட்டில் கலந்துகொண்டோர் அனைவரும் அங்கு சென்று
அடைந்தோம்.

பஸ்சில் உள்ளவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பிக்கொண்டிருந்தனர். கடைசிப் பஸ்சில் நாங்கள்
அமர்ந்திருந்ததால் நாங்கள் கடைசியில்தான் செல்லவேண்டும். பல வெளிநாட்டினர் வந்திருப்பதை அறிந்த
மக்கள் சாலையின் ஓரத்தில் கூட ஆரம்பித்தனர். வயதானவர்கள், சிறுவர்கள் என பலர் கூடி நின்று வேடிக்கை
பார்த்தனர். வசதியான நாட்டைச் சேர்ந்தவர்கள் குளுகுளு பஸ்சில் அமர்ந்துகொண்டுஅவர்களை வேடிக்கை
பார்ப்பதை அவர்கள் அறியவில்லை. கந்தலான கைலி, பரட்டைத்தலை, வெறிச்சோடிய பார்வை, பல நாள்
சவரம் செய்யாத முகம், காலணி இல்லாதகால்கள்-இவை அங்கு கூடிய நின்ற முதியவர்களின் பொதுவான
தோற்றமாக இருந்தது. முகத்தை மூடிக்கொண்டு நின்ற ஒரு பெண்ணின் அருகில் இரு இளம் பெண்கள் சிரித்துப்
பேசிக்கொண்டிருந்தனர். வறுமைச் சூழலிலும் சிரிக்க முடியும் என்பதை அவர்கள்உணர்த்தினர். கூட்டம் பெருக
ஆரம்பித்தும் அங்கு நின்ற போலீசார்தடிகளால் அடிக்கும் பாவனையில் பயமுறுத்தி பின் தள்ளினர்.
எப்போதாவது வந்து செல்லும் வெளிநாட்டினருக்காகத் தன் சகோதரர்களை அடித்துவிட்டு நாளை அவர்களை
மீண்டும் சந்திக்க அவர்கள் தயாராக இல்லை என்பது அடிக்கடி ஓங்கி அடிப்பதுபோலபாவனைக் காட்டிக்கொண்டும்
பின்னர் மக்களுடன் பேசிக்கொண்டும் நின்றது மூலம் தெரிந்தது.கூடி நின்றவர்களின் பின்னால் சற்றுத் தள்ளி
சில மரங்கள், அவற்றிற்குப் பின்னால்நீர்த்தேக்கம் ஒன்று. நீர்த்தேக்கத்தின்ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த
பெஞ்சு ஒன்றில் ஆடவன் ஒருவன் சட்டையின்பொத்தான்களைக் கழட்டிவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்த
பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான். அவர்களின் அருகில் நின்று கொண்டிருந்த பதின்ம வயதுப்பையன் பொறுமை
இழந்து இருவரையும் அழைத்துக்கொண்டிருந்தான். எந்த நிலாயில் வாழ்ந்தால் என்னமனிதர்களின் சுபாவம்
மாறுமா? ஞாயிற்றுக்கிழகைளில் முகம்மது முஸ்தாபா கடைக்குக அருகில் கூட்டம்கூட்டமாக நிற்கும்
வங்காளதேசத் தொழிலாளர்களின் முகங்கள் திடீரென என் மனத் திரையில் தோன்றி மறைந்தது.

ரத்தம் உறைந்து நின்றது

ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் படிப்பறை, படுக்கையறை, குளியல் அறை என்று ஒன்றொன்றாகக் காட்டி வந்தனர்
அதிகாரிகள். மேல் மாடியில் படிக்கட்டுஒன்று. அதன் அருகில் வந்ததும் ஆங்கிலத்தில் ஓர் அறிவிப்பு
எழுதிவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். துப்பாக்கிச் சூடு கேட்ட அவர் படிக்கட்டில் இறங்கும்போது
சுடப்பட்டார் என்றும் சுடப்பட்டு விழுந்தபடிக்கட்டுகளை சட்டமிட்டு பாதுகாத்துவைத்திருப்பதாகவும் அந்த
அறிவிப்புத் தெரிவித்தது. படிக்கட்டுகளின் அருகில் வந்து நின்றதும் எங்கள் ரத்தம் உறைந்து நிற்பது போன்ற
உணர்வு ஏற்பட்டது. மக்கள் சுதந்திரமாகவாழ சிலர் உயிரைக் கொடுக்க வேண்டியுள்ளது. ஷேக் முஜிபுர்
ரஹ்மான் அவர்களின் இரு பெண்பிள்ளைகளைத் தவிர குடும்பமே சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி
அறிந்துகொள்ளும்போது உணர்ச்சிவசப்படாமல் இருப்பது எளிதல்ல.

தேன் வந்து பாய்ந்தது காதினிலே

ஓட்டலுக்குத் திரும்பி வந்து ஆறாவது மாடிக்குச் செல்ல மின்தூக்கிக்காகக் காத்திருந்த போது வணக்கம் என்று
தமிழில் ஒருவர் சொல்லிக்கொண்டே என் தோளை நட்புடன் தொட்டார். தேனாகப் பாய்ந்த அச்சொல்லுக்கு
உரியவர் யார் என்று திரும்பிப் பார்த்தேன்.

பயணக் குறிப்பு நாளையும் தொடரும்.....
அன்புடன்
பழனி



>அன்பு பழனி அவர்களுக்கு,
>நல்ல கிளைமாக்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டீர்களே!
>நாங்களும் வங்க தேசம் சென்றது போல்இருக்கிறது.
>நாளைக்காகக் காத்திருக்கிறேன்.
>
>மிக்க அன்புடன்,
>பெ.சந்திர போஸ்.
>சென்னை.

நன்றி. மேலே உள்ளதைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பழனி



>At 09:13 PM 9/8/99 +0800, you wrote:
>>-------------------------------------
>>Tamil 'Family' Mailing List.
>>Visit http://www.egroups.com/list/globaltamil/
>>for GlobalTAMIL archives.
>>-------------------------------------
>>
>>இஅன்பு முனைவர் சுவாமிநாதன் மற்றும்நண்பர்களே,
>>அலுவலகப் பணி தொடர்பாக ஆசியநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அமைதி மற்றும் ஒத்துழைப்பு மாநாட்டில்
>>கலந்துகொள்ள ப(வ)ங்களாதேஷ் செல்லும்வாய்ப்புக்கிடைத்தது. மாநாடு தவிர்த்துஎன் பயணக் குறிப்பை
>>முடிந்தளவு எழுத முயற்சிக்கிறேன்.
>>
>>விமானத்தில் தமிழின் நிலை
>>இருக்கையில் அமர்ந்ததும் எனக்கு நேரேஇருந்த பிரசுரங்களில் ஒன்றை எடுத்துப்புரட்டினேன். பயணிகளுக்காக
>>விமான நிறுவனம் வெளியிட்ட சிறு மாத இதழ். பல கட்டுரைகளுடன் பயணத்தின்போது விமானத்தில்
>>காட்டும் திரைப்படம், இசை நிகழ்ச்சிகள் போன்ற தகவல்களும் அதில் அடங்கியிருந்தது. அப்பக்கங்களைப்
>>புரட்டியபோது, தமிழ் எழுத்துக்கள் கண்ணில் பட்டன. தமிழத்திரைப்படம், திரைப்பாடல்கள், கர்நாடக
>>சங்கீதம் ஆகிய நிகழ்ச்சிகளையும்பார்த்துக் கேட்டு மகிழலாம் என்றுஎழுதியிருந்தனர். படத்தின் தலைப்பு,
>>பாடலின் தலைப்பு போன்றவை இடம்பெற்றிருந்தன. ஆனால் அவை அனைத்தும் தமிழ் எழுத்துக்களாக இருந்தனவே
>>ஒழிய, அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை. கணினியில் தமிழ் எழுத்துக்களை அடிக்கும் சீனப்
>>பெண்கள் (தமிழ் அறியாதவர்கள்)அடித்திருக்கக்கூடுமோ என்ற ஐயம் ஏற்பட்டது. அப்படிப்பட்டவர்கள் ஒரு சிலர்
>>அடித்ததைப் படித்துத் திருத்திக்கொடுத்த அனுபவம் உண்டு. நாட்டின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனத்திற்குள்
>>நான்கு மொழிகளிலும் தகவல்கள்அச்சடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு மகிழ்ச்சியுற்ற நெஞ்சம் பிழைகளைக் கண்டு
>>மனம் சற்றுச் சுருங்கியது.
>>
>>வயதானவர் என்பதை அப்போதுஅறிகிறோம்.......மற்றவர்கள் நம்மை அங்கிள் என்று அழைக்கும்போது
>>
>>அங்கிள் can i sit hereஇ என்று 5-6 வயதுப் பெண்எனக்கு அடுத்துள்ள இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
>>அவளுக்குப் பின்னால் அவளின் தந்தை மூன்றாம் இருக்கையில் வந்து அமர்ந்தார்.
>>சிறுமியின் ஆங்கிலத்திலிருந்து அவள்வெளிநாட்டில் படித்திருக்கவேண்டும் என்று தெரிந்தது. அவளிடம்
>>மெதுவாகப் பேச்சுக்கொடுத்தேன். அரபுநாடுகளில் தாய் தந்தையருடன் வாழந்துஅங்கேயே இரண்டாம் வகுப்பு
>>வரை படித்துவிட்டு இப்போது வங்காளதேசத்திற்குத் திருப்பிக்கொண்டிருப்பதாக அவளும் இடை இடையே அவளின்
>>தந்தையும் சொல்லிக்கொண்டு வந்தனர்.விமானச் சன்னல் அருகே இருந்த தாயையும் விமானப் பெண்கள்
>>ஏற்படுத்திக்கொடுத்த சிறு கட்டிலில்தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயதுத் தம்பியையும் தன் துருதுரு கண்களால்
>>அடிக்கடி பார்த்துகொண்டு, சிங்கப்பூர் தனக்கு ஏன் பிடித்திருந்தது என்பதை விளக்கிக்கொண்டு வந்தவள் சற்று
>>நேரத்தில் அயர்ந்து தூங்கி விட்டாள்.
>>
>>சிறுமியின் தந்தையும் நானும் எங்களின் பெயர் அறிமுக அட்டைகளைப் பரிமாறிக்கொண்டோம். அவர் ஒரு
>>தொழில் அதிபர்-சிங்கையில் தொழில் செய்யலாமா என்பதைக் கண்டறிய ஒருவாரப் பயணத்திற்குப் பின்னர்
>>தாய் நாடு திரும்பிக்கொண்டிருந்தார்.மாநாட்டின் போது நேரம் கிடைத்தால்அவரை அழைக்குமாறு
>>கேட்டுக்கொண்டார். மனிதநேயம் உலகில் உண்டு என்பதற்கும் வங்காள மக்களின்பண்பான உபசரிப்பிற்கும்
>>கட்டியம் கூறுவதுபோல அவரின் பேச்சுஅமைந்திருந்தது.
>>
>>மூன்றரை மணி நேரம் எப்படியோ ஓடி விட்டது. விமானப் பணிப்பெண் ஒருத்தி wouldyou like to
>>join your delegates at the business classஇ என்று விமானம்தரை இறங்குவதற்கு முன்னர் வந்து
>>அழைத்துச் சென்றார். நான் அமர்ந்திருந்த இருக்கையைவிட அங்குள்ள இருக்கைகள்சொகுசாக இருந்தன.
>>தரையிறங்குவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருப்பதால் அங்குள்ள இருக்கையில்அமர்ந்து கொஞ்சம்
>>அனுபவிப்போமே என்று அமர்ந்தால், cabincrew get ready for touch downஇ என்று விமானி
>>மெல்லிய குரலில் சொன்னார். ஓரிருநிமிடங்களில் மிகவும் லாவகமாக சுமூகமாக விமானம்
>>தரையிறங்கியது.
>>
>>விமானத்தின் வெளியே புன்னகை பூத்தவண்ணம் பல முகங்கள் காத்துநின்றன. சிங்கப்பூர் குழு? என்று என்னைப்
>>பார்த்து ஒரு பெண்மணி ஆங்கிலத்தில்கேட்டார். ஆம் என்றதும் எங்கள் மூவருக்கும்மலர்க்கொத்தை மற்றோர்
>>பெண்மணி கொடுத்தார். வந்திருந்த மற்ற ஆண்கள் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். விருந்தினர்
>>அறைக்குச் சென்று எங்களின் பெட்டிகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது இன்னும் பலர் அறைக்குள் வந்து
>>சேர்ந்தனர். அவர்களில் ஒரு சிலர் பார்ப்பதற்கு இந்தியர்களைப் போல இருந்தனர். (மோரிசியஸ் நாட்டினர்
>>என்பது பின்னர் தெரியவந்தது). சற்றுநேரத்திற்கெல்லாம் பல நாட்டுப் பிரதிநிதிகள் அறைக்குள்
>>வந்துவிடவே அந்த அறை பரபரப்படையத் தொடங்கியது. அவர்கள் அனைவரும் நாங்கள் வந்த விமானத்தில்
>>வந்தவர்கள்தான். பல நாட்டினர் சிங்கைவந்து சியா (SIA) விமானம் வழி வங்காளதேசம் வந்துள்ளனர்
>>என்பது தெளிவாயிற்று.
>>
>>பரபரப்பான சூழ்நிலையிலும் சிலஅதிகாரிகள் பணிவன்போடு வந்திருக்கும் விருந்தினர்களிடம்
>>பேசிக்கொண்டிருந்தனர். Hello sirஇ என் பெயர் ஜோதிஷ். நான்தான் உங்களின் பயணம் இனிதாக இருக்க
>>உதப்போகும் அதிகாரி. ஐந்து நாட்களும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்றுதன்னை அறிமுகம் செய்து
>>கொண்ட அந்த 30 இளைஞரின் உற்சாகம்என்னைக் கவர்ந்தது. அவரின் முகத்தில்அவரின் உள்ளத்தின் ஒளி
>>தெரிந்தது. கடமையை மட்டும் செய்யும்அரசாங்க ஊழியர் அல்ல என்று தெரிந்தது.
>>
>>எங்களை மொய்த்தது யார்?
>>
>>விமான நிலையத்தை விட்டு வெளியேவந்ததும் ஒரு கூட்டம் எங்களை மொய்த்தது.
>>நாளை தொடரும்.....
>>அன்புடன்
>>பழனி
>>
>>At 08:45 AM 9/7/99 -0400, you wrote:
>>>-------------------------------------
>>>Tamil 'Family' Mailing List.
>>>Visit http://www.egroups.com/list/globaltamil
>>>for GlobalTAMIL archives.
>>>-------------------------------------
>>>
>>>அன்புள்ள பழனியப்பன்:
>>>
>>>பங்களாதேஷ் போய்விட்டு வந்தீர்களே. அதைப்பற்றி ஏதாவது
>>>சொல்வீர்கள் என்று எதிர் பார்க்கிறோம். பயணக்குறிப்புகள் எழுதுங்கள்.
>>>
>>>சுவாமிநாதன்
>>>லாஸ் ஏஞ்சலஸ்
>>>
>>>=========================
>>>-----Original Message-----
>>>From: Palaniappan A
>>>To: globaltamil@...
>>>Date: Tuesday, September 07, 1999 11:33 AM
>>>Subject: [GlobalTAMIL] Words a day 3299A
>>>
>>>
>>>>-------------------------------------
>>>>Tamil 'Family' Mailing List.
>>>>Visit http://www.egroups.com/list/globaltamil/
>>>>for GlobalTAMIL archives.
>>>>-------------------------------------
>>>>
>>>>This mail is written in TSCII format. Have you switched to the new
>>>>standard? If not please visit www.murasu.com and download the latestAnjal
>>>>2.0.2. (For further details on how to download etc see my e-mail dated11
>>>>Feb at http://www.egroups.com/list/globaltamil/ )
>>>>அன்பு உலகத் தமிழ் இணைய (Global Tamil)நண்பர்களே,
>>>>வணக்கம்.
>>>>இன்றும் உயிரெழுத்தான அவிலிருந்து சில சொற்களைக் காண உள்ளோம்.
>>>>அ -The first letter and vowel of the alphabet இஇ
>>>>இ
>>>>அபவாதம்: அவதூறு calumny, slanderஇ
>>>>பத்திரிகையில் அபவாதமாக எழுதிஅவதூறு வழக்கில் மாட்டிக்கொண்ட நண்பர்வழக்கறிஞரின் ஆலோசனையை
>>>>நாடிச் சென்றார்.
>>>>
>>>>அபஸ்வரம்: இசைமுறிவான, ஒத்திசைவில்லாத discordant note, இ
>>>>கோர்வையோடு பாடி வந்த பாகவதர்,மிருதங்கம் வாசித்தவரின் அபஸ்வரத்தாளத்தால் ஆத்திரமடைந்து
>>>>பாடுவதை நிறுத்திவிட்டார்.
>>>>
>>>>அபாக்கியம்: துர்பாக்கியம்.துரதிர்ஷ்டம் misfortune,
>>>>திருமணமாகிய சில வருடங்களிலேயே லதா கணவனை இழந்தது அபாக்கியம்தான்.
>>>>
>>>>அபாண்டம்: அநியாயமாக, களங்கப்படுத்தும் அல்லது பழி சுமத்தும் நோக்கத்தோடு சொல்லப்படுவது
>>>>maliciousness, deliberate and unfair accusation
>>>>ராமு நல்லவன், அவன் உன் காமிராவைஎடுத்திருக்க மாட்டான். அவன் மீது அபாண்டமாகப் பழி
சுமத்தாதே.
>>>>
>>>>அபாயம்: ஆபத்து danger
>>>>அபாயம், வெடிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனம் முன்னால் செல்கிறது. வாகனத்தைக் கவனமுடன் ஓட்டிச்
>>>>செல்லவும் என்ற அறிவிப்பைக் கண்டதும்ராமன் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தான்.
>>>>இரு நாடுகளுக்குமிடையில் போர் மூளும்அபயாம் இன்னும் உண்டு.
>>>>நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுஏற்படும் அபாயம் இருப்பதையுணர்ந்த ஆசிரியர் இருவரையும் அழைத்துச்
>>>>சமரசம் செய்துவைத்தார்.
>>>>வங்காளதேசத்தில் கனத்த மழைபெய்வதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே
>>>>வருகிறது.இ
>>>>இறையருள் உள்ளார்க்கு அபாய மொருநாளுமில்லை.
>>>>
>>>>அபாயக்கொடி: ஆபத்தைக் குறிக்கக்காட்டப்படும் கொடி red flag as a form of a signal to
>>>>denote danger
>>>>அபாயக் கொடியை அசைத்தாட்டிக்கொண்டு நின்ற அதிகாரியைப் பார்த்த புகைவண்டி ஓட்டுநர் வண்டியை
>>>>நிறுத்தினார்.
>>>>
>>>>அபாயச் சங்கிலி: புகைவண்டியில் பயணம் செய்வோர் ஆபத்தை எதிர்கொள்ளும்போது வண்டியை
>>>>நிறுத்துவதற்காகப் பொருத்தப்பட்டசாதனம் alarm chain இ
>>>>தக்க காரணமின்றி அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
>>>>
>>>>அபாயச்சங்கு: ஆபத்தை அறிவிக்கும் ஒலி siren-to warn of dangerஇ
>>>>அபாயச் சங்கு ஒலிக்க ஆம்புலன்ஸ் வண்டிமருத்துவமனையை நோக்கி விரைந்தது.
>>>>
>>>>அபாரம்: அளவற்றது boundless,immense
>>>>நுண்கலைகளில் அவருக்கு இருந்த அபாரஈடுபாட்டிற்கு இணையாக இதுவரை யாரும்தோன்றவில்லை.
>>>>
>>>>அபாரம்: பிரமாதம், பாராட்டத்தக்கது exceptionally good, excellent
>>>>சிங்கப்பூரின் அபார முன்னேற்றத்திற்குக் காரணம், அரசியல் நிலைத்தன்மை,ஊழலற்ற தலைவர்கள்,
>>>>கட்டொழுங்குமிக்க குடிமக்கள் என்றால்மிகையாகாது.
>>>>
>>>>அபாரசக்தி: அளவிலா ஆற்றல் unlimitedpower
>>>>பழங்காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் துல்லிதமாக நினைவுபடுத்தி விளக்கிக்கூறும்
>>>>முதியவரின் அபாரசக்தியைப் பலரும்பாராட்டினர்.
>>>>
>>>>அபிநயம்: நாட்டியக்கலையில் முகபாவம், உடல் அசைவுகள் வழி உணர்வுகளைவெளிப்படுத்துதல் expression
>>>>of sentiments by facial expression or gesticulation in dance
>>>>கண்ணனின் குறும்புகளை எடுத்துக்காட்டும்நாட்டிய நாடகத்தில் தத்ரூபாம அபிநயம் பிடித்தாடி எல்லோரின்
>>>>மனதையும் கவர்ந்தார் சிந்து.
>>>>
>>>>நாளையும் அ தொடரும்-அது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன ?
>>>>அன்புடன்
>>>>பழனி
>>>>
>>>>
>>>
>>>
>>
>>
>>
>
>