From Palaniappan A Fri Sep 10 08:24:59 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 17280 invoked from network); 10 Sep 1999 15:27:49 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qg.egroups.com with SMTP; 10 Sep 1999 15:27:49 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id XAA07048; Fri, 10 Sep 1999 23:27:45 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp35.dyn69.pacific.net.sg [210.24.69.35]) by pop1.pacific.net.sg with SMTP id XAA14219; Fri, 10 Sep 1999 23:27:41 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990910230812.019a5100@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Fri, 10 Sep 1999 23:08:12 +0800
To: globaltamil@..., agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Bangladesh Travelogue 3
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1951

இஅன்பு நண்பர்களே,
வங்காளதேசத்திலும் தமிழ் பேசக் கூட்யவர்கள் இருக்கிறார்களா என்ற ஆவலுடனும்,ஆகா வந்ந இரண்டாவது
நாளிலேயே தமிழ் ஓசையைக் கேட்கமுடிகிறதே என்ற நினைவிலும் வணக்கம் சொன்னவரைத்
திரும்பிப்பார்த்தேன். கிட்டத்தட்ட அறுபது வயதைத் தாண்டிய, அவ்வளவாக உயரமில்லாத தமிழர் புன்னகை
பூத்த வண்ணம் நின்றுகொண்டிருந்தார்.
"உங்களை நேற்று கவனித்தேன். இதற்கு முன்னர் எங்கேயோ பார்த்த ஞாபகம். ஒரு முறை சந்தித்திருக்கிறோம்
நினைவுக்கு வருகிறதா?" என்று அவர் கேட்டதும் அவரின் பேச்சும், உருவமும் ஒரு விநாடிக்குள் என் பொறியைத்
தட்டி எழுப்பின.

ஆமாம், 1990ம் ஆண்டு சுவீடனில் ஒரு மாநாட்டில் சந்தித்தோம் இல்லையா,ஐயா, எப்படி நலமாக
இருக்கிறீர்களா என்று நான் கேட்டேன்.ஆமாம், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குமுன்னர் அங்கு நடைபெற்ற
அனைத்துலக நாடாளுமன்றப் பேரவைக் கூட்டத்தில் நான் ஸ்ரீலங்காவைப் பிரதிநிதித்து வந்தபோது உங்களைச்
சந்தித்தேன் என்றார் ஸ்ரீலங்லை நாடாளுமன்ற உறுப்பினர் திரு முத்தையா சிவலிங்கம். பிரதமர்களையும்,
அதிபர்களையும், நாடாளுமன்ற நாயர்களையும் சந்தித்தாலும் தமிழ்பேசும் ஒருவரை வேற்று நாட்டுச் சூழலில்
சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒன்பது வருடங்களுக்குமுன்னர் சிங்கப்பூர்
நாடாளும்னற அதிகாரியைச் சந்தித்ததை மட்டுமல்லாமல் என் உருவத்தையும் நினைவில் வைத்துக்கொண்ட அவரை
நான் எப்படிப் பாராட்டுவது? மீதமுள்ளநாட்களில் அவரை நான் மதிய, இரவு நேர உணவின்போது சந்தித்துப்
பேசினேன். தன் தலைவர் தொண்டமானின்சேவைகளைப் பற்றி பெருமையாகப் பேசினார். தமிழர்களுக்காக
தான் செய்யும் கடமைகளையும் தன்பொறுப்புகளையும் பற்றி விரிவாகச் சொன்னார். பல எதிர்ப்புகளுக்கிடியே
ஓர் ஆலயத்தைத் தோட்டத் தொழிலாளர்களுக்காகக் கட்டிக்கொடுத்து வழிபாடுகள் நடந்து வருவதைப் பற்றியும்
தெரிவித்தார். அவரைப் பற்றிச்சொல்லப்போனால், அவர் மிகவும் அடக்கமானவர், பணிவன்புமிக்கவர்,
எல்லாவற்றாயும் விட ஒரு நல்ல தமிழர்.

மூன்றாம் நாள் மாநாடு சூடு பிடிக்க ஆரம்பித்தது. வட்டாரத்தில் உலகில் அமைதிக்காக்க ஒன்று
கூடியவர்களுக்கிடையே தத்தம் நாட்டின்பிரச்னைகளே பெரிதாகப் பட்டன. அண்டை நாட்டுனன் இருந்த தங்களின்
எல்லைப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்திப்பேசத் தொடங்கின. நல்ல வேளையாகமாநாட்டித் தலைவர்
தலையிட்டு மாநாட்டின் கருப்பொருளைப்பற்றிப் பேசுமாறு அன்பு வேண்டுகோள்விட்டார். காலையில் ஏற்பட்ட
சூடு பிற்பகலில் சற்றுத் தணியட்டுமே என்று பிற்பகலில் பெரிய படகில் ஆற்றில்சவாரி சென்று வர
ஏற்பாடு செய்திருந்தனர். அப்படகு 1926ம் ஆண்டு கல்கத்தாவில் கட்டப்பட்டது. 1956ல்புதிப்பிக்கப்பட்ட அது
இப்போது உல்லாசப் பயணத்திற்காகப்பயன்படுத்தப்பட்டுகிறது. மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சற்று ஓய்வாக
தத்தம் நாட்டு பிரச்னையை மற்ற நாட்டுடன் மாநாட்டு மேசையில் அல்லாமல் படகுக்சவாரி வழங்கும் இதமான
சூழலில் தொடர்ந்து பேச, அல்லதுஓய்வெடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுஏற்பாட்டாளர்களின் நோக்கம் போலும்.

கிருஷ்ண ஜெயந்தியும் படகுச் சவாரியும்.

வழக்கம்போல எங்களின் பஸ்கள் மற்றவாகனங்கள், ரிக்ஷாக்கள், ஆட்டோக்கள்மற்றும் பாதசாரிகளுடன்
போட்டிபோட்டுக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. இன்று கிருஷ்ண ஜெயந்தி. இங்குவிடுமுறை. ஆனாலும்
போக்குவரத்து நெரிசல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றார் ஜோதிஷ். முஸ்லிம் நாடானாலும்
இந்துக்கள், கிருஸ்வதர்கள், பெளத்த மதத்தினர் இங்கு உள்ளர். இந்துக்களுக்கு கிருஷ்ணஜெயந்தி,
துர்கையம்மன்(நவராத்திரி) விழா, தீபாவளி போன்ற நாட்களுக்கு விடுமுறைகொடுக்கப்படுவதாக அவர்
சொன்னார். தான் ஒரு இந்துவாக இருந்தாலும் அதனைப்பற்றி அதிகம் பேசுவதில்லை என்று அவர் சொன்னார்.
88விழுக்காட்டினர் முஸ்லிமாக இருந்தாலும்எவ்வித அச்சமும் இன்றி எவ்விதக் கலை,சமய வழிபாட்டைப்
பின்பற்றலாம் என அரசியல் அமைப்புச்சட்டம் வங்காளதேச மக்களுக்கு உரிமைவழங்குகிறது. 126
மில்லியன் மக்களில் 10 விழுக்காட்டினர்இந்துக்கள். அந்த 126 மில்லியன் பேரில் 100மில்லியன் பேர்
டாக்காவில் வாழ்கின்றனர் என்றால் மக்கள் கூட்டம் எப்படி இருக்கும் என்று கற்பனைசெய்துபார்க்கவேண்டியதில்லை,

அன்று காலையில் கிருஷ்ணரின் சிலைகளும் அவரைப்போல அலங்கரிக்கப்பட்ட சிறுவர்கள் ஊர்வலமாக
எடுத்துச்செல்லப்பட்டதையும், அவ்விழாநடவடிக்கைகளில் முஸ்லிம் நாடாளுமன்றஉறுப்பினர்கள் அமைச்சர்கள்
கலந்துகொண்டனல் என்ற செய்தியை அன்றிரவு தொலைக்காட்சி செய்தியிலும் அடுத்த நாள் ஆங்கிலப்
பத்திரிகையிலும் படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது. பல இன, பல சமயநாட்டிலிருந்து வந்த எனக்கு
அது பெரிய விஷயமாகத் தோன்றாவிட்டாலும், வங்காளதேச மக்களின் சகிப்புத்தன்மையை பாராட்டவே
வேண்டும்.

கர்ப்பமுற்ற பெண்போல, சுமார் 200 பேரைஏற்றிக்கொண்டு, படகு மெதுவாக அசைந்தாடிப் புறப்பட்டது.
ஆனால் சற்று தூரத்திற்குப் பிறகு அது வாலிப மிடுக்கோடு சீராகச் செல்லத்தொடங்கியது. படகின்
மேல்தளத்தில் நாற்காலிகளைப் போட்டு வைத்திருந்தனர். மால்டிவ்இஸ் தீவிலிருந்து வந்திருந்த இரு
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கொஞ்சம் பேச்சுக்கொடுத்தேன். அவர்கள் இருவரும்முஸ்லிம்கள். பார்ப்பதற்குத்
தமிழர்களைப் போல இருந்தாலும் அவர்கள் இந்தியவின் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வம்சாவளியினரைச்
சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. தங்களின் மூதாதையர் எங்கிருந்து வந்தனர் தங்களின் பூர்வீகம் என்ன
என்பதை அறிந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வம் இல்லை என்று தெரிந்தது. பல தலைக்குப்பின்னர் வேற்று நாட்டில்
பிறந்து வளர்பவர்கள் தாங்கள் வாழும் நாட்டைத் தவிர வேறு நாடுகள் மீது பற்றுஇருப்பதில்லை என்பது
அவர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது.

நாங்கள் சென்ற நேரம் மழைக்கலாம். மழையின் காரணமாக ஆறு வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.
ஆற்றங்கரையின் இரு மருங்கிலும் இருந்தசெங்கல் ஆலைகள், வீடுகள் பல தண்ணீருக்குள் மூழ்கிநின்றன.
சின்னஞ்சிறு தீவுகள் போன்று அவைகாட்சியளித்தன. ஆங்காங்கே மீனவர்கள் சிறிய படகுகளில் இருந்தவாறு
வலைகளைப் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். ஆற்றின் நீரோட்டத்திற்குஎதிராக எங்கள் படகு பயணம்
செய்துகொண்டிருந்தது. ஆற்றில் பச்சைப்பசேலென்ற செடிகள் தண்ணீரின் மேலேமிதந்துவந்தன. அவை சில
இடங்களில் ஒன்றாகத் திரண்டு தேங்கிநின்றபோது ஆற்றின்மீது போட்ட புல்தரையோ என்ற மயக்கத்தைத்
தந்தது.

நாங்கள் சென்ற ஆறு கிழக்குப்பகுதியிலிருந்து தோன்றி வரும் ஒன்று என்று ஜோதிஷ் சொன்னார். டாக்காவின்
வேறு பகுதியில் சரஸ்வதி ஆறு ஓடுவதாகவும் அது மற்றொரு ஆற்றோடு இணைந்து பின்னர் வங்காள வளைகுடாவில்
கலப்பதாகச் சொன்னார்.

படகில் சென்ற எங்களுக்கு சில நடனங்களுக்கும் தேநீர் விருந்திற்கும் ஏற்பாடுசெய்திருந்தனர். நடனங்கள்
கண்ணைக்கவர்ந்தன. அவை இந்திய துணைக்கண்டத்திலிருந்து வேறுபட்டவையல்ல. மணிப்புரி சன்டால் வகை மிகவும்
பிரபலம். நடனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது எங்கள் அருகில் கம்போடியக் குழுவினர்
அமர்ந்திருந்தனர். அவர்களில் இளவரசர்நோரோடோம் ரானாரித் அவர்களின்செயலாளரும் அடங்குவார்.
அவரைப் பார்த்தால் கம்போடிய மக்களின் சாயல் இல்லை. அவர் அழகாக இருப்பதைப் பார்த்தால் அவர்
கம்போடிய -பிரஞ்சு கலப்படம் போல்தோன்றியது. நான் நினைத்ததை என் அருகில் இருந்தவரும்
நினைத்திருப்பார் போலும். "பாலா(Pala)இஅவள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாள்இல்லையா? I
think she may of French origin."இ என்றார். ஆமாம் இருக்கலாம் எப்படித் தெரிந்து கொள்வது ?
என்றேன். Why dont you ask her - நீ அவளிடமேகேட்கலாமே" என்றார். கொஞ்சம் துணிச்சலை
வரவழைத்துக்கொண்டு அவரை அணுகினேன்.

கம்போடிய அழகி என்ன சொன்னாள்?
நாளையும் வங்காளசேத செலவு தொடரும்............
அன்புடன்
பழனி