From Fri Sep 10 09:45:07 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29699 invoked from network); 10 Sep 1999 16:47:57 -0000
Received: from dragonfirex3.delta-air.com (HELO satlmsghub03.delta-air.com) (216.79.105.22) by qg.egroups.com with SMTP; 10 Sep 1999 16:47:57 -0000
Received: by satlmsghub03.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Fri, 10 Sep 1999 12:50:56 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C30D@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Fri, 10 Sep 1999 12:47:54 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] racial memory and gnAna campanthar
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 1954



>திருஞான சம்பந்தர் மூன்று வயதிலேயே பாடத் தொடங்கியதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது
முற்சொன்ன அண்ணாமலைப் பேராசிரியர்
"அத் திறமை இனநினைவு (racial memory) என்றழைக்கப் படும். அவர்களின் முன்னோரின் அனுபவங்கள்
பிறப்பணுவில் (? = gene) பதிந்திருந்து விழிப்புற்று வெளிப்படும்"
என்று விளக்கங் கொடுத்தார்.
அந்த விளக்கம், அவர் பிறப்பாலேயே அடைப்படைத் திறமை (aptitude) யிருந்தும் அவருடைய மூன்று வருட
அனுபவம் "தொடுடைய செவியன்" என்று சொல், யாப்பு, இசை மற்றும் சமய அறிவோடு பாடப் போதாதெனக்
கருதினால் தேவை. ஆனால்
பிறப்பணுக்கள் இத்தகைய நினைவுகளைத் தாங்கும் இயல்புடையனவா?

அல்லது அந்தப் பிள்ளை பிறந்ததிலிருந்து மூன்று வருடங்களாகக் கேட்ட இசை, இலக்கியம், சமய
ஓசைகள்/பாடங்கள்
இயல்பாகவே உள்ள திறமையினால் உறிஞ்சப்படப் போதுமெனக் கருதலாம்.

அண்மையில் ஆளுடைய பிள்ளைகள் வடமொழி மறைகளையும் ஓதும் அறிவை நேரடியாகக் கல்லாமலேயே
பெற்றிருந்ததாகப் படித்தேன். அது உண்மையா? இதையும் மூன்று வயதுவரை அவர் தம்மைச் சுற்றியிருந்த
சூழலில் மறை யோதும் ஓசையைக் கேட்டு உறிஞ்சி யிருக்க முடியும் என்று கருதலாமல்லவா?

அவையோர் கருத்தென்ன?