From Fri Sep 10 18:01:45 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 11 Sep 1999 01:04:39 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 665 invoked from network); 11 Sep 1999 01:04:37 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qh.egroups.com with SMTP; 11 Sep 1999 01:04:37 -0000
Received: from jaring.my (j1.glg34.jaring.my [161.142.199.135]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id JAA11696; Sat, 11 Sep 1999 09:04:31 +0800 (MYT)
Date: Sat, 11 Sep 1999 09:04:31 +0800 (MYT)
Message-Id: <199909110104.JAA11696@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 229
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1959

அன்பர்களே,

மானிட வரலாற்றைப் பார்க்கும் போது ஒன்று என் கண்களில் படுகின்றது. பண்பாடுமிகவும் கீழே விழுந்து
சீரழிந்து கிடக்கும் போது, ஒருவன்தோன்றுகின்றான், எரிமலை என வெடிக்கின்றான். நெருப்புக்
குழம்புகளாக அவனது சிந்தனைகள் பரவிசிவதீக்கை செய்து பண்பாட்டினையே ஓர்படி மேலே
கொண்டுசெல்கிறது. ஆனால் அதற்காக அவன் செய்யும் தியாகங்கள் தான் எத்தனைஎத்தனை? இதனை சிந்திக்க
இயேசு பிரான் ஞாபகம் வந்தது. அதேபொழுது அவருக்குப் பிறகு அவர் பெயரில் நடந்த கொலைப்பாதகச்
செயல்களும் நினைவிற்கு வந்தது. சிந்தித்துக் கொண்டிருக்க ஓர் கவிதை பிறந்தது. அன்பர்களுக்கு அனுப்பி
வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தத்துவராயன்


229: அன்பின் இயேசுவே!


குத்தும் முள்வளையக்
குருதிப் புனல் சிரசோடு சிலுவைமரம்
ஏறிய ஏசுவே உனை இன்றும்
சிந்திக்க சிந்திக்க என் கண்களில்
செங்குருதி வழிந்தோடுகின்றது என்
சித்தத்தை உலுக்கி!

குற்றஞ் செய்யாதார் இருப்பின் இங்கு
கொல்லுங்கள் இவளைக் கல்லெறிந்தென்று
கொலைக் கஞ்சா உறுதியொடுக் கூறினாயே
அதனைக் கண்டு உனைக்
கொன்றே அடங்கினார்களே ! அதுவல்லாது
இன்றுங் கொலை வெறித் தணியாது
உன் பெயரில்
கொன்று கொன்று மகிழ்கின்றார்களே !
அதனை நினைத்து நினைத்து நான்
குறுகிக் குறுகி மாய்கின்றேன்
குருதிக் கண்ணீர் வடிக்கின்றேன்!

மாந்தனாய்ப் பிறந்தார்க்கு மாண்பென்பது
அருளின் திருவாய் அன்பின் வடிவாய்
ஆய்நின்று அகிலம் புரப்பது என்றறைந்தவுன்
அருள்மொழி ஆணவச் சகதியில் அழுந்தி
அடக்கும் நெறியின் அவலச் சொற்களாய்
ஆய்விட்டது!

இறைவனிடத்தில் உனை வைத்து
ஏத்துவார்க்கு எழில் சுவர்க்கமாம்!
அல்லாதோர்க்கு அல்லல் நரகமாம்!
தீராத் திறனின் தீயின் செந்நாக்குகள்
தின்றுத் தின்றுக் கொல்லுமாம்!

அன்பின் ஏசுவே!
அடாத இது கண்டு நான்
அடங்காது எழுந்துவிட்டேன்!
அயராது ஆடு என்று என்
அன்பனுங் கூறிவிட்டான்!

முப்புரஞ் செற்ற அந்த மூவா முதலை நினைத்து
பொங்கி எழுந்து விட்டேன் உலகெங்கும்
பொங்கி எரிமலைகள் வெடித்து
பொல்லாங்குகள் தீய்த்து
பொதுவியங் கூறும் புதுமைகள் படைக்குமா
பொருத!


------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan