From Fri Sep 10 18:24:22 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 11 Sep 1999 01:27:15 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12876 invoked from network); 11 Sep 1999 01:27:11 -0000
Received: from copper.singnet.com.sg (165.21.7.30) by qh.egroups.com with SMTP; 11 Sep 1999 01:27:11 -0000
Received: from sanjay01 (qtns00605.singnet.com.sg [165.21.161.75]) by copper.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id JAA05342 for ; Sat, 11 Sep 1999 09:27:08 +0800 (SGT)
Message-ID: <000801befbf1$8ace0440$4ba115a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Sat, 11 Sep 1999 09:03:35 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Biographical sketch of Kalki#2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1960

அன்புள்ள அகஸ்திய நண்பர்களுக்கு,
வணக்கங்கள்.

பகீரதன் அவர்கள் 'கல்கி நினைவுகள்'
என்ற புத்தகத்தில் பதித்த நினைவுகளில்
ஒன்றை இவ்வார ஆனந்த விகடனில்
இப்போது தான் படித்தேன்.

*****************(quote begins)**************

நோயின் கொடுமை கல்கியின் உடலை மிகவும்
பாதித்து விட்டது. டாக்டர்கள் அவர் உடலைப்பரிசோதித்து
விட்டு ஒன்றும் புரியாமல் திகைக்கிறார்கள்.
கடைசியில் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக்
கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

பரிசோதனை அறையிலிருந்து தம் அறைக்கு
வருகிறார் கல்கி. உறுதியான நடையுடன்
நோயே இல்லாதவர் போல வருகிறார். என்னைப்பார்த்துச்
சிரிக்கிறார். ஆமாம்,..... 'என் உடல் நலனை விசாரிப்பது
போல் இருக்கிறது' அந்தச்சிரிப்பு.
"டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டேன்.
"உடலில் ஒன்றுமில்லை என்கிறார்கள்" என்றார்.
"ரொம்ப சந்தோஷம்."
"சந்தோஷப்பட என்ன இருக்கிறது"
"உடலில் ஒன்றுமில்லை என்று டாக்டர்கள்
சொல்லி விட்டார்களே!"
"அது தானே இப்போது பிரச்சனையாக இருக்கிறது!
என் உடலில் ஏதாவது கெடுதல்
இருந்தால் அதைச்சரி செய்து விடலாம்.
சரிப்படுத்த முடியாத அளவு என் உடல்
கெட்டு விட்டதே! அதனால் தான் டாக்டர்கள்
இனி செய்ய ஒன்றுமில்லை என்கிறார்கள்"
என்று சிரித்துக்கொண்டே அமைதியாச் சொல்கிறார்.
***************(quote ends)**************************

அன்புடன்,
ஜெயந்தி

-----Original Message-----
From: jaybee
To: agathiyar@egroups.com
Date: Wednesday, September 08, 1999 5:26 PM
Subject: [agathiyar] Biographical sketch of Kalki#2


>
>அன்பர்களே,
>
> கல்கியின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் தொடர்கிறது.
>
> "ஏட்டிக்குப் போட்டி"யைப் பார்த்துவிட்டு வாசன் கல்கியை
>ஆனந்தவிகடனுக்கு அழைத்து ஆசிரியராக நியமித்துவிட்டார்.
> ஆரம்பத்தில் நகைச்சுவைக் கதைகளே எழுதிவந்த கல்கி, பின்னர்
>அரசியல், கலை விமரிசனம், சமூகத்தொடர்கதை, பிரயாணக்கட்டுரை,
>என்று பரந்து விரிந்து சென்றார். கள்வனின் காதலி, தியாகபூமி ஆகியவை
>ஆரம்பத்தில் வந்தன.
> ஆனந்தவிகடனில் வெளியாகி வந்த குறுக்கெழுத்துப்போட்டியை
>அடியோடு வெறுத்த கல்கிக்கு அதன் சம்பந்தமாக வாசனுடன் ஏற்பட்ட
>கருத்து வேற்றுமை மனதில் விரிசல் உண்டாகியது. அத்துடன் காந்தியின்
>தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு மூன்றுமாத காலம் சிறை புகுந்தார்.
> அப்போதே ஒரு "மீண்டும் திரும்பாத நிலை" ஏற்பட்டுவிட்டது.
> சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் தன் பழைய நண்பர்
>சதாசிவத்துடன் சேர்ந்து புதிய பத்திரிக்கை ஒன்றைத் தொடங்க திட்டமிட்டார்.
> முதலீட்டுக்குப் பணம் தேவைப்பட்டது.
> அப்போது "சாவித்திரி" படம் தயாராகும் நிலையில் இருந்தது.
>அந்தப் படத்தில் எம்.எஸ்,சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்கச்சொல்லி
>கேட்டிருந்தார்கள். ஆனால் ஆண் வேடத்தில் நடிக்க எம்.எஸ். மறுத்துவிட்டார்.
> புதிய இதழுக்குப் மூலதனப்பணம் தேவை என்று அறிந்ததும்,
>எம்.எஸ்., அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க சம்மதம் தெரிவித்து, நடித்தார்.
> எம்.எஸ். அவ்வாறு செய்தது ஒரு பெரும் தியாகச்செயல்.
> அந்தப் பணத்துடன் இன்னொரு நண்பரும் போட்ட மூலதனத்துடன்
>புதிய பத்திரிக்கையை ஆரம்பித்தார்கள்.
> கல்கி பத்திரிக்கை தோன்றியது.
> ராஜாஜி, டீ.கே.சிதம்பரநாத முதலியார், கிருபாநந்தவாரியார்,
>ரா.கணபதி போன்ற பெரும் மேதைகளின் படைப்புகளைத் தாங்கிவந்த
>கல்கி இதழ், புதிய இளம் எழுத்தாளர்களையும் பெருமளவிற்கு ஊக்குவித்தது.
>குறிப்பாக பெண்களை பத்திரிக்கைகளில் எழுதவைப்பதில் கல்கி பெரும்பங்கு
>ஆற்றினார்.
> நாட்டியக்கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோரைத்
>தகுந்த முறையில் கல்கி கௌரவித்தார். "கூத்தாடி" என்ற பெயரைத்
>தாங்கிக் கொண்டிருந்த கலைஞர்களுக்கு "நாடகக்கலைஞர்கள்" என்ற
>உயரிய பெருமையைத் கல்கி தேடித் தந்ததாக டி.கே.ஷண்முகம்
>சொல்லியிருக்கிறார்.
> சக்கரவர்த்தி திருமகன், கந்தன் கருணை, பொன்னியின் செல்வன்,
>பார்த்திபன் கனவு, வெண்ணிலவுப் பெண்ணரசி, கயல்விழி, வெற்றித்திருநகர்,
>ஜீவகீதம், அலை ஓசை, அமரதாரா, அறிவுக்கனலே அருட்புனலே, அம்மா,
>சுவாமி விவேகாநந்தர், சத்தியவெள்ளம், வேங்கையின் மைந்தன், பாமினி
>பாவை, போன்ற தமிழ் தற்கால இலக்கியத்தின் மைல்கற்கள் கல்கி இதழின்
>வழி உருவாகின.
> கடைசியாக "அமரதாரா" என்னும் நாவலை எழுதிக்கொண்டிருந்த
>போது கல்கி அமரத்துவம் அடைந்துவிட்டார்.
> ஆனால் அதற்காக அந்த நாவல் குறைப்பிரசவமாகி விடவில்லை.
> கல்கியின் மகள் ஆனந்தி அம்மையார் அந்த நாவலை எழுதி பூர்த்தி
>செய்து கல்கியின் ஆத்மாவை சாந்தியடையச் செய்தார்.
>
> மக்களிடையே அவருக்குப் பெரும்புகழை ஏற்படுத்தித் தந்தது,
>"பொன்னியின் செல்வன்". தமிழில் வந்த நாவல்களிலேயே மிக நீளமான
>நாவல்களில் ஒன்று அது.
> கள்வனின் காதலி, பொய்மான்கரடு, பார்த்திபன் கனவு ஆகியவை
>சினிமாப்படமாக வந்துள்ளன.
>
> கல்கியின் நாவல்களில் எனக்குப் பிடித்தது, "பார்த்திபன் கனவு".
> கல்கியின் நாவல்களில் கல்கிக்குப் பிடித்தது எது?
> "அலை ஓசை"தான்.
> அதைப் பற்றி அவரே கூறியிருக்கும் கருத்து:.
>
> "அதுவும் ஒருவகையில் சரித்திரக்கதைதான். நூறு ஆண்டுகளுக்குப்
>பின்னர் யாராவது இதைப் படித்தால், இந்தக் காலத்துச் சரித்திரம் அவர்களுக்குப்
>புரியும்".
>
> This mini-series is dedicated in Memorium of the
> Great Maestro of Modern Tamil Literature-Kalki
> on his Centennial Birthday on behalf of the
> Brotherhood of Agathiyar Websters.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>====================================================
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>------------------------------------------------------------------------
>MyPoints-Free Rewards When You're Online.
>Start with up to 150 Points for joining!
>http://clickhere.egroups.com/click/805
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>