From Fri Sep 10 18:55:13 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 11 Sep 1999 01:58:07 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 26810 invoked from network); 11 Sep 1999 01:58:05 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qh.egroups.com with SMTP; 11 Sep 1999 01:58:05 -0000
Received: from jaring.my (j12.sja3.jaring.my [161.142.117.26]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id JAA16364; Sat, 11 Sep 1999 09:57:59 +0800 (MYT)
Date: Sat, 11 Sep 1999 09:57:59 +0800 (MYT)
Message-Id: <199909110157.JAA16364@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 230
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1963

அன்பர்களே,

ஆண்மையை தறுகண்மையை நெஞ்சுறுதியைஇழந்துவிட்ட ஓர் கோழை சமுதாயமாகி விட்டத் தமிழர்களை நினைத்து
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாரதி அன்று பாடினான். ஆனால் தமிழர்களின்நிலமை சற்றேனும்
மாறிவிட்டதாகக் தெரியவில்லை.அந்நிலையைக் கண்டு கவல்ந்து மீண்டும்பாடவேண்டும் போல் தோன்றிற்று.
பாடலும் வந்தது. அன்பர்களுக்கு அனுப்பிவைக்கின்றேன்.

தத்துவராயன்

230: உற்சாகக் குழைந்தைகள்!


ஆழஞ் செல்ல அஞ்சுவார்கள்
ஆழ்கடலின் ஓரம்
உவர் மணல் கோட்டைகளைக் கட்டி
உவந்து மகிழ்கின்றனர்
உற்சாகக் குழந்தைகளென ஓர் நெடும்அலை
உடைத்துச் சிதைக்கும் வரை அவர்கள்
உருவாக்கியக் கோட்டைகளை!

குன்றின் உச்சிக் கண்டும்
குன்றேறத் துணியாதுக் கூடி
அடிவாரமே வலம் வந்து
திருவாரம் பாடித் திரிகின்றனர்
சிவனையேக் கண்டுவிட்டாற்போல்!

உள்ளத்தை அகழ்ந்து அங்கே
ஒளிந்து கிடக்கும் தீய சத்திகளை
அடையாளங் கண்டு அழிக்காத வாழ்க்கை
ஓர் வாழ்க்கை அல்ல ஓர் சிறிதும்
ஆணவங் கெடாத வாழ்க்கையும் ஓர்
வாழ்க்கை அல்ல!

உள்ளத்தின் உள்ளே ஒளிந்து கிடக்கும்
ஆணவ அழுக்குகளை அகற்றத்தான்
வந்துதிக்கும் வளப்பமெல்லாம்
வாழ்வாங்கு வாழும் திறனெல்லாம்!

விட்டொதுங்கி ஓடிச் செல்லும்
வேடிக்கைக் கோழைகளே விரைவில்
பட்டொழிந்து மாய்வீர்
பயந்து பயந்து வீழ்வீர்!
எட்டிச் செல்லா எமனின் தூதர்கள்
இம்மென ஓடிவந்து எளிதில்
ஏற்றிச் செல்வான் எருமை மேல்!

வல்லிதின் போரிட்டு ஆணவ
வலுப்பிடியைத் துமிக்க
சுத்தத்தைச் சூழுங்கள் ஞான
சூழ்ச்சித் துணையைத் தேடுங்கள்1
ஆழச் சிந்தனையில் வீழுங்கள்
அன்பனின் ஆட்டத்தைக் காணுங்கள்
அயராது அவன் பக்கம்
அணுகிட்டு உயருங்கள்1








------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan