From Palaniappan A Fri Sep 10 22:16:47 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 11 Sep 1999 05:19:39 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1916 invoked from network); 11 Sep 1999 05:19:27 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qg.egroups.com with SMTP; 11 Sep 1999 05:19:27 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id NAA25355; Sat, 11 Sep 1999 13:19:25 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp19.dyn91.pacific.net.sg [210.24.91.19]) by pop1.pacific.net.sg with SMTP id NAA02992; Sat, 11 Sep 1999 13:19:21 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990911125737.0182d9f0@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sat, 11 Sep 1999 12:57:37 +0800
To: globaltamil@..., agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Bangladesh Travelogue 4
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1966

இஅன்பு நண்பர்களே,

<படகில் சென்ற எங்களுக்கு சில நடனங்களுக்கும் தேநீர் விருந்திற்கும் ஏற்பாடுசெய்திருந்தனர். நடனங்கள்
கண்ணைக்கவர்ந்தன. அவை இந்திய துணைக்கண்டத்திலிருந்து வேறுபட்டவையல்ல. மணிப்புரி சன்டால் வகை மிகவும்
பிரபலம். நடனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது எங்கள் அருகில் கம்போடியக் குழுவினர்
அமர்ந்திருந்தனர். அவர்களில் இளவரசர்நோரோடோம் ரானாரித் அவர்களின்செயலாளரும் அடங்குவார்.
அவரைப் பார்த்தால் கம்போடிய மக்களின் சாயல் இல்லை. அவர் அழகாக இருப்பதைப் பார்த்தால் அவர்
கம்போடிய -பிரஞ்சு கலப்படம் போல்தோன்றியது. நான் நினைத்ததை என் அருகில் இருந்தவரும்
நினைத்திருப்பார் போலும். "பாலா(Pala)இஅவள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாள்இல்லையா? I
think she may be of French origin."இ என்றார். ஆமாம்இருக்கலாம் எப்படித் தெரிந்து
கொள்வது ? என்றேன். Why dont you ask her - நீ அவளிடமே கேட்கலாமே" என்றார். கொஞ்சம்
துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவரைஅணுகினேன். கம்போடிய அழகி என்னசொன்னாள்?
நாளையும் வங்காளசேத செலவுதொடரும்............?>இ

என்று நேற்றைய தொடரை முடித்திருந்தேனா? சரி தொடர்ந்து படியுங்கள்.

எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டாயிற்று, ஆனால் எப்படி நீ கல்படமா என்று ஒரு பெண்ணிடம்
கேட்பது? மனம் குழம்பியது. வணக்கம், நடனங்கள் நன்றாக இருக்கின்றனவா? ரசிக்கிறார்களா என்று
பேச்சைத் தொடங்கினேன். ஓ நன்றாகஇருக்கிறது. எங்கள் நாட்டிங்கள் எல்லாம் இந்தப்பகுதியிலிருந்துதான்
வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நடனங்களை எல்லாம் பார்க்கும்போதுமூலம் இங்குதானிருக்கிறது
என்பது புலப்படுதகிறது என்றார். அவரின்பெயர் காத்தரின் (that's Katherine with K and not
C) என்பதை அறிமுகத்தின்போது அறிந்துகொண்டேன். காத்தரின், மற்ற கம்போடிய பிரதிநிதிகளை விட
நீ பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் சற்று வித்தியாசமாகவும் இருக்கிறாயே, உன் பெற்றோர் வெவ்வேறு
இனத்தவரா என்று கேட்க வந்த விஷயத்தைக் கேட்டுவிட்டேன். You are not the first to ask me
thisஇ இக்கேள்வியை கேட்பது நீங்கள் முதல் ஆள் இல்லை என்றதும் மனம் சற்று நிம்மதியடைந்தது. I asked
my mother same question and she said sh edin not knowஇ-என் தாயிடம்
இத்பற்றிக்கேட்டேன். அவர் எனக்கேதெரியவில்லை என்றார்" என்று சொல்லிய வண்ணம் சிரித்தார். அவளின்
அழகைவிட அந்த நகாச்சுவை பாணிஎன்னைக்கவர்ந்தது. No, I was jokingஇ இல்லை நான்
வேடிக்கையாகத்தான் சொன்னேன். என் தந்தை ஒரு ஐரோப்பியர்தான். நான் சிறுமியாக இருக்கும்போதே
இறந்து விட்டார். வெள்ளைத்தோல் உள்ள ஒரு மனிதர்தான் என் நினைவுக்கு வருகிறாரே ஒழிய அவரைப்
பற்றிய முழு விவரங்களை என் தாயும்சொல்லவில்லை எனக்கும் அவரைப் பற்றிஅறிந்துகொள்ள வேண்டும் என்ற
ஆவல் எழவில்லை என்றாள். நாங்கள்பேசிக்கொண்டிருக்கும்போதே படகு திசை மாறி நாங்கள் புறப்பட்ட
இடத்திற்கே திரும்பிச்சென்றது.

அங்கு எங்களுக்காக வைத்திருந்த தேநீர்விருந்தில் கலந்துகொண்டோம். ஒரு தட்டில் சமோசா, கேக் மற்றும்
பிஸ்கோத்துகள் என எடுத்துக்கொண்டு படகின் மேல்புரத்திற்குச் சென்றேன். அங்குபெரியவர் நண்பர்
சிவலிங்கம் இயற்கைக் காட்சியை ரசித்த வண்ணம் நின்று கொண்டிருந்தார். அந்திமயங்கும் வேளை. சூரிய
பகவான் ஆற்றையும் தரையையும் ஆரத் தழுவும் துடிப்பில் மெல்ல செவ்வானத்திலிருந்து கீழே
இறங்கிக்கொண்டிருந்தார். இத்தகைய இயற்கைக் காட்சியை அடுக்குமாடிக் கட்டடங்கள் நிறைந்த எங்கள் நாட்டில்
பார்க்கவே முடியாது. நான் எடுத்துவந்திருந்த ஏஐசி AIC (any idiot can
camera-automatic)காமிரா வழி பல படங்களைஎடுத்துத்தள்ளினேன்.

ஏதாவது சாப்பிட்டீர்களா என்று நண்பர்சிவலிங்கத்திடம் கேட்டேன். சாப்பிட்டேன் ஊரிலிருந்து வந்து நாலு
நாளாகப்போகுதா இட்சலி,தோசை ஞாபகம் வந்துவிட்டது என்றார் சிரித்துக்கொண்டே. வீட்டில் மனைவிக்கு
ஓய்வுள்ள நாளில் மட்டும் அந்த வசதி கிடைக்கும் எனக்கு. மற்றபடி கோது ரொட்டித்துண்டுதான் காலையில்
பசியாறுவதற்கு என்பதால் வங்காளதேசத்தில் எனக்கு அவ்வளவாக உணவில் வேறுபாடு தெரியவில்லை. மேலும்
மதிய இரவு உணவிற்கு நான்(nan), பூரி, நாட்டாட்டு இறைச்சி பிராயாணி என பலஉணவு வகைகளை
நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் பரிமாறினார்கள். எங்கள் நாட்டு நானைவிடவங்காளதேச நான் சற்று
மொத்தமாகவும் சுவையாகவும் இருந்தது.விருந்தோம்பலில் வங்காளதேச மக்கள்எவ்விதத்திலும் சளைத்தவர்கள்
அல்ல என்பதை அவர்கள் படைத்த மேற்கத்திய கிழக்கத்திய உணவு வகைகளிலிருந்து தெரிந்தது.

படகு நாங்கள் புறப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பியதும் நாங்கள் ஏறிவந்த பஸ்சில் மீண்டும்
உட்கார்ந்தோம். பஇஸ்சில் இருந்த குளுகுளுவசதி இயங்கவில்லை. இரவு ஏழு மணிஇருக்கலாம். அப்போதும்
புழுக்கம் குறைந்த பாடில்லை. சன்னல்களைஎல்லாம் ஓட்டுநரின் உதவியாளர் திறந்துவிட்டார். சாலைகளிலும்
சேரிகளிலிருந்தும் வந்த ஒரு வகையானநெடி மூக்கைத்துளைத்தது. எனக்கு அருகில்இருந்தவர் சன்னலைச்
சாத்தினார். அதைக்கண்ட ஓட்டுநரின்உதவியாளர் மீண்டும் சாத்திவிட்டுச்சென்றார். அவர் வேறு பக்கம்
திரும்பியதும் சன்னலை மீண்டும் சாத்திய அவர் தோள்களை உலுக்கிக்கொண்டேஎன்னைப்பார்த்துப் புன்னகை
செய்தார். தூய்மையான சுற்றுச்சூழலில்வாழ்ந்தவர்களுக்கு காற்று கொண்டு வந்தஅந்த நெடி வெறுப்பைத்
தந்திருக்கலாம். ஆனால் அதையே சுவாசித்துக்கொண்டு வாழ்ந்து வரும் உள்ளூர் மக்களை அவர்கள்
நினைத்துப்பார்ப்பதில்லை. அத்தகையசூழலில் பிறந்து வளர்ந்து சிறு வயதிலேயே வெளிநாடு
செல்லாதிருந்தால் நானும் அத்தகைய மக்களில் ஒருவராக இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு மூலையில்
வாழ்ந்திருப்பேன். இத்தகைய நினைவுஇந்தியத்துளைக்கண்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் எனக்கு வருவதுண்டு.
அப்போதெல்லாம் நல்ல வாழ்விற்கு வித்திட்டு தன்னோடு வாழ தன் குடும்பத்தைஅழைத்துக்கொண்ட என்
தந்தையாருக்கு மனதில் நன்றி சொல்லிக்கொள்வேன்.

ஆனால் இப்போது அந்த நெடி என்னையும்வாட்டியது. பஸ் மீண்டும் மற்ற வாகனங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு
மெல்ல நகர்ந்தது. ஓட்டலைச் சேர்ந்துதம்தான் பலரால் நிம்மதியாக மூச்சுவிடமுடிந்தது.

இந்திய துணைக்கண்ட மக்கள் இரவு நேரசாப்பாட்டை இரவு 8.30 அல்லது 9 மணிக்கு உண்பது வழக்கம் என்றாலும்
சீன மலாய் நண்பர்களுக்கு அது சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அவர்கள் பெரும்பாலும் இரவு உணவை
மாலை 6 அல்லது 7 மணிக்குள் முடித்துக்கொள்வார்கள். ஆகவே இங்கு இரவு உணவுக்கு 8 மணிக்கெல்லாம்
வரவேண்டும் என்று அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தாலும் இரவு 9மணிக்குத்தான் உணவைப்
பரிமாறுவார்கள். இப்படி நாங்கள் உணவிற்காகக் காத்திருக்கும்போது பழங்களைஎடுத்து வந்து ஒரு பேராளர்
சாப்பிடுவார். இப்படி பழங்களை முதலில்சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று தான்எங்கோ படித்ததாதகவும்
அப்படியே தான் செய்து வருவதாகவும் சொன்னார். நாங்களும் அப்படியே செய்தோம்.பலருக்கு அது
விநோதமாகத் தோன்றியது. உணவுபரிமாறுபவர்களுக்கு அது குழப்பத்தைஏற்படுத்தியது. Sir, you are
having your dessert so soon?இ என்று கேட்டுவிட்டுச்செல்வார்கள்.

Dessertஇ என்றதும் அச்சொல் குறித்து அங்குஏற்பட்ட ஓர் இனிய அனுபவத்தை உங்களுடன்
பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும்.

வங்களா தேச செலவு நாளையுடன் முடிவுறுவதால் அப்போது சொல்கிறேனே?
அன்புடன்
பழனி