From Bala Pillai Sat Sep 11 03:12:32 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 11 Sep 1999 10:15:26 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 22489 invoked from network); 11 Sep 1999 10:15:23 -0000
Received: from armstrong.apic.net (203.22.101.2) by qg.egroups.com with SMTP; 11 Sep 1999 10:15:23 -0000
Received: from mandela (nas0ppp51.apic.net [203.22.103.61]) by armstrong.apic.net (8.8.7/APIC-2.1) with SMTP id UAA23005; Sat, 11 Sep 1999 20:15:09 +1000 (EST)
Message-Id: <199909111015.UAA23005@...>
X-Org: The Asia Pacific Internet Company Pty. Ltd.
X-URL: http://www.apic.net/
X-Sender: @ (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 4.0
Date: Sat, 11 Sep 1999 20:12:15 +1000
To: tamil@...
From: Bala Pillai
Cc: agathiyar@egroups.com
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Is Astrology Bah Humbug? Meykandar (fw)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1969

Is Astrology Bah Humbug? Bah Humbug That Jaws Ignorant Masses And
"Pretending-to-be-Smart" Opinion Leaders and Keeps the Masses & Millenia
Tamildom Down? Meykandar's Reasoning (fw)

நன்றி: தத்துவராயன்


மெய்கண்டாரும் சோதிடக்கலையும்

அன்பர்களே,

மெய்கண்டாரைப் பற்றிய இந்த 5-வது மடலில் இன்று இந்து மக்களிடையே மிக விரிவாகப் பரவி அவர்கள
ழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும் சோதிடக் கலை சாதகக் கலை என்பவற்றிக்குசைவ சமயத்தில் இடமில்
மெய்கண்டாரின் ஆதரவும் இல்லை என்றுவிளக்கப்போகின்றேன். எப்படி உண்மையான சைவ சமயத்தில் சாதிச்
சிந்தனைக்கு அறவே இடமில்லையோ அதேப் போலத்தான் இந்த பொய்கலைகளாகிய சோதிடக்கலைக்கும்
சாதகக் கலைக்கும். இது இவ்வாறு இருக்கஅதனைக் கண்டிக்க வேண்டிய பல நல்ல சமயஅறிஞர்கள், அதிலும்
நாம் பெரிதும் மதிக்கும் டாக்டர் ஜெயபாரதி அவர்களும் அவர்தம் தோழர்களும்இதனை ஆதரித்து வளர்ப்பது
வேதனைக் குரிய வொன்றாகும். இதனால்டாக்டர் ஜெயபாரதி அவர்களையும் வாதுக்கு இழுக்கவேண்டி
இருக்கின்றது. பி பாயல் பக்கப் பாயல்என்றெல்லாம் ஆடாது அவரும் அவர்தம் தோழர்களும் இந்த வாதத்தில்
கலந்து கொள்வார்க என்று எதிர்ப்பார்க்கின்றேன். இது இந்து மக்களிடையே மிகப் பரவலாக பிடித்திருக்கும்
வியாதி என்பதால், எ கருத்துக்கள்பெரும்பாலோர்க்குப் பிடிக்காது என்றேநினைக்கின்றேன். இருந்தாலும்
அவை பொய்யென்று பட நா றை எதிர்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன்.

தப் பீடிகையோடு முதலாவதாக பொருத்தங்களைப் பற்றி. சாதகத்தின் அடிப்படையில் பொருத்தங்கள் பார்
திருமணம் செய்து வைப்பதே பழக்கமாகஇருக்கின்றது. பிறந்த நாள் நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு
பொருத்தங்கள் பார்ப்பது பேதமை. இப்படிப்பட்ட பொருத்தங்கள் இல்லை என்றேநினைகின்றேன்.

பொருத்தம் பல கண்டும் பொருந்தினார் வாழ்விலும்
வருத்தம் பல வருதல் வாய்மை

என்று அருட்குறளில் திருமணப்பொது என்றஅதிகாரத்தில் கூறி இருக்கின்றேன். இந்த கருத்திற்கு அரண்
சேர்ப்பதாக வாழ்வியல் உண்மைகள் மாத்திரமல்ல, தொல்காப்பியரின் களவியல் ஆய்வுகளும் இருக்கின்றன.
ஒத்த ஓர் பெண்ணும் ஆணும் திருமண பந்தத்தில் விழுவது என்பது இறைவனது ஆணையால்நடப்பது என்றுதான் அவர்
கூறுகின்றாரே தவிர சாதக பலன்களைபற்றி யாதும் கூறவில்லை. அந்த களவியல்சூத்திரம் இதோ:

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே

இதற்குப் பல உரையாசிரியர்கள் பலவாறு உரை சொல்லி இருக்கும் அதே பொழுது,ஒன்றி இருத்தல் பிரி
வேறாகி இருத்தல் என்று எப்பொழுதும் ஆகக்கூடிய இருவகை ஆண்பெண் உறவு நிலைகளில், எல்லா வகையிலும்
ஒத்த ஓர் பெண்ணும் ஓர் ஆணும் பாலதுவாக,சிவப்பிரகாச செம்பொருளாக அவர்களது உயிரோடு உயிராக
நிற்கும் தேபொழுது வேறாகி உயர்ந்தும்நிற்கும் அதன் ஆணை வழியே தான் காண்கின்றனர் என்கின்றார்.
திருமண உறவி படுப்பது இறைவனேதான்,அவனே யாருக்கு யார் பொருத்தமானவர்என்று கண்டு திருமண
பந்தத்தில் வீழ்த்துகின்றா என்கின்றார். அதன் உலகியல் வெளிப்பாடுகளைக்காணும்போது, எல்லா வகையிலும்
அந்த ஆண்மகன் உயர் ருப்பின் அத்திருமணம் கடியத்தக்கதல்ல என்கின்றார். இக்கருத்தில் ஆணாதிக்கக் கருத்து
இருப்பதாக தோன்றும். அன்பர்கள் இதனைப்பற்றி இன்னும் சிந்திக்கலாம். ஆனால்முக்கியமான கருத்து
திருமணம் என்ப றைவனது ஆணையின் பேரில் நடப்பது ஆகவே பொருத்தங்கள் பார்ப்பது வீண் என்பதே.


அடுத்ததாக இந்த சோதிடக் கலை.திருஞானசம்பந்தரின் கோளறு திருப்பதிகத்தை அறியாத சைவர்கள்
இருக்க முடியாது. ஆயினும் இன்று இந்த கோளறு திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டேநவக்கிரக வழிபாட்டை
புறுத்துகின்றார்கள். புதியதாக எழுப்பப்படும் எல்லாக் கோயில்களிலும் நவகிரகங்களுக்கு ஓர் முக்கியமான
இடம் ஒதுக்கப்படுகின்றது. தென்னாப்பிரிக்க சைவர்கள் மாத்திரம் இதற்கு விதிவிலக்கு. அவர்கள்
சிவலிங்கம் அர்த்தநாரி டிவம் நடராசமூர்த்தம் ஆகிய இவற்றைத் தவிர்த்து ஏனைய வடிவங்களை
கோயில்களில் அனுமதிப்பதில்லை. கோளறு திருப்பதிகம் என்ன சொல்கின்றது?

வேயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கை கங்கை முடிமேல்அமர்ந்தென்
உளமே புகுந்த அதனான்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

அமுதத்தை அருளக் கூடிய திங்களையும் அகத்து மாசுக்களைப் போக்கக் கூடிய ஆகாயகங்கையையும் தன்முடிமேல்
அணிந்து விடமாகிய ஆணவமலத்தை உண்டுதன் கண்டத்தில் வைத்து உயிர்களை மரணத்தி பிடியிலிருந்து காக்க
வல்ல சிவபெருமான் உமை அம்மையோடுஅகத்தே வீற்றிருக்கும் வகையில் சிவனடியார்களாக
ளங்கக்கூடியவர்களை இந்த நவகிரகங்கள் ஒன்றும் செய்யாது வாளே கிடக்கும்என்கின்றார்.

சோதிடக்கலையில் சாதகக்கலையில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இறைவன்மீது நம்பிக்கை வைக்கா
போகின்றனர். அனைத்தையும் தன் ஆணையின் ஆட்சி செய்யும் இறைவனை நம்பி வாழ்கின்றவர்கள் இந்த அற்ப
கற்களை நம்பி வாழார். விண்ணில் திரியும் சடப்பொருட்களாகிய இந்த கோள்கள் உயிரோடு உயிராக
ருப்பதில்லை, ஒருவன் என்னதான் செய்கின்றான் என்று அறிவதில்லை. அப்படியிருக்கஅவற்றால் நல்லதும் தீயதும்
நடப்பதற்கு இடம் இல்லை. அப்படியென்றால்செய்கின்ற வினைகட்கு ஏற்ப யார்தான்தக்க பயன்களை அளிப்பது?
ங்கு நமக்கு மெய்கண்டார் உதவுகின்றார்.

முதற் சூத்திரத்து வெண்பாவொன்றில் இவ்வாறு கூறுகின்றார்:

வித்துண்டா மூல முளைத்தவா தாரகமாம்
அத்தன்றாள் நிற்றல் அவர் வினையால் -- வித்தகமாம்
வேட்டுவனாம் அப்புழுபோல் வேண்டுருவைத் தான் கொடுத்துக்
கூட்டானே மண்போற் குளிர்ந்து

: ஓர் நிலத்தில் எந்த வித்து இருக்கின்றதோ அதுவே மண் குளிர்கின்ற போது, தேவையான ஈரம் வந்து
சேர்கின்ற போது மூலமாகிய வேர்விடும், செடியாக வளரும். இந்த மண்ணைப் போலத்தான் இறைவனும் .
எவ்வினைச் செய்யப்படுகின்றதோ அதற்கேற்ப இறைவன் ஓர் வித்தகனாக நின்றுவேட்டுவக் கிளி குட்டிப்
புழுவிற்கு அது வேண்டும் உருவை தருவதுபோல ஓவ்வொரு ஆன்மாவிற்கும் அது வேண்டும்உருவைத் தந்து வளர
உதவுவான் என்பதே இத பொருள். ஆன்மாஎவ்வுருவை வேண்டுகின்றதோ, தான் செய்கின்ற வினைவழி
எவ்வுருவைத் தான் மெய்யாக வேண்டி நிற்பதை உணர்த்துகின்றதோ, அதற்குத் தக அவ்வடிவைத் தந்து உதவுகின்றான்
இறைவன்.

செய்கின்ற வினைகட்கு ஏற்ப அவை உணர்த்தும் வேண்டுருவிற்கு ஏற்பவே நடப்பவை நடக்கும் என்ற கருத்து இங்கு
நிலவுவதைக் காண்க.

இனி இந்த சோதிட்டாதிகலைகள் பிழையான கலைகள் என்று கூறுதற்கு ஏதுவாக அடுத்த வெண்பா.

நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில்
தாக்காது நின்று உளத்திற் கண்டு இறைவன்-- ஆக்காதே
கண்ட நனவு உணர்வில் கண்ட கனவு உணரக்
கண்டவனின் இற்று இன்றாங் கட்டு

மிக ஆழமான பல விசயங்களைக் கூறிச்செல்லும் இவ்வெண்பாவின் முழுபொருளை இங்கு விளக்கத் தேவையில்லை.
முக்கியமாக உணர்த்தப் படுவது: இறைவன் அநாதியே முத்த சித்துப் பொருள் என்பதின் காலவுணர்வி
தாக்கமின்றி நின்று நோக்காது நோக்கி, ஒவ்வொரு ஆன்மாவும் தானேயாய்அந்நியமின்றி நின்று அதனை
உள்ளவாறு பிழையற உணந்து தக்கது செய்வன் என்பது. இவ்வாறு செய்வதன் ஆன்மாகளுக்கு உள்ளதுபோல சுட்டுணர்வி
படுத்தும் கட்டுக்கள் இல்லையாம். எதுபோல்எனின், ஒருவன் ஓர் கனவினக் காண, அந்தக் கனவில் கண்ட
விசயமே பிறகு நிகழ்ச்சியாக அதனைக் காணும்போது ஏற்கனவே அறிந்த ஒன்றுஎன்ற மீட்சி உணர்வு
(recognition) தோன்றுமே ஒழிய அறியாததைஅறியத்தரும் ஒன்றைக் காண்கின்றோம் என்ற உணர்வை அல்ல
என்பதுபோல் என்க. றைவன் யாண்டுமேகாலவுணைவில் படான் என்பதே இதன் கருத்து.

படியாயின் இறைவனோடு ஒன்றி அவனேத்தானேயாய் நின்று அவன் அருளை பெற்றுஉய்வதற்கு காலக் கழற்சி
செய்யவேண்டும். இதனால் கால உணர்விலேயே ஓர் ஆன்மாவைப் படுத்தும் சோதிடாதிகலைகளை விடவேண்டும்,
நிச்சயமாக விடவேண்டும். இவற்றை நம்பி வாழ்ந்தால் காலவுணர்க்கு நம்மை சிறை படுத்தி அவ்வப்போதா
பரம்பொருளோடு ஒன்றி மகிழ்வதைஇழப்போம்.இதனால் இறையருளைப் பெறமுடியாதும் போம்.

எவ்வாறு குருவழிபாட்டை அளவிற்கு மீறி வளர்த்து இறைவனை மறந்து விட்டோமோ அதேப்போலத்தான் இந்த
சோதிடாதிகலைகளை வளர்த்து இறைவனை தூரமாக்கிவிட்டோம், மறந்து விட்டோம். சொற்களும் எழுத்துக்களும்
மங்களமும் இல்லை அமங்களமும் இல்லை. அவற்றிற்கு ஓசை நயங்களே உண்டு. இறையருட்பதிவே மங்களமாகும்,
பிறவல்ல.

மற்றவை அன்பர்கள் எழுப்பக் கூடிய கேள்விகளைப் பொருத்து.

டாக்டர் ஜெயபாரதியும் தோழர்களும்நழுவாது எனது விளக்கங்கட்கு மறுப்பு (இருந்தால்) தெரிவிப்பார்கள்
என்று நம்புகின்றேன். இணக்கத்தோடு கூடியஓர் உடன்பாடு காண்பதே எனது நோக்கம்.

அன்பன் கி.லோகநாதன்