From jay bee Sat Sep 11 04:26:01 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 11 Sep 1999 11:28:55 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14235 invoked from network); 11 Sep 1999 11:28:53 -0000
Received: from web1405.mail.yahoo.com (128.11.23.169) by qg.egroups.com with SMTP; 11 Sep 1999 11:28:53 -0000
Message-ID: <19990911113228.16701.rocketmail@...>
Received: from [202.188.69.186] by web1405.mail.yahoo.com; Sat, 11 Sep 1999 04:32:28 PDT
Date: Sat, 11 Sep 1999 04:32:28 -0700 (PDT)
From: jay bee
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: Newton's Laws in VeNbaa format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 1970

அன்பர்களே,

--- "N. Swaminathan" wrote:
> இந்த விளையாட்டு முன்னமே ஆடியிருக்காங்களாம்.
>
> மூன்று விதியும் ஒரே பாட்டுல இருக்கு.

இந்த விளையாட்டு இன்னும் ரொம்ப பழமையானது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தமிழில் வழங்கப்பட்டு வருகிறது.
வைத்தியம், சோதிடம், சிற்பசாத்திரம், வர்மக்கலை,
கணித சூத்திரங்கள், சாமுத்திரிகா லட்சணம் போன்றவை பலகாலமாகவே
பாடல்கள் உருவிலேயே அமைக்கப்பட்டிருந்தன.
கொஞ்சம் வயதான சோதிடர்கள் ஜாதகத்திற்கு பலன் சொல்லும்போது
அந்தந்த கிரக இருப்புகள், காலம் முதலியவற்றிற்கு பொருத்தமான சோதிடவிதிகளை
அடக்கிய பாடல்களைச் சொல்லி விளக்குவார்கள்.
உதாரணத்திற்கு ஒன்றிரண்டைப் பார்ப்போம்.
சோதிடத்தில் ஜனனஜாதகம்,தசாபுக்தி,கோசாரம்,போன்ற பல
அமைப்புகளின் கூட்டு விளைவுகளை வைத்து பலன் சொல்லப்படும்.
ஒவ்வொன்றிலும் பலவகையான கூட்டமைப்புகள் இருக்கின்றன. இவற்றை
விவரித்து, அவற்றின் பலனையும் நினைவில் வைத்துக்கொள்வது மிகமிகச்
சிரமம்.
ஆகவே அவற்றை எளிய பாடல்களாக யாத்துள்ளனர். அவற்றை
மனப்பாடம் செய்தல் அவ்வளவு சிரமமில்லை.

சுக்கிரதசையில் சந்திரபுக்தியின் பொதுப்பலன்களை இந்தப்பாடல்
கூறுகிறது.

புகலவே சுக்கிரதசை சந்திரன்புத்தி
பொருந்திய வருடம் ஒன்றும் மாதமெட்டும்
தகலவே யதன்பலனைச் சொல்லக்கேளு
தாங்கிடுமே தரித்திரமுந் தொழிலும் நஷ்டம்
இகலவே வஸ்திரா பரணம் போகும்
இன்பமாமிவர் புத்தி கடையில்தானும்
பகலவே செல்வமதுப் பல்த்தி ஓங்கும்
பார்புகழக் கீர்த்தியது கொள்வான் பாரே!

போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னீராயிரம் போன்ற நூல்களில்
பலவிஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் வைத்தியமும் அடங்கும்.
எத்தனையோ மருந்துகளை சித்தி செய்யும் முறை, அவற்றை எந்த நோய்களுக்கு
எப்படி கொடுக்கவேண்டும் என்றெல்லாம் வரும்.
அந்த Formulary போன்ற விஷயங்களை பாடல்களாக அமைத்திருப்பதால்
அவற்றை மனப்பாடம் செய்து நினைவில் இருத்திக்கொள்ளமுடிகிறது.
விரைவில் கற்றுக்கொள்ள இம்முறை பயன்படுவதாக ஏற்றுக்கொண்டு
பல்கேரிய வல்லுனர் Dr.Lozanov போன்றவர்கள் வேறு சில கற்றல்
முறைகளில் புகுத்தியுள்ளனர்.

அன்புடன்

ஜெயபாரதி


>அருளரசனின் நியூட்டனின் விதிகள் வெண்பா வடிவில்
>http://forumhub.com/tlit/16462.16935.01.33.23.html

சீராக நேர்கோட்டி லோட்டமும் நிற்றலும்
மாறா வெளிவிசை யின்றியே ; - தேர்வாய்
விசையென்ப தோட்டத்தின் மாற்றமே மேலும்
விசைக்கெதி ருண்டாம் விசை.

sIrAga nErkOtti lOttamum niRRalum
mArA veLivisai yinRiyE; - thErvAy
visaiyenba dhOttaththin mARRamE mElum
visaikkedhi ruNdAm visai.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

===========================================================

>
> அருளரசனின் நியூட்டனின் விதிகள் வெண்பா வடிவில்
> http://forumhub.com/tlit/16462.16935.01.33.23.html
>
>
>
> சீராக நேர்கோட்டி லோட்டமும் நிற்றலும்
> மாறா வெளிவிசை யின்றியே ; - தேர்வாய்
> விசையென்ப தோட்டத்தின் மாற்றமே மேலும்
> விசைக்கெதி ருண்டாம் விசை.
>
>
> sIrAga nErkOtti lOttamum niRRalum
> mArA veLivisai yinRiyE; - thErvAy
> visaiyenba dhOttaththin mARRamE mElum
> visaikkedhi ruNdAm visai.
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்
>
>
>
------------------------------------------------------------------------
> Was the salesman clueless?
> Productopia has the answers.
> http://clickhere.egroups.com/click/555
>
>
>
> eGroups.com home:
> http://www.egroups.com/group/agathiyar
> http://www.egroups.com - Simplifying group
> communications
>
>
>
>
>

__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com