From Palaniappan A Sat Sep 11 08:50:05 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 11 Sep 1999 15:52:58 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 15703 invoked from network); 11 Sep 1999 15:52:52 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qg.egroups.com with SMTP; 11 Sep 1999 15:52:52 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id XAA03153; Sat, 11 Sep 1999 23:52:48 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp251.dyn85.pacific.net.sg [210.24.85.251]) by pop1.pacific.net.sg with SMTP id XAA26860; Sat, 11 Sep 1999 23:52:45 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990911233310.00794530@...>
X-Sender: pala@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sat, 11 Sep 1999 23:33:10 +0800
To: globaltamil@..., agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Bangladesh Travelogue 5
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1971

இஅன்பு நண்பர்களே,

பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும்.>

படகுச்சவாரிக்குச் சென்று திரும்பியநாங்கள், இரவு நேர உணவிற்காக ஓட்டலில் உள்ள நீச்சல்
குளத்தருகில் போடப்பட்டிருந்த கொட்டகையின் கீழ் அமர்ந்து அங்கு வாசித்துக்கொண்டிருந்த சித்தார் இசையை
ரசித்துக்கொண்டிருந்தோம். எங்கள் மேசயில் நான்கு ஐந்து நாற்காலிகள் காலியாக இருந்தன. அவற்றில்
ஒன்றில் மங்கோலிய நாட்டைச் சேர்ந்தவரும் மற்ற ஒருவரும் வந்து அமர்ந்தனர்.மங்கோலிய நாட்டுப்
பேராளரின் பெயர் Bold-போல்டு-பெயருக்கு ஏற்றாற்போல் துணிச்சல் மிக்கவராகத் தோன்றவில்லை. படகுப்
பயணத்திற்குப்பிறகு பஇஸ்சில் வந்த அனுபவம் அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. உணவை விரைவாக
முடித்துக்கொண்டு " I want to go back to bed early and enjoythe comfort of the
air-conditioned bedroom"இ என்று சொல்லிவிட்டுபுறப்பட்டுச்சென்றார். மற்றவர் உணவை எங்களுடன்
ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.திடீரென are you goung for dessert ? என்று வினவினார்.
Today they took us on a boat ride and are they taking us to a dessert as
well?இ இன்று நம்மை படகுக் சவாரிக்கு அழைத்துச் சென்றனர் நாளைக்கு நம்மை பாலைவனத்திற்கு அழைத்தா
போகப்போகிறார்கள் என்று என்னைப்பார்த்துக்கேடடார். இல்லையே அப்படி ஒன்றும் நிகழ்ச்சியில்
இருப்பதாகத் தெரியவில்லையே என்றேன். மீண்டும் அவர், no we dont have to go far, dessert
is thereஇ என்று பழங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டினார். மேசையிலிருந்த
மற்ற அனைவரும் சிரித்துவிட்டோம். டிசர்ட்டை டெசர்ட்டு என்று உச்சரிப்பு தவறிசொன்னதால் வந்த
கோளாறுதான். பாவம் அவர். ஒரு நாட்டின்நாடாளுமன்றத்தில் புதிதாக assistant clerk காகப்
பணியேற்றிருக்கும் அவர் த்ன தவற்றை நினைந்து நாணிக்குறுகிப்போனார். இருப்பினும் அவர் தன்னை
சுதாரித்துக்கொண்டார். பின்னர் நாங்கள் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றஆட்சி முறை பற்றியும் சில
நாடுகள் எப்படி பிரிட்டிஷ் - வெஸ்ட்மினிஸ்டர் பாணி நாடாளுமன்ற ஆட்சிமுறையில் மாற்றங்கள் செய்துள்ளதுடன்
சில பாரம்பரியங்களை இன்னும் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு வருகின்றனஎன்றும் பேசிக்கொண்டு
வந்தோம். அப்போது நாடாளுமன்ற அலுவலரின் பெயர் மாற்றம் பற்றி பேச்ச நடந்தது. இன்னும் பல
நாடுகளிலே அவரை Clerk of parliamentஇ என்றுதான் அழைக்கின்றனர். சில நாடுகள்,இஇந்தியா
வங்காளதேசம் உள்பட, அவரை Secretary Generalஇஎன்று அழைத்துவருகின்றன. இப்பதவியைப்
பட்டதாரிகளுக்குத்தான் கொடுப்பார்கள். சட்டத்துறையில் அனுபவம் இருந்தாலும்கொடுப்பார்கள். அவருக்கு
உதவியாக அத்தகுதியுடையவர்களைத்தான் அமர்த்துவார்கள். ஆனால் பெரும்பாலானமக்கள் கிளார்க் என்றால்
மிகவும் கீழ் மட்ட அதிகாரி என்றுதான்நினைத்துக்கொண்டிருக்கின்றனர். தன் நாட்டிலும் அதே நிலைதான்
என்று கூறிய அவர்(பாலைவனக்காரர்தான்)தன் அனுவபத்தைச் சொன்னார்.
நீண்ட நாட்களாகப் பார்க்காத ஓர் உறவினரை அவரை அண்மையில் சந்தித்து குசலம் விசாரித்திருக்கிறார்.
உன் அண்ணன்கள் அக்காள் எல்லோரும் என்னசெய்கிறார்கள் என்று விசாரித்திருக்கிறார்.
ஒரு அண்ணன் வழக்கறிஞராக இருக்கிறார்,மற்றவர் மருத்துவர், அக்காள் நீதிமன்றத்தில் பதிவதிகாரியாக
இருக்கிறார் என்று அவர்களைப்பற்றிக்கூறினாராம். அது சரி நீ என்ன செய்கிறாயி என்று உறவினர்
கேட்டாராம். நான் நாடாளுமன்றத்தில்உதவி அலுவலராக (assistant clerk ) பணியாற்றுகின்றேன்
என்றாராம். அதைக்கேட்ட உறவினர், " dontworry son, every family has a blcak sheep"
கவலைப் படாதே, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு கறுங்காலி இருக்கத்தான் செய்யும்என்றாராம். டெசர்ட்டில்
இழந்த தன் மதிப்பை இந்தக் கதை சொல்லி அவர் அதனை மதிப்பை மீட்டுக்கொண்டார்.

மறுநாள் மாநாட்டின் இறுதி நாள். அன்றுதான் பரிந்துரைகள்கள், தீர்மானங்களாக நிறைவேற்றப்படும்.
ஒவ்வொரு நாடும் தத்தம் நாட்டின் நலனைப்பாதுகாக்கும் பொருட்டு தீர்மானங்களைக் கொண்டு வரும் அல்லது
தகராறு செய்யும் தனது அண்டை நாட்டைக்கண்டிக்கும் வகையில் நேரடி அல்லது மறைமுகத் தீர்மனங்களை
நிற்வேற்ற முயற்சி செய்யும். கூட்டத்திற்குத் தலைவராக இருப்பவருக்குப் பெரும்தலைவலிதான். இருப்பினும்
மாநாட்டை வங்காளதேச நாடாளுமன்றநாயகர் செவ்வனே முடித்துவைத்தது எல்லோருக்கும் மன நிறைவாக
இருந்தது. மாநாடு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே முடிந்துவிட்டதால், மதியஉணவிற்குப்பிறகு இருந்த
நேரத்தில் கடைகளுக்குச் சென்று வரலாம்என்று நினைத்தோம்.

சேலைக் கடையில் பேரம் பேசி ய வெளிநாட்டு ஆடவர்
நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு என சேலைவிற்பனைக் கூடம் ஒன்றை
வரவேற்புப் பகுதியில் ஒரு வர்த்தக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த
பட்டு மற்றும் காட்டன் சேலைகள் பார்ப்பதற்கு அழகாகவே இருந்தன. ஆனால் விலைநியாயமானதா என்று
தெரியவில்லை. சேலைகள் வாங்க வேண்டும் ஜோதிசிடம் சொல்லி வைத்திருந்ததால் அவர் எங்களை சேலைக்
கடைகள் உள்ள பகுதிக்கு அழைத்துச்சென்றார். கிட்டத்தட்ட சிங்கப்பூரில் உள்ளசிராங்கூன் ரோட்டில் உள்ள
சேலைக்கடைகளைப் போலத்தான் அமைப்பில் அவை அமைந்திருந்தன. அங்கு வேலைசெய்த பெண்கள் சிரித்த
முகத்தோடு பணிவன்புடன் எல்லாச் சேலைகளையும் விரித்துக்காட்டியது எங்களுக்குவியப்பாக இருந்தது.

வங்காளதேசப் பெண்களும் சேலைகளைத்தான் அதிகமாக அணிகின்றனர். சில்வார்காமிஸ் ஆடையை நான்
அதிகமாகக் காணவில்லை. சேலை அணியும், சற்றுப் பழமைப்போக்குடைய இஸ்லாமியப் பெண்கள் சேலையின்
முந்தானையைக்கொண்டுதான் தங்கள் முகத்தில் முக்காடு போட்டுக்கொள்கின்றனர்.ஏறக்குறைய நம் தமிழ்
முஸ்லிம் பெண்களைப்போலத்தான் என்றுவைத்துக்கொள்ளுங்களேன். தொப்புளையும்அவர்கள் காட்டுவதில்லை.
இந்துக்கள் சிறிய பொட்டை நெற்றியில் வைத்திருக்கின்றனர். "பொட்டு வைத்தமுகமோ" என்று பாடும்
அளவிற்குப் பெரிய பொட்டுக்கள் ஒன்றும்இல்லை. கனகச்சிதமான சிறிய பொட்டுதான்.

மனைவி, சகோதரி, தம்பிகளின் மனைவிகள் என்று பலருக்கும் சேலைகளை எடுத்துவைக்க அவை மலைபோல்
குவிந்திருப்பவதைப் பார்த்த விற்பனைப் பெண்ணுக்கு மகிழ்ச்சி எனக்கோ ஒரேமலைப்பு. என்னோடு வந்தவர்
இந்தியர் அல்ல. ஆனால் அவரும் பல பட்டுச்சேலைகளை வாங்கினார். அவற்றைக்கொண்டு தன் மலாய் மனைவி
பல ஆடைகளைத் தைத்துக்கொள்ள முடியும்என்பதால் அவர் அவற்றை வாங்கினார்.இருவருமாக நிறையச்
சேலைகளை ஒரே கடையில் வாங்கியுள்ளதால் விலையைக் குறைக்குமாறு இருவரும்பேரம் பேசினோம்.
கடைக்காரப் பெண்கள் மசிவதாகத்தெரியவில்லை. இக் கடையில் Fixed price தான் சார் இங்கு பேரம்
பேச முடியாது. நல்ல தரமான நியாமமான கடை. நாங்ளள் லல்லாம் இங்குதான் வந்துவாங்குவோம் என்றார்.
அவரை நம்பியதால் கடைக்காரர்கள் கேட்ட விலையையே கொடுத்து வாங்கினோம். எனக்கென்னவோ விலை
ஏறக்குறைய சிங்கப்பூர் விலைபோல்தான் தோன்றியது. இருப்பினும் வெளிநாட்டுப் புடவை என்றால் மனைவிக்கும்
தங்கைகளுக்கும் பிகக்காதா என்ன? ஓட்டலுக்கு வந்ததும் அறையில் சேலைகளை வைத்துவிட்டு கீழே உள்ள
ககைக்குச் சென்று பார்த்ததில் விலை சற்று வித்தியாசமாகத்தானிருந்தது. அதில் இருவருக்கும்
மகிழ்ச்சிதான்.

அன்றிரவு எங்கள் நாட்டுக் குழுவினர் சிங்கை திரும்பினர். அவர்களை விமானநிலையத்தில் அனுப்பிவிட்டு
ஓட்டல் திரும்புகையில்வவாகன ஓட்டுநர்ஏதோ ஜோதிசிடம் வங்காள மொழியில் சொல்லிக்கொண்டு
வந்தார். சிங்கப்பூரில் தனக்கு ஒரு வேலைத் தேடித்தருமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். எங்கள்
நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வங்காளதேசத் தொழிளார்கள் வேலை செய்கின்றனர். எல்லோரும்
ஏஜண்டுகள் மூலம்தான் வேலைக்கு வரவேண்டும். அரசாங்க ஊழியனான எனனால் ஒன்றும்செய்ய இயலாது என்று
சொல்லியதை அவரால் நம்பமுடியவில்லை. ஊழல் அற்ற சுத்தமான அரசாங்க ஊழியர்கள் மற்ற நாட்டில் இருப்பது
அவருக்குத் தெரியாமலிருக்கலாம். பணக்கார நாட்டிலிருந்து வரும் ஆள் நமக்குஉதவமடட்டார் என்று கூட
நினைத்திருக்கலாம். ஆனால் எங்கள் நாட்டு நிலைமையை எடுத்துக்கூறியதும் சரி சார் முயற்சிசெய்யுங்கள்,
வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள் என்றார்.

வங்காளதேசத்தைக் கொஞ்சமாவதுசற்றிப்பார்க்கவேண்டும் என்று நினைத்துஒரு நாள் நான் தங்கியிருந்தேன்.
காலை ஒன்பது மணிக்கு வருவதாகச் சொல்லிச்சென்ற ஜோதிஷ் 10 மணியாகியும்வரவில்லை. ஜோதிஷ்
வந்தாரா? இல்லை ஓட்டலிலேயே பொழுதைக் கழிக்க நேரிட்டதா?

இன்றோடு இந்தப் பயணச் செலவை முடித்துக்கொள்ள முடிவு செய்திருந்தேன் ஆனால் கடிதம் நீண்டு விட்டதால்
மீதமுள்ளவற்றை நாளை அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளேன். நாளை நிச்சயம் இத்தஒடர் ஒரு முடிவுக்குவரும்.
அன்புடன்
பழனி