From Sat Sep 11 18:20:37 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 12 Sep 1999 01:23:31 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 61 invoked from network); 12 Sep 1999 01:23:29 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 12 Sep 1999 01:23:29 -0000
Received: from jaring.my (j16.glg87.jaring.my [161.142.207.90]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id JAA03482; Sun, 12 Sep 1999 09:23:22 +0800 (MYT)
Date: Sun, 12 Sep 1999 09:23:22 +0800 (MYT)
Message-Id: <199909120123.JAA03482@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 231
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1975

அன்பர்களே,

நான் பெரிதும் விரும்பி அகமகிழ்வோடு வாழும் இந்த மலை நாட்டிலே ஏறக்குறைய இருபது இலட்சம் தமிழ்
மக்கள் வாழுகின்றனர். அவர்கட்கு மூலைமுடுக்கெல்லாம் கோயில்கள். எங்கேயாவது ஓர் ஆலமரமோ அரச் மரமோ
இருந்துவிட்டால் போதும். ஒருவன் வந்து ஓர் திரிசூலத்தைக் குத்திவிடுவான், இன்னொருத்தன் வந்து தேங்காய்
உடைத்து பூசை செய்வான். இது படிப்படியாக வளர்ந்து நாளடைவில் ஓர் சிறிய கோயில் ஆகிவிடும். பிறகு
அந்த நிலத்தின் சொந்தக்காரர்கள் வீட்டு மனைக் கட்டுவதற்காக அந்தக் கோயிலை உடைப்பர். அதுபொழுது ஓர்
கலவர சூழ்நிலை பிறக்கும். சாலை ஓரங்களிலும் இப்படித்தான். பல சிறுசிறுதெய்வங்களுக்கு சிறு சிறு
கோயில்களை எழுப்பி விடுகின்றனர். பிறகு சாலையை விருத்தி செய்ய கோயில் உடைப்பு கலவரம்
என்றவாறு பல அலங்கோலங்கள். இத்தனைக்கும் பக்கத்திலேயே ஒர் நல்ல கோயில்இருக்கும். அந்தக்
கோயிலோடு போட்டிப் போடுவதுதென்று பக்கத்திலேயே இன்னொரு கோயில்!பிறகு அதற்கென திருவிழா
கும்பாபிசேகம் தேர் என்றவாறு வர, மஞ்சள் மகிழ் குடத்தோடு வசூலிற்கு அக்கம்பக்கத்தார் இல்லங்களுக்குப்
படையெடுப்பு. நான் தெய்வ காரியங்களுக்காக எனது வருமானத்தில் ஓர் சிறிது பணம் எப்பொழுதும் ஒதுக்கி
வைப்பேன். இப்படிப்பட்ட மூலைமுடுக்கு கோயில்களை நான் ஆதரிக்கவேண்டுமா? என்றகேள்வி எழும்.
ஆதரிக்காதுபோவோமே என்று நினைத்தால் மனதில் ஏதோ உறுத்தும் ஆனால் இப்பொழுது அப்படியில்லை. யாரோ
ஒருவன் தன் விருப்பத்திற்கு ஓர் கோயிலை எழுப்புவது தவறு அதிலும் பக்கத்திலேயே நல்லவொரு கோயில்
இருக்கும்போது பெருந்தவறு என்று துணிந்துஅவர்களைக் கண்டிக்கவும் தொடங்விட்டேன். இவ்வாறு தான்
விரும்புவகையில் ஓர் போட்டி உணர்வோடு ஓர் கோயில் எழுப்புவதும் ஆணவச் செருக்கின் வெளிப்பாடு
என்பதாக எனக்குப் படுகின்றது.. அது தொடர்பாக இன்றையக் கவிதை.

தத்துவராயன்


231. அழகோ இது?


ஓராயிரம் தெய்வங்களைக் கண்டு
நூறாயிரம் கோயில்களைக் கட்டும்
ஒருவனேத் தேவன் என்ற உண்மையை
உணராது போய்விட்ட பொய்
உரை மகிழ் அன்பர்களே! மீண்டும்
உணரத் தலைப்படுவீர் அனைவருக்கும்
ஒருவனே இறைவன் என்ற
உண்மையை!

அருட்பெருஞ் சோதி அழல் வடிவம்
அகன்று அகன்று ஓடி
அழுக்குக் குழிகளில் விழுந்து
ஆயிரந் தெய்வங்களையும்
ஆயிரஞ் சாதிகளையுங் கண்டு
அல்லல் வாழ்க்கையை
அறியாமை வாழ்க்கையை
அதுவென்று அறியாதே மயக்கும்
ஆணவ யிருளில் அழுந்தி
அற்பங்கள் பல பேசி பொய்
ஆனந்தம் தூய்க்கின்றீர்
அழகோ இது?

ஊருக்கோர் ஓர் பொய் சாமியார்தோன்றி
உண்மையை உணராதாக்குகின்றனர் தாம்
உணராதே!
பாருக்கென பரமானார் பகர்ந்த மொழி
பாழாகி விழுந்து பாதாளம் புதைந்து விட்டது!

வீறு கொண்டெழுந்து உலகே வியக்குவண்ணம்
ஆடுகழல் ஒலியின் அழகுத்தமிழை
அழியாப் பேருண்மைகளின் அற்புதத்தமிழை
இனியாகிலும் கற்று இயம்புங்கள்
சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவனோடொக்கும் தெய்வம் தேடினுமில்லை
அவனோடொப்பார் ஆருமில்லை
அன்பனாய் அருளாய் அனைவருக்கும் ஒருவனாய்
தென்னாடுடைய அவன்
ர்ன்னாட்டவர்க்கும் இறைவனாய்
இருக்கின்றான் இருக்கின்றான்
என்று!







------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan