From Palaniappan A Sun Sep 12 10:44:51 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 12 Sep 1999 17:47:45 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11477 invoked by uid 7770); 12 Sep 1999 17:33:52 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.egroups.com with SMTP; 12 Sep 1999 17:33:52 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id WAA12186 for ; Sun, 12 Sep 1999 22:00:26 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp182.dyn77.pacific.net.sg [210.24.77.182]) by pop1.pacific.net.sg with SMTP id WAA11086 for ; Sun, 12 Sep 1999 22:00:23 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990912200442.019ae330@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sun, 12 Sep 1999 20:04:42 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Bangladesh Travelogue 6
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1976

இஅன்பு நண்பர்களே,


ஒரு வழியாக சற்றேறக்குறைய பத்தரைமணிக்கு மேல்தான் ஜோதிஷ் வந்து சேர்ந்தார். போக்குவரத்து
நெரிசல் சார், மன்னிக்க வேண்டும் சார்என்றார். கூடவே அவரின் நண்பரையும் அழைத்துவந்திருந்தார்.
அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் அதிகம் பேசவில்லை. இருவரும் என் அறைக்கு முதல் முறையாக
வந்திருந்தனர். அங்கிருந்த சில பொருட்கள் மீது அவர்களின் பார்வை திரும்பியதைக் கண்டுவிட்டேன்.
குளியல் அறையில் உள்ள பொருட்கள் சிலவற்றையும் பார்த்துவிட்டனர். அவர்களின்கண்களில் ஒரு ஏக்கக்
குறிப்பு எழுந்து மறைந்தது. இப்பொருட்கள்எல்லாம் நமக்குக் கிடைக்காதா என்பதுஅவர்களின் எண்ணம் என்பது
எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

சரி,இன்று எங்கே கூட்டிச் செல்லிறீர்கள்என்று கேட்டேன். முதலில் இங்குள்ள இராமகிருஷ்ண மடாலயத்திற்கும்
பின்னர் இங்கு பிரபலமாக இருக்கும் துர்கையன்மன் கோயிலுக்குப் போவோம், அதன்பிறகு இந்த நாட்டின்
தேசிய அரும்பொருளகத்திற்குச் செல்வோம். பின்னர் மதியம் நேரம் இருந்தால்மீண்டும் சில கடைகளுக்குச்
சென்று வரலாம் என்று ஜோதிஷ் ஒரு பட்டியலையே போட்டுக்கொடுத்தார்.

வங்காளதேசத்திற்கு வந்த பின்னரோவருவதற்கு முன்னரோ கல்கத்தா சென்று வரலாம் ஒரு திட்டம் இருந்தது.
ஆனால் அத்திட்டம் நிறைவேறவில்லை.பிரிவினைக்கு முந்திய டாக்காவில்அமைக்கப்பட்ட ராமகிருஷ்ண
மடாலயம் மற்றும் காளியம்மன் கோவில்போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக்காணவேண்டும் என்ற ஆசையை
ஜோதிசிடம் சொல்லியிருந்தேன்.அதைக்கருத்தில் கொண்டுதான் அவர் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. வியாழன்(கிருஷ்ண ஜெயந்தி), வெள்ளி,சனி வழக்கமானவார விடுமுறை.
ஞாயிற்றுக்கிழமைதான் வேலை செய்பவர்களுக்கு முதல் நாள். காலை 10 மணிக்கெல்லாம் போக்குவரத்து
நெரிசல் உச்சகட்டத்தை எட்டியிருந்தது.வங்காளதேசத்திற்கு ஐந்தாவது நாள்தான் காலையில் வெளியில்
செல்ல முடிந்தது. அதுவும் பயங்கரமானபோக்குவரத்து நெரிசலில். வங்காளதேசத்துப் போக்குவரத்தைச்
சமாளித்து வந்துவிட்டால் எந்தப்போரிலும் வெற்றியடைந்துவிடலாம். இத்தகைய சூழலில் வாகனத்தை ஓட்டும்
எங்கள் வாகன ஓட்டுநரின் பொறுமை, ஒன்றும் மோசமாக நடந்துவிடவில்லை என்ற மனோபாவத்தில்
வண்டிச்சக்கரத்தை சுழற்றிக்கொண்டு ஓட்டிவது ஒரு பழுத்த அனுபவசாலியால் மட்டுமே முடியும்.

முக்கிய சாலையிலிருந்து இரு சந்துகள்தள்ளி டாக்கா இராமகிருஷ்ண மடாலயம்இருந்தது. மடத்தின்
கட்டடத்தின் மேலே சிவதாண்டவத்துடன்நின்ற சிவனுக்குச் சாயம் அடித்து எவ்வளவு காலம் ஆயிற்றோ
தெரியவில்லை. இரு சாதுக்கள் கட்டடத்தின் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே
இருந்த புல்திடலின் ஓரத்தில் ஒரு சிறுகுழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு வயதுவந்த பெண்மணி
ஏதோசொல்லிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு அப்பால் காதலர்கள் போன்று தோன்றிய இருவர் அணுக்கமாக
உலகை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.

தலைமை சுவாமிஜியைப் பார்க்கவேண்டும் என்று கூறியதும் ஓர் அறைக்கு அழைத்துச்சென்று அமருமாறு
கேட்டுக்கொண்டனர். சற்று நேரத்திற்கெல்லாம் முதிய, தலைமை சுவாமிஜி வந்தார். சிங்கப்பூருக்கு சில
தடவை வந்திருப்பதாகக் கூறிய அவர்டாக்காவில் 25 வருடத்திற்கு மேலாகஇருப்பதாகக் கூறி, சிங்கப்பூர்
அரசு சுவாமிஜிகளை ஒரு குறிப்பிட்டவருடங்களுக்குப் பிறகு திருப்பி அனுப்புவது ஏன் என்று அவர்
வினவியதிலிருந்து சுவாமிஜி எல்லாவிஷயங்கள் குறித்தும் அறிந்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது.
அவருக்கு எங்கள் நாட்டு employment pass-professional passபற்றிய கொள்கைகளை
விளக்கிக்கூறினேன். ஆனாலும் சில சுவாமிஜிகள் அங்குள்ள மக்களுடனும் மடத்தில்உள்ள பிள்ளைகளுடன் ஒன்றி
விடுவதாலும் அவர்களின் திட்டங்கள்நிறைவேற்றப்படுவதைக் காணவும் அவர்களுக்கு நிரந்தரவாசம்
கொடுக்கக்கூடாதா என்று கேட்டது நியாயமாகவே பட்டது. என்னால் இயன்றளவு பேச வேண்டியவர்களிடம்
சொல்கிறேன் என்று கூறி , நினைவுக்காக அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டு விடைபெற்றேன்.

அங்கிருந்து ஐந்து நிமிடங்களில் ஸ்ரீ ஸ்ரீதக்கேசுவரி ஆலயத்தை அடைந்துவிட்டோம். மூலஇதானத்தில் அன்னை
துர்கை கம்பீரமாக வீற்றிருந்தாள். நாங்கள் அங்கு சென்றடைந்தபோது ஒரு வங்காள பக்தர் அங்குள்ள
அர்ச்சகருடன் பேசிக்கொண்டிருந்தார்.என்னுடன் வந்த இருவரும் முழங்காலை மடக்கிக்கொண்டு அன்னையை
வணங்கினர். நானோ அங்கமெல்லாம் தரையில் படும்படி தரையில் விழுந்து வணங்கினேன். அப்படிச்செய்ததும்
அவர்கள் என்னை உற்றுப்பார்த்தனர். வங்காள பக்தர் நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்று விசாரித்து
அறிந்துகொண்டார். சிங்கப்பூர் என்றதும்அவர் மகிழ்ச்சியுடன் உங்கள் பூர்வீகம்என்ன என்று கேட்டதும்
தமிழ்நாடு என்றேன். வெளிநாடு சென்றும்உங்கள் சமய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் மகிழ்ச்சி
என்று அவர் கூறியதுடன் அர்ச்சகருக்கும்விளக்கிக் கூறினார். வடநாட்டுக் கோயில்களுக்கு (ஹரித்துவார்,
காசி) முன்னர் ஒருமுறை போயிருந்த போது அனுபவித்த அர்ச்சகர் தொல்லை ஒன்றும் இங்கு இல்லை.
பிரசாதத்தை வாங்கிய பின்னர் சற்றுநேரம் அங்கு அமைதியாக இருந்தபின்னர்அவர்களிடம்
விடைபெற்றுக்கொண்டு அரும்பொருளகத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

ஒரு நாட்டின் வரலாறு, மக்களின் பண்பாடுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்நாட்டின்
அரும்பொருளகத்தைப் பார்க்கவேண்டும் என்பதை லண்டன் அரும்பொருளகத்தைப் பாரத்தபின்னர் அறிந்துகொண்டேன்.
எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்நாட்டின்அரும்பொருளகத்தைப் பார்க்கத் தவறுவதில்லை. ரஷ்யாவில் St
petersbergகில் ஒரு பெரிய கண்ணாடிப் பேழையில் ஒரு தங்கத்தால் ஆன ஒரு மரம், சேவல், மயில்
ஆகியவற்றைப் பார்த்தது இன்னும் நினைவிலிருக்கிறது. முருகனுடன் தொடர்புடையவை அவை எப்படி அங்கு போனது
ஏன் அங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் அறிந்துகொள்ளாமலிருக்கிறேன்.

வங்காள தேசத்தின் தொடக்ககால இந்துசமய, பெளத்த மத வரலாற்றைக் காட்டும் பழங்காலச் சிலைகளை
வைத்திருந்தனர். பிரம்மாண்டமான சிவலிங்கமும் சிவபெருமானின் திருத்தாண்டக உருவமும் அவற்றில் அடங்கும்.
காமிராக்களை அவர்கள் அனுமதிக்காததால் படங்கள் எடுக்கமுடியவில்லை. பெளத்த மதத்தினரின் சிலைகளும்
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.தாராவின் திருஉருவம் அன்னை உமையம்மைபோல்தான் இருந்தது.
இஸ்லாமியர்களின் தாக்கத்தைக்குறிக்கும் பல தொல்பொருட்கள் அரபுச் சொற்கள்அடங்கிய பல பேழைகள் என
தொன்மை வாய்ந்த பொருட்கள் அதிகமாக இருந்தன. மற்ற நாட்டு அரும்பொருளகங்கள் போல அதிக
விவரங்களை அவர்கள் எழுதி வைத்திருக்கவில்லை. புதுப்பிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் பல
பொருட்கள் - வங்காளப் புலி உள்பட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தவை வேறோர்இடத்திற்கு எடுத்துச்
சென்றுவிட்டனராம். இருப்பினும் அங்குசென்றதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சியே. என்னுடன் வந்த இருவரும்
என்னைவிட மகிழிச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இவ்வளவு பொருட்களும் தகவல்களும் கிடைக்குமென்று
நாங்கள் நினைக்கவே இல்லை என்று அந்நாட்டிலேயே வாழும் அந்த இரு இளைஞரும் - பலநாட்டில் வாழும்
இளைஞர்களைப் பிரதிபலிப்பது போலச் சொன்னார்கள்.

மதிய வேளை உணவைச் சாப்பிட்டுவிட்டுமாலை நாண்கு மணிக்கு மீண்டும் வெளியில் புறப்பட்டோம்.
கடைவீதிகளுக்குச் சென்று சில பொருட்களை வாங்கினாம். காட்டன் சட்டைகள் என்றால் எனக்கு விருப்பம்
அதிகம். அவற்றில் சிலவற்றை வாங்கலாம் என்று சொன்னேன். தனக்குத் தெரிந்தவரின் கடைக்கு ஜோதிஷ்
அழைத்துச்சென்றார். அங்கு ஒரு சில சட்டைகளை எனக்கும் என் பையனுக்கும் வாங்கிக்கொண்டன். அப்படி
வாங்குவதில் ஒரு வசதி. அவன் அணிவதைநானும் நான் அணிவதை அவனும் அணிந்துகொள்வோம். தவிர்க்க
முடியாத போது அவனின் ஒரு சில சட்டைகளை அணிந்து செல்லும் போது அலுவகத்தில் உள்ளவர்கள் என்ன பாலா
இன்று சட்டையின் வண்ணம் கண்ணைப் பறிக்கிறதே என்று கேலி செய்வர். கடையில்எனக்காக ஜோதிஷ் டை
ஒன்றை அன்புப் பரிசாக அளித்தார். அவருக்கு ஏதாவது கொடுக்கவேண்டுமே என்றுஎண்ணியபோது ஓட்டல்
அறையில் அவருடய அவரின் நண்பரின் பார்வை விழுந்த பொருட்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.

பெட்டி படுக்கைகளை எல்லாம் எடுத்துவைத்தாயிற்று. புறப்பட வேண்டியதுதான்.அறையைச் சுற்றி ஒரு
கண்ணோட்டமிட்டேன். எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்தாயிற்று. தனியாக ஒரு பையில் சில
பொருட்களை எடுத்து வைத்திருந்தேன். அதையும் மறவாமல் கையில் எடுத்துக்கொண்டேன். இரவு பதினொன்று
ஐம்பதுக்கு ஒவ்வொரு நாளும் டாக்காவிலிருந்து புறப்படும் எஇஸ்ஐஏ-சியா விமானத்தில்தான் பயணம்.
எங்களுக்காக தனியார் நிறுவனத்திலிருந்து ஏற்பாடு செய்திருந்த வாகன ஓட்டுநர் கையில் பத்து டாலரை
திணித்தேன். அதனைப்பார்த்துவிட்டு அவருக்குத் தெரிந்த ஒரே ஆங்கிலச் சொல்லான தாங்கியூ என்றார்.
சிறப்பு விருந்தினர்களை அனுப்பிவைக்கும் அறைக்கு அழைத்துச்சென்றனர் அதிகாரிகள். ஜோதிசும்
வந்திருந்தார். புறப்படும் நேரம் வந்துவிட்டது. ஓட்டல் அறையில் தனியாக எடுத்துவைத்திருந்த பையை
அவரிடம் கொடுத்து This is for you and your friendஇ என்று சொல்லிக்கொடுத்தேன். பைக்குள்
இருக்கும் பொருட்களைப் பார்த்ததும் அவரின் முகம் அன்றலர்ந்த தாமரைபோல விரிந்தது. என் ஓட்டல் அறையில்
அவர் பார்த்த மேசைக் கடிகாரம், கல்குலேட்டர், ஷேவிங் கிரிம், ஷேவிங் லோஷன், இன்னும் சில
பொருட்கள் அப்பைக்குள் இருந்தன.

நான்கு நாட்கள் நடைபெற்ற மாநாட்டிற்குவந்த வெளிநாட்டினர் மனம் கோணாமல்நடந்துகொள்ள வேண்டும் என்று
மாநாட்டில் ஈடுபட்டவர்கள் உழைத்தனர்.அவர்களில் ஒருவரான ஜோதிசை மட்டும்தான் என்னால்
மகிழ்ச்சியடையச் செய்ய முடிந்தது. அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பொருட்கள் ஒன்றும் எனக்குப்
பெரிதல்ல. ஆனால் அவருக்கோ அவைமகிழ்ச்சியைத் தந்தன. அந்த மகிழ்ச்சியில் திளைத்தவாறே என் முகம்
மறையும் வரை கையசைத்து வழியனுப்பிவைத்தார் ஜோதிஷ். வங்காள மக்களின் ஒரு நல்ல பிரதிநிதி அவர்.
அவரைப் போன்ற ஆர்வம் உள்ள இளைஞர்கள்நிறைய இருப்பதால்தான் வறுமையிலும்வங்காளதேசம் கலைகளில்,
இலக்கியத்தில், இப்போது ஆசிய நாடுகளில் முன்னணி இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது.

இக்கட்டுரைத் தொடரை எழுதுமாறு ஊக்குவித்த முனைவர் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
அவர் என்னைத் தூண்டியிருக்காவிட்டால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எழுத்துவடிவத்தைக் கண்டிருக்காது.
தனிக்கடிதங்கள் அனுப்பிய டாக்டர் JB, நண்பர் டாக்டர் சந்திரபோஸ், மணி மணிவண்ணன் ஆகியோருக்கும் நன்றி.
இனி நாளும் சில சொற்கள் தடையின்றித் தொடரும் என்று நம்புகிறேன். அத்திட்டத்தை இந்த ஆண்டிற்குள்
முடித்துவிடவேண்டும் என்பது என் ஆவல்.நிறைவேறுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மீண்டும் சந்திக்கும் வரை
அன்புடன்
பழனி