From Sun Sep 12 18:29:06 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 13 Sep 1999 01:32:01 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 26817 invoked from network); 13 Sep 1999 01:31:59 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 13 Sep 1999 01:31:59 -0000
Received: from jaring.my (j40.glg81.jaring.my [161.142.208.234]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id JAA04298; Mon, 13 Sep 1999 09:31:25 +0800 (MYT)
Date: Mon, 13 Sep 1999 09:31:25 +0800 (MYT)
Message-Id: <199909130131.JAA04298@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 232
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1978

அன்பர்களே,

சைவ மக்கள் அர்ச்சனை பூசனை என்பதற்காக செலவிடும் பணம் மிக அதிகமாகிக்கொண்டே போகின்றது.
இதனை மலேசியாவில் கண்டுக் கொண்டேஇருக்கின்றேன். இந்தப் பூசையைச் செய்யுங்கள் அந்த பூசையைச்
செய்யுங்கள் என்று பெரிதும் விளம்பரம்செய்து பலர் திடீர் பணக்காரர்களாகிக்கொண்டிருக்கின்றனர்.
மலேசியாவில் இதற்கெல்லாம் உடந்தையாக இருப்பவர் காஞ்சிப் பெரியவர் அருள் பெற்றவர் என்று
கூறிக்கொள்ளும் ஓர் சிவாச்சாரியார்,வடமொழி மந்திரஙகளையே ஓதித்திரிகின்ற ஒர் தமிழர். .
எல்லாம் பணத்திற்காக செய்வதுதான், மக்கள் நலத்திற்காக அல்ல என்பதை அவர்களது ஒவ்வொரு செயலுங்காட்ட
இந்த அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுவதற்கு யாரும் முன்வராத நிலையில்இக்கவிதை வழியாக என் மனக்
குமுறல்களை வெளிப்படுத்திக் கொள்கின்றேன்.

தத்துவராயன்


232: பூசைகளை செய்யாதீர்!

பூசைகளைச் செய்யாதீர் பொய்
பூசைகளைச் செய்யாதீர் உங்களுக்கோர்
புண்ணியமுண்டு இறைவனை அடைய
ஆசை உண்டெனின் செய்யுங்கள்
அருளிச் செயல்களாகப் பல!

ஆசைகளை ஒடுக்கி மெய் அன்பினைவளர்க்கும்
அறிவினை வளர்க்கும் அடியார்களேஇறைவனுக்கு
மெய் அன்பர்கள் அவர்கட்கே உரியது
அவன் அருள்1

வாணிபஞ் செய்வானல்ல இறைவன் அவனருளை
வாங்கிட முடியாது விலைகொடுத்துமேலும்
மந்திர தந்திர யந்திர வழிபாடுகள் வழியும்
வணக்க முடியாது சிவனை உங்கள்
வளப்பங்களைப் பெருக்கிக் கொள்ள!

காமனை ஏவிய கரிய மாலும் வேதனுங் கண்டனர்
கனல் விழியின் அவன் கருகி விழுந்ததை!
வஞ்சனைப் பூசையின் சிவனை வளைக்க முடியாது
கெஞ்சுதலுக்கும் இசையான் கேட்காதீர்! கேட்காதீர்!
யாதை எவருக்கு என்று கொடுப்பதென்று
அறியாத அறிவினன் அல்ல எந்தை!
எல்லாமறிந்த அவன் யாண்டுமிருக்கும்அவன்
வல்லே உங்கள் செயல் கண்டே வழங்குவான்
வற்றாத அருள் வாரிதியாய் வாழ்விக்கும்
வளப்பமெல்லாமென
செய்யுங்கள்1 செய்யுங்கள்1
செகமாயை வெல்லும் வினைகளை!

சிந்தியுங்கள்! மக்களை சிந்திக்கவையுங்கள்!
மந்தை மதியினர் அகத்தே வாரான்மாதேவன்

அன்பினைக் காட்டுங்கள்1 அன்பினைவளருங்கள் அகிலமெல்லாம்!
அன்பே சிவமாய் ஆள்கின்ற அரியவன் எம்மிறை
அன்புள்ளாரை அணைப்பன் அவர்கள் அவனை
அழைக்காத போதும்!

நெஞ்சு நெக்குருக நினையுங்கள் அவனை
நெகிழ்கின்ற உள்ளத்திலே நேரிதின் வருவான்
நெடிதும் நிற்பன் நீங்காது!





------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan