From naadodi@... Mon Sep 13 02:24:24 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 13 Sep 1999 09:27:19 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@eGroups.com
Received: (qmail 5940 invoked from network); 13 Sep 1999 09:27:16 -0000
Received: from mu.egroups.com (207.138.41.151) by qg.egroups.com with SMTP; 13 Sep 1999 09:27:16 -0000
Received: from [10.1.2.26] by mu.egroups.com with NNFMP; 13 Sep 1999 10:27:15 -0000
Date: Mon, 13 Sep 1999 02:27:14 -0700
From: naadodi@...
To: agathiyar@eGroups.com
Message-ID: <7rig1i$ac3u@eGroups.com>
In-Reply-To: <002101befbaf$67c89600$2fc6b3d1@default>
User-Agent: eGroups-EW/0.76
Mime-Version: 1.0
X-Mailer: eGroups Message Poster
Subject: [agathiyar] Re: Newton's laws of motion in kuRaL format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 1990

naadod-@hotmail.com wrote:
original article:http://www.egroups.com/group/agathiyar/?start=1957
நண்பர் சுவாமிநாதனின் வெண்பாவில் சில வெண்பாவிலக்கணம் முற்றிலும் அனுசரிக்கப் படவில்லை.
மேலும் force என்பது விசை.

அவர் சுட்டிய அருளரசனின் வெண்பா

சீராக நேர்கோட்டி லோட்டமும் நிற்றலும்
மாறா வெளிவிசை யின்றியே ; - தேர்வாய்
விசையென்ப தோட்டத்தின் மாற்றமே மேலும்
விசைக்கெதி ருண்டாம் விசை.

அழகிய இந்நேரிசை வெண்பாவில் விசையெனும் சொல் ஏற்புடைத்தன்று. இது Force. சரியாகச்
சொன்னால், Action (a physically different concept) வினை, செயல், செய்கை

நண்பர் கணேசன் கேட்டது குறள் வடிவில்,

I) A body remains in its state of rest, or constant motion unless acted
upon by an external force

இசைவாய் இயங்கும் பொருளது நிற்கும்
விசையால் விளையும் வினை

அசையாப் பொருளும் அசையும் அறிவாய்
விசையால் விளைந்த வினை

என்றெல்லாம் பாடலாம், இதில் நியூட்டன் உணர்த்தும் inertia - மாற்றத்தடை எனும் கருத்து தொனிக்க

நிற்பன நின்றிடச் செல்வன சென்றிடும்
கற்றிடு மாற்றத் தடை

எனலாம் - நிரல்நிரையணியும் நன்றே!

II) Force = distance X acceleration

விசையை யுணரப் பொருளி னெடையை
திசைவேக மாறால் பெருக்கு

திசைவேகமாற்று - (rate) of change of velocity - acceleration

எனினும் எடை (weight) என்பது பொருண்மை (mass) என்பதிலிருந்து வேறுபட்டது, சரியாக

தொடுக்கு(ம்) விசையி னளவாம் பொருண்மை
முடுக்க மிவற்றின் புணர்

(verbatim translation: the product of mass and acceleration is the
amount of force imparted)

(முடுக்கம் - acceleration, புணர் - Product)

III) Every action has an equal and opposite reaction

எல்லா வினையும் எதிர்வினை கொள்ளுமே
நல்லா ருரைத்த விதி

எனலாம், இதில் equal and opposite எனும் கருத்து தோன்றவில்லை.

மேலும், நல்லார் உரைத்த விதி போன்ற அடிகள் வார்த்தை சிக்கனத்தை அடிப்படையாகக் கொண்ட
குறள்வெண்பாவிற்கு ஏற்றதன்று, (நாலடியார், நல்வழி போன்றவற்றில் வரலாம்) வள்ளுவரின் ஒவ்வொரு
வார்த்தையும் முக்கியமானவை. அடியொற்றி,

உண்டா மெதிர்வினை எவ்வினை தோறுமே
ஒன்றா மவற்றின் அளவு.

ஆக, மூன்று விதிகளையும்

நிற்பன நின்றிடச் செல்வன சென்றிடும்
கற்றிடு மாற்றத் தடை 1

தொடுக்கு(ம்) விசையி னளவாம் பொருண்மை
முடுக்க மிவற்றின் புணர் 2

உண்டா மெதிர்வினை எவ்வினை தோறுமே
ஒன்றா மவற்றின் அளவு. 3

என முன்வைக்கிறேன். எண்ணங்களை அறிய ஆவலாயிருக்கிறேன்.

வெங்கட்,
டோக்கியோ, 13 செப் 1999

பி.கு: நண்பர் சந்திரா சுட்டியது போல் கதிரொளி (ray optics) முதல் நேரிலி ஒளியியல்
(nonlinear optics) ஈறாக ஒளியியலின் முக்கிய கருத்துகளையும், விதிகளையும் சில
காலங்களுக்குமுன் 10 குறள்வெண்பாக்களாய் யாத்தேன். அதுகுறித்த விபரங்களும் வரைபடங்களுடனான
விளக்கங்களும் விரைவில் யாப்புவலையில் இடுகிறேன்.
http://members.xoom.com/yappu
அத்துடன் யாப்புவலையில் அறிவியற்பா எனும் புதிய பகுதியையும் தொடங்கவிருக்கிறேன்.

நியூட்டனின் விதிகளைக் குறித்து முன்னமே பாக்கள் எழுதியிருப்பார்கள் என நினைத்தேன், நண்பர்
கணேசனின் இடுகை ஊக்கியாக இவற்றை எழுதினேன். நன்றி!