From jaybee Mon Sep 13 03:55:23 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 13 Sep 1999 10:58:17 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 10359 invoked from network); 13 Sep 1999 10:58:15 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by qh.egroups.com with SMTP; 13 Sep 1999 10:58:15 -0000
Received: from user ([202.188.69.21]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990913105759.HSOA24779@user>; Mon, 13 Sep 1999 18:57:59 +0800
Message-Id: <3.0.3.32.19990908185704.00955500@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 08 Sep 1999 18:57:04 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Cc: "R.Karthigesu" ,"N. Swaminathan"
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Thaththuvak Kavithai 231
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 1995

>Mailing-List: contact tamil-help@...; run by ezmlm
>Delivered-To: mailing list tamil@...

அன்பர்களே,

லோகா எழுதிய கடிதம் எனக்குக் கிடைக்கவில்லை. ரேகாவின்
கடிதம் கண்டு விபரம் அறிகிறேன்.
லோகா, சுற்றுச்சூழலை சரியாகப்பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது.
மலேசியாவில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சுமார் எழுபதாண்டுகளுக்கு
முன்னர் எழுப்பிய கோயில்கள் பதின்மூன்று மட்டுமே இருக்கின்றன. ரேகா
சொல்வதுபோல அவர்கள் கட்டிய கோயில்கள் என்பதால் அவர்கள் நிர்வகித்து
வருகின்றனர். ஆரம்பத்தில் நகரத்தார் இங்கு லேவாதேவித் தொழிலே செய்து
வந்தனர்.அவர்கள், சில முக்கிய நகரங்களில், ஒரு சில தெருக்களில், சில
கட்டடங்களை வைத்துக்கொண்டு, அவற்றில்தொழிலை நடத்தினர்.
அக்கட்டடங்களில் தொழில் செய்வதுடன்அங்கேயே தங்குவார்கள்.
அப்போதெல்லாம் தங்களின் மனைவிமார்களை கூட்டிவருவதில்லை.
ஆகவே ஒவ்வொரு கட்டடத்திலும் சமையற்காரர்கள் வைத்திருந்தனர்.
இந்த அமைப்புக்கு "கிட்டங்கி" என்று பெயர். ஒரு கிட்டங்கியில்
பத்திலிருந்து முப்பது பேர்கள் தொழில்வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும்
ஒவ்வொரு தனி பிசினஸ். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட விலாசத்தின்கீழ்
இயங்கும். அந்த மாதிரி விலாசமுள்ளபிசினஸை "மார்க்கா" என்று
சொல்வார்கள்.
ஒரு மார்க்காவுக்கு ஒரு அலமாரியும், உட்கார்ந்து கணக்கெழுதும்
பெட்டியும் இருக்கும். அதுபோக, பெரும்பெரும் மரப்பெட்டிகள் சுவர் ஓரத்தில்
இருக்கும். அவை உயர்ந்த ரக மரத்தால்செய்யப்பட்டிப்பதால் வழவழப்பாக
இருக்கும். அவற்றின்மீது அமரலாம்; தூங்கலாம். உள்ளே பெரிய பொருள்களை
வைத்துக்கொள்ளலாம்.
பெரிய மார்க்காவில் தலைமையாக"முதலாளி"; அவருடைய "மேலாள்"
(manager); அவருக்கு உதவியாக "அடுத்தாள்"; சிறு வேலைகள், ஏவல்களைக்
கவனிக்க "பெட்டியடிப் பையன்"(office-boy).
கிட்டங்கியின் கணக்குப்பிள்ளையும் இருப்பார். சமையற்காரருக்கு
உதவியாக எடுபிடி வேலைகள் செய்வதற்காக "ஓடும் பிள்ளை".
இதுதான் கிட்டங்கியின் அமைப்பு.
இந்த நகரத்தார்களுக்கு ஒரு தொழில் தர்மம் உண்டு. தொழிலில்
கறாராக இருப்பார்கள். ஆனால் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தானம்
தர்மத்துக்குச் செலவிடுவார்கள். இதை"தசமபாகம்" என்று சொல்வார்கள்.
இதற்குமேலும் செலவிடுவதுண்டு. இதில்தான் அத்தனை நூற்றுக்கணக்கான
கோயில்கள், திருப்பணிகள், கல்லூஉரிகள், பல்கலைக்கழகங்கள் எல்லாம்.
கிட்டங்கைகளில் இருந்த நகரத்தார்தான் இந்த கோயில்களைக்
கட்டினார்கள்.
இப்போது பெரும்பான்மையான நகரத்தார் பலதொழில்களைச் செய்து
வருகின்றனர். கிட்டங்கிக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது.
அவ்வாறு உள்ளவர்களை "வெளிவேலைச்செட்டியார்கள்" என்று
கிட்டங்கிச் செட்டியார்கள் சொல்வார்கள்.
இந்த கோயில்களின் நிர்வாகத்தில்வெளிவேலைச் செட்டியார்களுக்கு
உரிமை கிடையாது.கிட்டங்கிச் செட்டியர்களுக்கு மட்டும்தான். கோயிலின்
நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருமார்க்காவுக்கு வரும். இவ்வாறு
கோயிலின் நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்பவர்களை "கோயில் மணியம்",
"காறுபாறு" என்று சொல்வார்கள்.
அவர்களுடைய கோயில்களில் யார்வேண்டுமானலும் செல்லலாம்.
ஆனால் முதல் மரியாதை மட்டும் நிர்வாகம் நடத்தும் செட்டியார்களுக்குத்தான்.
அதைத்தவிர வேறு ஏதும் குறையே சொல்லஇயலாதபடிக்கு செவ்வையாகக்
கோயிலை நடத்துகிறார்கள். ஆனால் மற்ற கோயில்களிலும் முதல்மரியாதை
கோயில் நிர்வாகத்துக்குதான் கொடுக்கப்படுகிறது.


அன்புடன்

ஜெயபாரதி


>X-Sender: kgesu@...
>X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
>Date: Mon, 13 Sep 1999 17:20:42 +0800
>To: "DrK.Loganathan" ,
> "N. Swaminathan"
>From: "R.Karthigesu"
>Cc: Tamil iNaiyam
>Subject: Re: [tamil] Thaththuvak Kavithai 231
>
>
>At 08:50 AM 13/09/1999 +0800, DrK.Loganathan wrote:
>
>>>மலேசியாவில் அப்படி இல்லை. கண்ட
>இடத்திலெல்லாங் கோயில் கட்டுவது தமிழர்கள் தான். இதுவும் சாதி சிந்தனையோடு வருவது. இந்து
>மக்களிடையேதான் இன்றளவு சாதிக்கோயில்கள் இருக்கின்றன. அதிலுங் குறிப்பாக செட்டியார்களிடையே இது
>மிக அதிகம். ஏன் இப்படி? இவர்களெல்லாம் சாதியில்லாச் சைவத்தை குழிதோண்டி புதைத்து
>விட்டதினாலேத் தானே மனம் நொந்து ஏழை மக்கள் தமது ஆன்மிக உணர்விற்குதேவையான வகையில் தமக்கென
>ஓர் கோயில் எழுப்பிக்கொள்கின்றார்கள்? <<
>
>
> லோகா,
>
> "கண்ட இடத்திலெல்லாங் கோயில் கட்டுவது" உண்டுதான். ஆனால் இவை "சாதி சிந்தனையோடு வருவது"
>என்பது பொதுவாக உண்மை அல்ல. "செட்டியார்கள் கோயில்கள்" என அழைக்கப்படுபவை நாட்டுக்கோட்டை
>செட்டியார்களால் நிர்வகித்து நடத்தப்படும் கோவில்கள். ஆனால் அவை சாதிக்கோவில்கள் அல்ல. எந்த
>சாதியினரும் எந்த நேரத்திலும் அங்குபோய் வழிபட அவை திறந்திருக்கின்றன. எந்த வேறுபாடும் காட்டப்
>படுவதில்லை.
>
>மலேசியாவில் நானறிய சைவ சமயத்தில் எந்த இடத்திலும் சாதிகள் புகுத்தப்படவில்லை. ஆகவே
>"இவர்களெல்லாம் சாதியில்லாச் சைவத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டதினாலேத் தானே" (sic) என்று
>நீங்கள் கூறுவது மிகப் பெரும் மிகை (grossexaggeration).
>
>மலேசிய சைவர்கள் அமைதியுடனும் இணக்கத்துடனும் வாழுகிறார்கள். பழுது உங்கள்பார்வையில் உள்ளது.
>
>இணையப் பெருமக்கள் மலேசிய நிலமையைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாதுஎன்பதற்காக (to set the
>record straight) இதை எழுத வேண்டியதாயிற்று.
>
>(I am also overcome by a sense of deja vu. Have we not debated this here
>before?)
>
>ரெ.கா.
>
>
>---------------------------------------------------------------------
>To unsubscribe, e-mail: tamil-unsubscribe@...
>
>