From Mon Sep 13 19:06:35 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 02:09:29 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30017 invoked from network); 14 Sep 1999 02:09:27 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 14 Sep 1999 02:09:27 -0000
Received: from jaring.my (j1.glg86.jaring.my [161.142.207.135]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id KAA24351; Tue, 14 Sep 1999 10:09:16 +0800 (MYT)
Date: Tue, 14 Sep 1999 10:09:16 +0800 (MYT)
Message-Id: <199909140209.KAA24351@...>
X-Sender: subas@... (Unverified)
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2015

அன்பர்களே,

தன் இறுதிக் காலத்தில் அப்பர் பெருமானும் காரைக்கால் பேயாரும் தத்தம் தலைகளாலேயே நடந்து கயிலை
சென்றடைந்தனர் என்பதாக ஒர் கதையைக்கேள்வி பட்ட நாளிலிருந்து அது எப்படிமுடியும், நம்ப
முடியவில்லையே? என்றெல்லாங் குழம்பிப்போயிருந்த போதுதான் ஆகமவுளவியல்போற்றும் அகத்தியக்கலை
வழியாக இப்படிப்பட்ட கதைகளின் பொருள் எனக்குத் தெளிவாகியது. கனவுகளைப்போன்று இவையெல்லாம்
உள்ளுறை உவமங்கள், உணர்த்த வரும் விசயங்கள் உலகியலிலே சாதாரணமாக நடக்கக்கூடிய விசயங்களே.
தலையால் நடப்பது என்பது ஆழச் சிந்திக்கும் ஞான விசாரணையி வீழ்வது, அதன்வழி ஏற்படுகின்ற
ஞானத்தெளிவின் ஆங்கே வெளிப்படும்இறைவனைக் காண்பது என்றே எனக்குப் படுகின்றது. ஞான மயனாக
இருக்கின்றன இறைவனை ஞானச் சிந்தனைவழியாகத் தான் காண முடியும். சிந்தனையை வளர்ப்பது, குழந்தைகளுக்கு
ஆழமாக சிந்திக்கும் திறத்தினை போதிப்பது என்பதெல்லாம் நமது பண்பாட்டில்போற்றப்படும் விசயங்களாக
இல்லையே என்பதை நினைத்து வருந்திஇக்கவிதை.

தத்துவராயன்


233: தலையாலே நடக்கின்றேன்!


கால்களால் நடந்தேன் இளைஞனாக
கைகளால் நடந்தேன் கணவனாகப் பின்
காமவேட்கையெல்லாங் கழற்றி வீசிவிட்டு
இப்பொழுது
தலையால் நடக்கின்றேன் தளராது
தளிர்மேனிச் சிவனை தரிசிக்க!

சிரசிலே நடக்கும் செயல்கள் எனக்கு
சிவஞானம் தெளியச் செய்ய
அவமானங்கள் அணுகாது வீழ சிந்தனையில்
சிவமானங்களேச் சேர்ந்திலங்கிகரணங்களையும்
சிவகரணங்களாய் ஆக்குகின்றன! எங்கெங்கும்
சிவத் தாண்டவத்தையே காணத்தருகின்றன
இச்செகத்தையே
கயிலை ஆக்கி!

சிரசிலே செயல்கள் சிறக்கச் சிறக்க
கால்களும் கைகளும் ஓய்கின்றன
வற்புறுத்தி வாயைப் பூட்டாதும்
கண்களை மூடாதும் காதுகளை
கழற்றாதும் நானிருக்க அவை
தானே வழங்காது போகின்றன!

உடலென்றவொன்று இல்லாப் போல்
ஏகாந்தமானவோர் இருப்பில் இருந்தவா
எம்பிரானோடு ஆடுகின்றேன்
இணைந்து அவனிருக்குமிடமெல்லாம்
எவ்விதத் தடையுமின்றிச் சென்று!

உடற் சிறையை விட்டொழிக்க
உதவுவது சிந்தனை என்றறிந்தேன்
ஓயாதே அவ்வழி உழைத்துச் செல்ல மெய்
வைரங்களும் வைடுரியங்களுமாய்
வந்து வந்து உடலிற் சேர இதோ
வச்சிரத் தேகமாய் உடலும் வலுக்க
வயது ஆகாது போகின்றது!
வயது இல்லாது போகின்றது!

மரணங் கடந்தவோர் மாண்பின்
என்றும் இரூப்பது போன்றோர் உணர்வு
எனை ஆள்கின்றது இயம்பவொண்ணா
இன்பம் தந்தவா!










------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan