From jaybee Mon Sep 13 21:51:56 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 04:54:51 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 19215 invoked from network); 14 Sep 1999 04:54:47 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by qg.egroups.com with SMTP; 14 Sep 1999 04:54:47 -0000
Received: from user ([202.188.69.128]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990914045431.OGNA24779@user> for ; Tue, 14 Sep 1999 12:54:31 +0800
Message-Id: <3.0.3.32.19990909125336.008c0760@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 09 Sep 1999 12:53:36 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Mime-Version: 1.0
Subject: [agathiyar] [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2017

>Date: Tue, 14 Sep 1999 10:09:16 +0800 (MYT)
>To: tamil iNaiyam
>From: "DrK.Loganathan"
>Cc: agathiyar@egroups.com
>Subject: [tamil] Thaththuvak Kavithai 233
>
Dr Loganathan wrote:

>அன்பர்களே,
>
>தன் இறுதிக் காலத்தில் அப்பர் பெருமானும் காரைக்கால் பேயாரும் தத்தம் தலைகளாலேயே நடந்து கயிலை
>சென்றடைந்தனர் என்பதாக ஒர் கதையைக்கேள்வி பட்ட நாளிலிருந்து

இதுவும் என்ன மெய்கண்டார் versionஆ?:-)
அப்பர் தலையால் நடந்து கயிலையை தன்இறுதிக்காலத்தில் அடையவில்லை.
தலையால் வணங்கியதாகத்தான் "திருவங்கமாலை"யில் சொல்கிறார்.
தன்னுடைய வாழ்நாளில் ஒருதடவை கயிலைக்கு கால்நடையாகச்செல்வார்.
பலநாடுகளைக் கடந்து, கங்கையையும் கடந்து, இமயமலையை அடைந்தார்.
மனிதர்களும் செல்லா காடு, கல்மலை நிரம்பிய இடங்கள். நாவுக்கரசர் இரவு
பகல் பாராது ஏறிச்சென்றார்.
சேக்கிழாரிடமே உங்களை அழைத்துச்செல்கிறேன். அவர் சொல்வதைக்
கேட்போமே.

"இங்ஙனம் இரவும் பகலும் கற்பொழுதும் அருஞ்சுரம் எய்துவார்
பங்கயம்புரை தாள் பரட்டளவும் பசைத்தசை தேயவும்
மங்கைபங்கர்தம் வெள்ளிமால்வரை வைத்த சிந்தை மறப்பரோ?
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவியேஏகுதல் மேவினார்

கைகளும் மணிபந்தசைந்துறவே கரைந்துசிதைந்தபின்
மெய்கலந்தெழு சிந்தை அன்பின் விருப்புமீமிசை பொங்கிட
மொய்கடுங்கனல் வெம்பரல் புகை மூளுமத்தமுயங்கியே
மைகொள்கண்டர்தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்

மார்பமும் தசை நைந்து சிந்தி அரிந்தஎன்பு முரிந்திட
நேர்வரும்குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடுநீடு
ஆர்வம் அங்குயிர் கொண்டு கைக்கும் உடம்பு அடங்கவும் ஊன்கெடச்
சேர்வருபழுவம் புரண்டு புரண்டு சென்றனர்செம்மையோர்

அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்பரும் கயிலைச் சிலம்படி சிந்தைசென்றுறும் ஆதலால்
மெய்ப்புறத்தில் உறுப்பழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புறச் செயலின்றி அந்நெறி தங்கினார் தமிழாளியார்!"

கால்தேய்ந்து, கைகளால் தவழ்ந்து, கைகள்தேய்ந்திட, மார்பால் உந்திச்
சென்றிட, மார்பின் தசைகளும் தேய்ந்திட, உடலால் உருண்டு புரண்டு சென்று,
உடலெல்லாம் தேய்ந்து ஓய்ந்துபோனபின்ஓரிடத்தில் கிடந்துவிடுவார்.
அப்போது முனிவராக சிவன் தோன்றி,அருகிருந்த திருக்குளத்தில் மூழ்கி,
திருவையாறு திருக்குளத்தில் எழச்செய்வான். அப்போது திருவையாற்றிலேயே
அப்பருக்கு திருக்கயிலைக் திருக்காட்சியைக் கொடுப்பான்.
எல்லாமே சிவமும் சக்தியுமாக அப்பர்காண்பார்.

அப்போது அவர் உணர்விலும் உள்ளத்திலும்பீரிட்டெழுந்து பாடலாக
வடிவமைந்தது கொண்டதுதான்,

மாதர்பிறைக்கண்ணியானை மலையான்மகளுடன்பாடி
போதுடன் நீர் சுமந்தேத்தி புகுவார்அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்றபோது
காதன்மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
காதன்மடப்பிடியோடு களிறுவருவன கண்டேன்.

அதன்பின் அவர்பலகால இருந்து அவர் தாபித்த கோட்பாட்டின்படி
தொண்டுகளைப் புரிந்து திருமடங்களில்இருந்தார். கடைசியாக திருப்புகலூர்
என்னும் தலத்தில் அவர் இருக்கும்போது அவருடைய செல்காலத்தை
உணர்ந்து,

ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீதோடாமைக் காலாற்செற்ற
*பொருவரையாய் உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே!*

என்று அந்த திருப்பதிகத்தைப் பாடியவாறு மறைந்துவிட்டார்.

மண்முதலாம் உலகேத்த மன்னு திருத்தாண்டகத்தைப்
"புண்ணியா! உன்னடிக்கே போதுகின்றேன்"எனப்புகன்று
நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி,
அண்ணலார் சேவடிக்கீழ், ஆண்ட அரசு அமர்ந்தார்.

என்று சேக்கிழார் சொல்கிறார்.

(பின்குறிப்பு: ஆனால் அந்த கவிதை நன்றாக இருக்கிறது.
அர்த்தபுஷ்டியுடன் கூடியது.
அது சரி, தத்துவராயரே. இதைப் படித்துவிட்டு யாராவது
குறும்புக்காரப்பசங்க, "லோகா தலைகால் தெரியாம திரியிறாரு;
தலைகீழா நடக்குறாரு" என்று சொல்வார்களோ? யார் கண்டது?)

அன்புடன்

ஜெயபாரதி



அது எப்படி முடியும், நம்ப
>முடியவில்லையே? என்றெல்லாங் குழம்பிப்போயிருந்த போதுதான் ஆகமவுளவியல்போற்றும் அகத்தியக்கலை
>வழியாக இப்படிப்பட்ட கதைகளின் பொருள் எனக்குத் தெளிவாகியது. கனவுகளைப்போன்று இவையெல்லாம்
>உள்ளுறை உவமங்கள், உணர்த்த வரும் விசயங்கள் உலகியலிலே சாதாரணமாக நடக்கக்கூடிய விசயங்களே.
>தலையால் நடப்பது என்பது ஆழச் சிந்திக்கும் ஞான விசாரணையி வீழ்வது, அதன்வழி ஏற்படுகின்ற
>ஞானத்தெளிவின் ஆங்கே வெளிப்படும்இறைவனைக் காண்பது என்றே எனக்குப் படுகின்றது. ஞான மயனாக
>இருக்கின்றன இறைவனை ஞானச் சிந்தனைவழியாகத் தான் காண முடியும். சிந்தனையை வளர்ப்பது, குழந்தைகளுக்கு
>ஆழமாக சிந்திக்கும் திறத்தினை போதிப்பது என்பதெல்லாம் நமது பண்பாட்டில்போற்றப்படும் விசயங்களாக
>இல்லையே என்பதை நினைத்து வருந்திஇக்கவிதை.
>
>தத்துவராயன்
>
>
> 233: தலையாலே நடக்கின்றேன்!
>
>
> கால்களால் நடந்தேன் இளைஞனாக
> கைகளால் நடந்தேன் கணவனாகப் பின்
> காமவேட்கையெல்லாங் கழற்றி வீசிவிட்டு
> இப்பொழுது
> தலையால் நடக்கின்றேன் தளராது
> தளிர்மேனிச் சிவனை தரிசிக்க!
>
> சிரசிலே நடக்கும் செயல்கள் எனக்கு
> சிவஞானம் தெளியச் செய்ய
> அவமானங்கள் அணுகாது வீழ சிந்தனையில்
> சிவமானங்களேச் சேர்ந்திலங்கிகரணங்களையும்
> சிவகரணங்களாய் ஆக்குகின்றன! எங்கெங்கும்
> சிவத் தாண்டவத்தையே காணத்தருகின்றன
> இச்செகத்தையே
> கயிலை ஆக்கி!
>
> சிரசிலே செயல்கள் சிறக்கச் சிறக்க
> கால்களும் கைகளும் ஓய்கின்றன
> வற்புறுத்தி வாயைப் பூட்டாதும்
> கண்களை மூடாதும் காதுகளை
> கழற்றாதும் நானிருக்க அவை
> தானே வழங்காது போகின்றன!
>
> உடலென்றவொன்று இல்லாப் போல்
> ஏகாந்தமானவோர் இருப்பில் இருந்தவா
> எம்பிரானோடு ஆடுகின்றேன்
> இணைந்து அவனிருக்குமிடமெல்லாம்
> எவ்விதத் தடையுமின்றிச் சென்று!
>
> உடற் சிறையை விட்டொழிக்க
> உதவுவது சிந்தனை என்றறிந்தேன்
> ஓயாதே அவ்வழி உழைத்துச் செல்ல மெய்
> வைரங்களும் வைடுரியங்களுமாய்
> வந்து வந்து உடலிற் சேர இதோ
> வச்சிரத் தேகமாய் உடலும் வலுக்க
> வயது ஆகாது போகின்றது!
> வயது இல்லாது போகின்றது!
>
> மரணங் கடந்தவோர் மாண்பின்
> என்றும் இரூப்பது போன்றோர் உணர்வு
> எனை ஆள்கின்றது இயம்பவொண்ணா
> இன்பம் தந்தவா!
>
>
>
>
>
>
>
>
>
>
>---------------------------------------------------------------------------
---
> Please visit Dravidian Philosophy Campus at [
>http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
>poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
> Bring your friends there too. This is one of the BEST services you can do
>for the world.
>
>DrK.Loganathan
>
>
>---------------------------------------------------------------------
>To unsubscribe, e-mail: tamil-unsubscribe@...
>
>