From Tue Sep 14 00:10:35 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 07:13:30 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 8522 invoked from network); 14 Sep 1999 07:13:28 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qh.egroups.com with SMTP; 14 Sep 1999 07:13:28 -0000
Received: from jaring.my (j28.byb32.jaring.my [161.142.146.162]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id PAA04966; Tue, 14 Sep 1999 15:13:23 +0800 (MYT)
Date: Tue, 14 Sep 1999 15:13:23 +0800 (MYT)
Message-Id: <199909140713.PAA04966@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: agathiyar@egroups.com
From: "DrK.Loganathan"
Cc: Tamil iNaiyam
Subject: [agathiyar] Re: [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2021

அன்பின் டாக்டர் ஜெபி அவர்களே,

மிக்க நன்றி. அர்த்த புஷ்ட்டிஉள்ள கவிதை என்று சொல்லிவிட்டீர்கள். வஷிட்டர் வாயிலிருந்தே வந்த
பாராட்டு என்று எடுத்துக் கொள்கிறேன்என்னதான் அர்த்தம் என்று யாராவது கேட்பார்கள். தயாராக இருக்கவும்.
நிற்க தாங்கள் அப்பர் பெருமானைப்பறிகூறியதற்கு மிக்க நன்றி. வேண்டிய மாற்றஙகளை
சேர்த்துவிடுகின்றேன். அத்தோடு இந்தசந்தர்ப்பத்தில் காரைக்கால் அம்மையார் வரலாற்றில் இப்படிப்பட்ட ஓர்
குறிப்பு உண்டென்பதையும் அனைவரும் உணரபெரிய புராணத்திருந்து சில பாடல்கள். மேலும் அப்பர் பெருமான்
வரலாற்றிலும் இப்படிப்பட்ட ஓர் கூரிப்புஇருப்பாதாக எனக்கு படுகின்றது. அதனியும் சிறிது விளக்குகின்றேஎன்.


வடதிசை தேசம் எல்லாம் மனத்தினால் கடிது சென்று
தொடை யவிழ் இதழி மாலைச் சூலபாணியனார் நிலவும்
படரொளிக் கயிலை வெற்பின் பாங்கணைந்து காலின்
நடையினைத் தவிர்த்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்.

இதுதான் என் மனதில் இருந்துக்கொண்டே,சேக்கிழார் பெருமான் "மனத்தினால்' கடிது செல்லும் வகையில்
வடதிசை தேசங்களையும் கயிலை வெற்பினையும் அடைந்து, அங்கு மாத்திரம் காலின் நடையினைத் தவிர்த்து
தலையில் நடந்து சென்றார் அம்மையார் என்கின்றார். சிவானச் சிந்தனை வாழ்க்கையில் தீவிரமாக
ஈடுபடுவதைத்தான் சேக்கிழார் இப்படிப்பட்ட உள்ளுறை உவமமாக குறித்துள்ளார்.மேலும் இவ்வாறு வரும் அம்மையைக் கண்டு

அம்பிகை திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து
தம் பெருமானை நோக்கித் "தலையினால்நடந்திங்கேறும்
எம்பெருமானோர் எற்பின் யாக்கை அன்பென்னே!" என்ன
நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச்செய்வான்


" வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண்;உமையே! மற்றிப்
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள்" என்ற பின்றை
அருகு வந்தணைய நோக்கி " அம்மையே" என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.

இவ்வாறு தலையாலே நடந்ததின் காரணமாக சிவதரிசனம் கைவரப் பெற்ற அம்மைஇறைவனிடம் யாதைத்தான்
வேண்டுவார்? மெய்யான சிவஞான வேட்கையர் யாதைத்தான் வேண்டுவார் என்று சேக்கிழர் பெருமானும் இறவாத்
தமிழில் எவ்வளவு அழகாகச் சொல்கின்றார்!

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
"பிறவாமை வேண்டும்"; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான்மகிழ்ந்துப்பாடி
அறவா! நீ ஆடும் போது உன் அடிகீழ் இருக்க!" என்றார்.

இப்படிப்பட்ட ஞானவேட்கையர் அனைவருமே கயிலை வெற்பு வந்ததும் தலையாலேத்தான் நடக்கமுடியும்,
அப்பொழுதான் சிவதரிசனம் கிட்டும்.

இனி அப்பர் பெருமான் வரலாற்றில் தலையால் நடந்தது நேராக சுட்டப்படாத போதும் குறிப்பால்
உணர்த்தப்படுகின்றது என்றே நினைக்கின்றேன். தாங்கள் காட்டியுள்ளா பாடல்களில் சிவஞான சிந்தனை
வாழ்க்கை வற்புறுத்தப்படுவதைக் காண்க.மேலும்

அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்பருங் கயிலை ச் சிலம்படி சிந்தைசென்றுறும் ஆதலால்
மெய்ப்புறத்தில் உறுப்பு அழிந்தபின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புறச் செயலின்றி அந்நெறித் தங்கினார் தமிழ் ஆளியார்.


காலாட்டங்கள் கையாட்டங்கள் உடம்பாட்டங்கள் எல்லாம் முடிய ," உடம்பு அடங்க ஊன்கெட"த்தான் "கயிலை
சிலம்படி சிந்தை சென்றுறும்" என்றும் வரஅப்பர் பெருமானும் கடைசியில் உடலால்உந்து முயற்சியுங் கெட்டு,
அம்மையார் போல் தலையால் நடந்தேசிவஞானம் தலைப்பட்டர் என்று கொண்டேன், அவ்வளவே.

மற்றும் என்னை தவறாகப் புரிந்துகொள்ளும் "குறும்பு காரப்பசங்க" யாராவது வந்தால் ( இது எத்தனையோ
ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது) இனி தவறாது அவர்களை உங்கள் பக்கம் அனுப்பி விடுகின்றேன்,
டாக்டர் ஜெபி அவர்களுக்கு என்னைப் புரியும் என்று நவின்று!


தத்துவராயன்




At 12:53 PM 09-09-99 +0700, you wrote:
>>Date: Tue, 14 Sep 1999 10:09:16 +0800 (MYT)
>>To: tamil iNaiyam
>>From: "DrK.Loganathan"
>>Cc: agathiyar@egroups.com
>>Subject: [tamil] Thaththuvak Kavithai 233
>>
>Dr Loganathan wrote:
>
>>அன்பர்களே,
>>
>>தன் இறுதிக் காலத்தில் அப்பர் பெருமானும் காரைக்கால் பேயாரும் தத்தம் தலைகளாலேயே நடந்து கயிலை
>>சென்றடைந்தனர் என்பதாக ஒர் கதையைக் கேள்வி பட்ட நாளிலிருந்து
>
> இதுவும் என்ன மெய்கண்டார் versionஆ?:-)
> அப்பர் தலையால் நடந்து கயிலையை தன்இறுதிக்காலத்தில் அடையவில்லை.
> தலையால் வணங்கியதாகத்தான் "திருவங்கமாலை"யில் சொல்கிறார்.
> தன்னுடைய வாழ்நாளில் ஒருதடவை கயிலைக்கு கால்நடையாகச்செல்வார்.
>பலநாடுகளைக் கடந்து, கங்கையையும் கடந்து, இமயமலையை அடைந்தார்.
>மனிதர்களும் செல்லா காடு, கல்மலை நிரம்பிய இடங்கள். நாவுக்கரசர் இரவு
>பகல் பாராது ஏறிச்சென்றார்.
> சேக்கிழாரிடமே உங்களை அழைத்துச்செல்கிறேன். அவர் சொல்வதைக்
>கேட்போமே.
> <வெட்டு>


------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan