From jaybee Tue Sep 14 01:47:22 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 08:50:16 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 10927 invoked from network); 14 Sep 1999 08:50:11 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by qg.egroups.com with SMTP; 14 Sep 1999 08:50:11 -0000
Received: from user ([202.188.69.144]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990914084946.PGZG24779@user> for ; Tue, 14 Sep 1999 16:49:46 +0800
Message-Id: <3.0.3.32.19990909164850.008c66f0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 09 Sep 1999 16:48:50 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Further comments on Thaththuvak Kavithai 231
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2022


அன்பர்களே,

மலேசியாவில் கண்ட இடங்களில் தமிழர்கள் கோயில்கள் கட்டுவது
உண்மைதான். மொத்தம் பதினெட்டாயிரம் கோயிலகள் இருப்பதாக சில
ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியன் இந்தியன்காங்கிரஸ் கட்சி நடத்திய
கணிப்பு ஒன்று கூறுகிறது.

ஆனால் அவ்வாறு கோயில்கள் கட்டப்படுவதற்கு சாதி காரணமில்லை.
உண்மையில் சாதி வித்தியாசம் இன்னும்சிறிது இருக்கத்தான் செய்கிறது.
மிகச்சிறிய அளவில்தான் இருக்கிறது.ஆனால் தமிழகத்தில்போல் அல்ல.
சாதியின் அடிப்படையை மலேசியாவின் அரசியலில் பார்க்கலாம்.
ஏதோ ஆதாயம் இருக்கலாம் அல்லவா?

ஒரு சிலகோயில்களைத் தவிர மற்றகோயில்களில் பிரம்மணரல்லாதாரே
அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். அவர்களே ஹோமங்கள், திருமணவைபவங்கள்
முதலியவற்றை நடத்துகிறார்கள்.

எல்லா ஊர்களிலுமே இறந்தவர்களைஅடக்கம்செய்வதற்கு வெட்டியான்
என்று யாரும் கிடையாது. எல்லாருமாகச்சேர்ந்து சடங்குகளைச் செய்து
விடுகிறார்கள். குழிவெட்டுதல்போன்றவற்றை - சாதி அடிப்படையில் அல்ல-
தொழிலாக செய்பவர்கள் இருக்கிறார்கள்.கவிக்குயில் கலியபெருமாள்
என்னும் எங்கள் நண்பர் ஒருவர் எழுதிய "நீத்தார் கடன் நெறி முறைகள்"
நூல் இந்த வகையில் பலருக்குப் பெரிதும்உதவுகிறது.

ஆனால் சாதி அடிப்படையில் கோயில்கள் இல்லை.

நகரத்தார் கிட்டங்கிகள் நடத்தும் அந்தகுறிப்பிட்ட பதின்மூன்று
கோயில்களைத் தவிர வேறு எந்தக் கோயிலும் சாதி அடைப்படையில்
இல்லை.

சாதி சங்கங்கள் சில இருக்கத்தான்செய்கின்றன. கவுண்டர், தேவர்,
நாடார், பிராம்மணர் முதலியோர் சங்கங்கள் வைத்திருக்கின்றனர். ஆனால்
கலப்புமணம் தாரளமாகவே நடைபெறுகிறது. கவுண்டர், தேவர், நாடார்
சங்கங்களின் உறுப்பினர்கள்கூட கலப்புமணம் செய்தவர்கள்தாம்.
சாதிவெறியை அவர்கள் ஒருபோதும்காட்டுவதில்லை.

ரப்பர்தோட்டப்புறங்களில் வாழும் சமுதாயத்தில் இன்னும் சிறிது சாதி
உணர்வு இருக்கத்தான் செய்கிறது. அது தலீத், தலீத் அல்லாதார் என்ற
முறையில் அமைந்திருக்கிறது. ஆனால் அந்த தோட்டப்புற சமுதாயத்தில்கூட
அத்தனைபேரும் அப்படியிருப்பதாகச்சொல்லமுடியாது.சிலருக்குமட்டுமே அந்த
உணர்வு உண்டு.
ஆனால் அவர்களை எளிதாகத் திருத்தமுடிகிறது. அந்த சமுதாயங்களில்
குறுகிய காலத்திலேயே அத்தகைய சிந்தனை மாறுதல்களைச் செய்யமுடிகிறது.
சில இடங்களில் சற்று சிக்கலான வேலைதான். துணிச்சல் வேண்டும்.
ஆனால் செய்யமுடிந்திருக்கிறது.(ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு அனுபவம்).

கோயில்கள் ஏன் இத்தனை இருக்கின்றனஎன்பதற்கு சில
காரணங்கள் உண்டு. சில காரணங்கள் மிகவும் வேடிக்கையானதாக
இருக்கும்.

ஆனால் அந்த மாதிரி கண்ட இடத்தில்கோயில்களைக்
கட்டியவர்களுக்கெல்லாம் சைவம், சித்தாந்தம், வேதாந்தம், மெய்கண்டம்
எதுவுமே தெரியாது.ஆகவே அவர்களை யாரும் கெடுத்திருக்கவும் முடியாது.

டாக்டர் லோகா எழுதிய பதிலையும்பார்த்தேன். ஆனால் அவர்
ஏதோ விளக்கம் எழுதிப்பார்த்திருக்கிறார்.
முதலில் எழுதிய மடலைப் பார்ப்பவர்கள்என்ன நினைப்பார்கள்?

>>>மலேசியாவில் அப்படி இல்லை. கண்ட
>இடத்திலெல்லாங் கோயில் கட்டுவது தமிழர்கள் தான். இதுவும் சாதி சிந்தனையோடு வருவது. இந்து
>மக்களிடையேதான் இன்றளவு சாதிக்கோயில்கள் இருக்கின்றன. அதிலுங் குறிப்பாக செட்டியார்களிடையே இது
>மிக அதிகம்.

இதில் வேறு எந்த அர்த்தந்தான் இருக்கிறது? இருந்தால் அது
தென்படவில்லை.நகரத்தார் கிட்டங்கிகள் நடத்தும் அந்த பதின்மூன்று
கோயில்களை மட்டுமே வைத்து சகட்டுமேனிக்கு ஒட்டு மொத்தத்தில்
"எடுத்தேன், கொட்டினேன், கவிழ்த்தேன்"என்றா எழுதுவது?
.
லோகவோ ஒரு முனைவர். Ph.D. என்றாலேயே ஒரு
awe-inspiring நிலை உண்டு. மேலும் அவருடையஎழுத்துக்கள்
படிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் ஒரு இணைப்பேராசிரியர்.
என்னுடைய நண்பர். அவர் இப்படி எழுதுதல்கூடாது.

அது சரி. ஒரு சந்தேகம்.

"ஆ"வென்று வாய்பிளந்து அயர்ந்து போய்நிற்கவைப்பதால்தான்
அந்தச் சொல்லுக்கு "awe-inspiring", ""awe-struck" என்றெல்லாம்
சொல்கிறார்களோ?

அன்புடன்

ஜெயபாரதி



>Mailing-List: contact tamil-help@...; run by ezmlm
>Delivered-To: mailing list tamil@...
>X-Sender: kgesu@...
>X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
>Date: Mon, 13 Sep 1999 17:20:42 +0800
>To: "DrK.Loganathan" ,
> "N. Swaminathan"
>From: "R.Karthigesu"
>Cc: Tamil iNaiyam
>Subject: Re: [tamil] Thaththuvak Kavithai 231
>
>
>At 08:50 AM 13/09/1999 +0800, DrK.Loganathan wrote:
>
>>>மலேசியாவில் அப்படி இல்லை. கண்ட
>இடத்திலெல்லாங் கோயில் கட்டுவது தமிழர்கள் தான். இதுவும் சாதி சிந்தனையோடு வருவது. இந்து
>மக்களிடையேதான் இன்றளவு சாதிக்கோயில்கள் இருக்கின்றன. அதிலுங் குறிப்பாக செட்டியார்களிடையே இது
>மிக அதிகம். ஏன் இப்படி? இவர்களெல்லாம் சாதியில்லாச் சைவத்தை குழிதோண்டி புதைத்து
>விட்டதினாலேத் தானே மனம் நொந்து ஏழை மக்கள் தமது ஆன்மிக உணர்விற்குதேவையான வகையில் தமக்கென
>ஓர் கோயில் எழுப்பிக்கொள்கின்றார்கள்? <<
>
>
> லோகா,
>
> "கண்ட இடத்திலெல்லாங் கோயில் கட்டுவது" உண்டுதான். ஆனால் இவை "சாதி சிந்தனையோடு வருவது"
>என்பது பொதுவாக உண்மை அல்ல. "செட்டியார்கள் கோயில்கள்" என அழைக்கப்படுபவை நாட்டுக்கோட்டை
>செட்டியார்களால் நிர்வகித்து நடத்தப்படும் கோவில்கள். ஆனால் அவை சாதிக்கோவில்கள் அல்ல. எந்த
>சாதியினரும் எந்த நேரத்திலும் அங்குபோய் வழிபட அவை திறந்திருக்கின்றன. எந்த வேறுபாடும் காட்டப்
>படுவதில்லை.
>
>மலேசியாவில் நானறிய சைவ சமயத்தில் எந்த இடத்திலும் சாதிகள் புகுத்தப்படவில்லை. ஆகவே
>"இவர்களெல்லாம் சாதியில்லாச் சைவத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டதினாலேத் தானே" (sic) என்று
>நீங்கள் கூறுவது மிகப் பெரும் மிகை (grossexaggeration).
>
>மலேசிய சைவர்கள் அமைதியுடனும் இணக்கத்துடனும் வாழுகிறார்கள். பழுது உங்கள்பார்வையில் உள்ளது.
>
>இணையப் பெருமக்கள் மலேசிய நிலமையைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாதுஎன்பதற்காக (to set the
>record straight) இதை எழுத வேண்டியதாயிற்று.
>
>(I am also overcome by a sense of deja vu. Have we not debated this here
>before?)
>
>ரெ.கா.
>
>
>---------------------------------------------------------------------
>To unsubscribe, e-mail: tamil-unsubscribe@...
>
>