From Tue Sep 14 03:11:17 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 10:14:12 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 2152 invoked from network); 14 Sep 1999 10:14:08 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qh.egroups.com with SMTP; 14 Sep 1999 10:14:08 -0000
Received: from jaring.my (j53.byb33.jaring.my [161.142.146.127]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id SAA00751; Tue, 14 Sep 1999 18:14:03 +0800 (MYT)
Date: Tue, 14 Sep 1999 18:14:03 +0800 (MYT)
Message-Id: <199909141014.SAA00751@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: agathiyar@egroups.com
From: "DrK.Loganathan"
Cc: Tamil iNaiyam
Subject: [agathiyar] Re: Further comments on Thaththuvak Kavithai 231
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2025

அன்புடைய டாக்டர் ஜெபி அவர்களே,

தாங்கள் இந்த சாதிப் பிரச்சினையைப்பற்றி எடுத்துப் பேசுவதும் கண்ட கண்ட இடங்களில் தமிழர்கள் கோயில்
எழுப்புவது பற்றியும் விடாது சிந்திப்பதும் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அதில்
கீழ்கண்டவற்றிற்கு சில கருத்துக்கள்
.>>>>>>>>>>>>>>>>>


>>>மலேசியாவில் அப்படி இல்லை. கண்ட
>இடத்திலெல்லாங் கோயில் கட்டுவது தமிழர்கள் தான். இதுவும் சாதி சிந்தனையோடு வருவது. இந்து
>மக்களிடையேதான் இன்றளவு சாதிக்கோயில்கள் இருக்கின்றன. அதிலுங் குறிப்பாக செட்டியார்களிடையே இது
>மிக அதிகம்.

இதில் வேறு எந்த அர்த்தந்தான் இருக்கிறது? இருந்தால் அது
தென்படவில்லை.நகரத்தார் கிட்டங்கிகள் நடத்தும் அந்த பதின்மூன்று
கோயில்களை மட்டுமே வைத்து சகட்டுமேனிக்கு ஒட்டு மொத்தத்தில்
"எடுத்தேன், கொட்டினேன், கவிழ்த்தேன்"என்றா எழுதுவது?
.
லோகவோ ஒரு முனைவர். Ph.D. என்றாலேயே ஒரு
awe-inspiring நிலை உண்டு. மேலும் அவருடையஎழுத்துக்கள்
படிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் ஒரு இணைப்பேராசிரியர்.
என்னுடைய நண்பர். அவர் இப்படி எழுதுதல்கூடாது.

அது சரி. ஒரு சந்தேகம்.

"ஆ"வென்று வாய்பிளந்து அயர்ந்து போய்நிற்கவைப்பதால்தான்
அந்தச் சொல்லுக்கு "awe-inspiring", ""awe-struck" என்றெல்லாம்
சொல்கிறார்களோ?

அன்புடன்

ஜெயபாரதி

>>>>>>>>>>>>>>

நான் ஓர் முனைவர் தான், இலண்டன் பல்கலையில் ஐந்தாண்டுகள் படித்து அப்பட்டத்தைப்பெற்றவன் தான். ஆயினும்
நீங்கள் கருதுவது போல எனது எழுத்துகள் ஓர் சிலருக்குத் தான் "awe-inspiring"; பெரும்பாலோருக்கு
அப்படியல்ல. என்னை எதிர்க்கத்தான் அவர்களைத் துண்டுகின்றது. அதுவே எனக்கு உவப்பும் அளிப்பது. மற்றப்டி
நான் இருபது ஆண்டுகள் மலேசிய அறிவியல் பல்கலையில் பணி செய்து இப்பொழுதுஓய்வு பெற்று ஓய்வு
ஊதியத்தில் வாழ்க்கை நடத்துகின்றேன். பல புதுமைகள் படைத்திருந்தாலும் ஆகமவுளவியலை பெருந்துறையாக
வளர்த்ததோடு, Hermeneutic Analysis of Discourse என்றவோர் புதிய முறையியலைக் கண்டு பல
முதுகலை மாணவர்களையும் சில முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கி இருந்தாலும், எனக்கு
இணைபேராசிரியர் என்ற சிறிய பதவி உயர்கூட மறுக்கப்பட்டது. கல்வி மைய குழுமியத்தில் இதனைபற்றி
துணிந்து கேள்வி கேட்க அடியும் உதையும்வாங்கினேன். பலர் என்னிடம் போலிசிற்கு புகார் செய்யுங்கள்
என்றார்கள். நான் அதனை மறுத்ததோடுதொடர்ந்து பணியும் புரிந்தேன், இனிமேல் இப்படிப்பட்ட பதவி
உயர்வுகளை நச்சி என் தன்மானத்தைஇழக்கபோவதில்லை என்ற வைராக்கியத்தோடு.. அந்த வைராக்கியம்
பிழையாது இப்பொழுது ஓய்வும் பெற்றுவிட்டு இலத்திலேயே அழகிய சிவ வாழ்க்கையாக சிந்தனை
வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். எல்லா நிலையிலும் நியாயத்திற்காகப் போராடிய வாழ்க்கைதான்
இதுவரை வாழ்ந்திருக்கின்றேன். இறையருளால் இனியும் அதுபோன்றே வாழவும்எண்ணியுள்ளேன்.

இந்த நியாயம் என்ற அடிப்படையில்தான் இந்த சாதிப் பிரச்சினையைக் கொண்டுவருகின்றேன். தங்களது
கூற்றிலிருந்து அது இல்லாமல் இல்லை ஆனால் ஓர் சிறிதுதான் இருக்கின்றது என்றுதான் கூற வருகின்றீர். அறவே
இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கும்எனக்கு இந்த ஓர் சிறிதும் தேவை யற்றதுஎன்றேப் படுகின்றது.
இன்றளவு பினாங்கிலே நடக்கின்ற தைப்பூசம் செட்டித் தைப்பூசம் என்று தான்அழைக்கப்படுகின்றது என்பதோடு
செட்டி மக்கள் சிங்கப்பூரில் நடப்பது போன்று முதல் நாளன்றே காவடி எடுத்து பால்குடம் செலுத்தி முடித்து
விடுகின்றார்கள். மகேஸ்வரபூசையின் போது செட்டி மக்களுக்கே முதல் பந்தி என்று எனக்குப் பலர் சொல்லி
இருக்கின்றார்கள்.

பணவசதி மிக்க அவர்கள் செட்டியார் அல்லாத வேறு தமிழர்களுக்கு அவர்களதுமுன்னேறத்திற்காக எதையாவது
இந்த மலை நாட்டில் செய்திருக்கின்றார்களா? தாங்கள் கூறும் அந்த கிட்டங்கிகளில் செட்டியார் அல்லாத வேறு
யாரையாவது விட்டிருக்கின்றார்களா?அரசியலிற்கு வரும் போதுதான் ஏனையதமிழர்களோடு ஒட்டிக்
கொள்கின்றார்கள் ஆனால் மற்றபடி அறவே இல்லை என்று நினைக்கின்றேன். இவ்வாறு நான் சிந்திப்பதில் தவறு
என்றால் சுட்டிக் காட்டவும். எனை திருத்திக் கொள்கின்றேன். எனக்கு தனிப்பட்டமுறையில் எந்த வெறுப்பும்
இல்லை, வேண்டாத இந்த சாதியை இன்னும்வலுவாக பிடித்துக் கொண்டிருக்கின்றார்களே என்ற வேதனைதான்,
வேறு ஒன்றுமில்லை.

இனி கண்ட இடங்களிலெல்லாங் கோயில்கட்டுபவர்களுக்கு சித்தாந்தமும் தெரியாது வேதாந்தமும் தெரியாது,
மெய்கண்டார் யாரென்றுத் தெரியாதுஎன்கிறீர்கள். உண்மைதான். ஆனால் ஏன்இப்படி தமிழ் மக்கள்
அறியாமையிலே கிடக்கின்றார்கள்? தங்கள் சமயத்தின் அடிப்படைகளை உணராதஓர் முஸ்லிமோ கிருத்தவனோ
இருக்கின்றானா? பாலித்தீவில் உள்ள இந்து குழைந்தைகளுக்கு இருக்கின்ற இந்து சமய அறிவு கூட இவர்களுக்கு
இல்லையே ? ஏன்? இதற்கு பொறுப்பு யார்? சமய அடிப்படைகளை போதிக்க வேண்டும் என்ற எண்ணமாவது
கோயில்களுக்கு உண்டா? சில சங்கங்களும்தனிப்பட்ட நபர்களும் தான் இதனைசெய்கின்றார்கள். ஆனால்
கிறித்தவர்களும் இசுலாமியர்களும் அப்படியா இருக்கின்றார்கள்? இசுலாமியஅரசியலில் சமய பாடங்களுக்கு
எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? எவ்வளவு பணம் ஒதுக்கப் படுகின்றது? எந்தவொரு சர்ச்சிலும்
ஓர் பால பள்ளி கட்டொழுங்கோடு நடக்கும். பல இடங்களில் அங்கு செல்லும் குழந்தைகளும் சைவக் குழந்தைகளாக
இருப்பார்கள். பட்டர்வர்த்தில் என் கண் முன்னால் ஓர் இந்து ஆடவர் உதவியோடு ஓர்கிரித்தவக் குழுவினர்
பாலர் பள்ளி என்ற பெயரில் ஒன்றை நடத்தி மதமாற்றம் செய்வது கண்டு பெரியகலகம் விளவித்து அதனை
நிறுத்தினேன். அடிதடி சண்டை யில்லை,வாய்ப்பேச்சுதான். இப்படித்தான் உங்கள்சமயத்தை வளர்க்கச்
சொன்னாரா இயேசு பிரான் என்று தான்கேட்டேன். காவல் நிலையத்தில்தான் பிரச்சனை ஓர் முடிவிற்கு
வந்தது. ஏன் இப்படி? கோயில்கள் என்றால்என்ன? அங்கே சமய ஞானத்தை போதிக்கக் கூடாதா? அப்படியே
சில கோயில்கள் முன் வந்தாலும் பெற்றோர்கள் அதில் அக்கரைக் காட்டுவதில்லையே ஏன்?

இப்படிப் பல கேள்விகள். சமுதாயமேஒட்டுமொத்தமாக மாறவேண்டும் என்றுநினைக்கின்றேன். அதற்காக தனி
மனிதனாக என்னால் இயன்றவாறு சிந்தனையைத் தூண்டி வருகின்றேன். தமிழர்களின்சிந்தனையில் ஓர் நல்ல
மாற்றம் வந்துவிட்டால் நான் ஏன் பாடுகிறேன்? ஆடுகின்றேன்? நிம்மதியாக ஒடுங்கி ஒதுங்கி விடமாட்டேனா?

அன்பன் தத்துவராயன்..







At 04:48 PM 09-09-99 +0700, you wrote:
>
>அன்பர்களே,
>
> மலேசியாவில் கண்ட இடங்களில் தமிழர்கள் கோயில்கள் கட்டுவது
>உண்மைதான். மொத்தம் பதினெட்டாயிரம் கோயிலகள் இருப்பதாக சில
>ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியன் இந்தியன்காங்கிரஸ் கட்சி நடத்திய
>கணிப்பு ஒன்று கூறுகிறது.
>
> ஆனால் அவ்வாறு கோயில்கள் கட்டப்படுவதற்கு சாதி காரணமில்லை.
>உண்மையில் சாதி வித்தியாசம் இன்னும்சிறிது இருக்கத்தான் செய்கிறது.
>மிகச்சிறிய அளவில்தான் இருக்கிறது.ஆனால் தமிழகத்தில்போல் அல்ல.
> சாதியின் அடிப்படையை மலேசியாவின் அரசியலில் பார்க்கலாம்.
>ஏதோ ஆதாயம் இருக்கலாம் அல்லவா?
>
> <வெட்டு>


------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan