From Palaniappan A Tue Sep 14 04:19:10 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 11:22:06 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 274 invoked from network); 14 Sep 1999 11:22:03 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qh.egroups.com with SMTP; 14 Sep 1999 11:22:03 -0000
Received: from pop2.pacific.net.sg (pop2.pacific.net.sg [203.120.90.86]) by sunny.pacific.net.sg with ESMTP id TAA16919 for ; Tue, 14 Sep 1999 19:22:02 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp203.dyn93.pacific.net.sg [210.24.93.203]) by pop2.pacific.net.sg with SMTP id TAA26015 for ; Tue, 14 Sep 1999 19:22:00 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990914190216.00821260@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Tue, 14 Sep 1999 19:02:16 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <199909141014.SAA00751@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Further comments on Thaththuvak Kavithai 231
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2026

அன்பு நண்பர்களே,

<இன்றளவு பினாங்கிலே நடக்கின்ற தைப்பூசம் செட்டித் தைப்பூசம் என்று தான்அழைக்கப்படுகின்றது என்பதோடு
செட்டி மக்கள் சிங்கப்பூரில் நடப்பது போன்று முதல் நாளன்றே காவடி எடுத்து பால்குடம் செலுத்தி முடித்து
விடுகின்றார்கள். மகேஸ்வரபூசையின் போது செட்டி மக்களுக்கே முதல் பந்தி என்று எனக்குப் பலர் சொல்லி
இருக்கின்றார்கள்.>

இதற்குப் பின்னணி இருக்கிறது. மலேயா-சிங்கப்பூரில் குடியேறியவர்களின் வரலாற்றைப் பார்க்கவேண்டும்.
எத்தனை பேர் இருந்தார்கள், என்ன பழக்கத்தைத் தொடங்கி வைத்தார்கள், எதைவிட்டார்கள் எதைத்
தொடர்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும்.
இங்குள்ள தண்டாயுதபாணி-செட்டியார்(அவர்களால் கட்டப்பட்ட அவர்களால் நிர்வாகம் செய்யப்படுவதால்-unlike
other temples, superbly managed for that matter- அப்படி அழைப்பதில் தவறு இருப்பதாகத்
தெரியவில்லை) கோயிலின் வரலாற்றை அடியேன் எழுதும் பாக்கியம் கிடைத்தது. ஆங்கிலத்தில் உள்ள அதை
ஒரு நாள் அனுப்பி வைக்கிறேன்.

<பணவசதி மிக்க அவர்கள் செட்டியார் அல்லாத வேறு தமிழர்களுக்கு அவர்களதுமுன்னேறத்திற்காக எதையாவது
இந்த மலை நாட்டில் செய்திருக்கின்றார்களா? தாங்கள் கூறும் அந்த கிட்டங்கிகளில் செட்டியார் அல்லாத
வேறு யாரையாவது விட்டிருக்கின்றார்களா? அரசியலிற்கு வரும் போதுதான் ஏனைய தமிழர்களோடு ஒட்டிக்
கொள்கின்றார்கள் ஆனால் மற்றபடி அறவே இல்லை என்று நினைக்கின்றேன். இவ்வாறு நான் சிந்திப்பதில் தவறு
என்றால் சுட்டிக் காட்டவும். எனை திருத்திக் கொள்கின்றேன். எனக்கு தனிப்பட்டமுறையில் எந்த வெறுப்பும்
இல்லை, வேண்டாத இந்த சாதியை இன்னும்வலுவாக பிடித்துக் கொண்டிருக்கின்றார்களே என்ற வேதனைதான்,
வேறு ஒன்றுமில்லை.>

மலாயா பல்கலைக்கழகத்திற்குப் பணம்கொடுத்தவர்களில் செட்டியார் சமூகத்தினர் முன்னணியில் இருந்ததாக
டாக்டர் சுப திண்ணப்பன் அவர்களின் கட்டுரையில் படித்ததாக ஞாபகம். அதனையும்பின்னர் அனுப்ப
முயலுகிறேன். இங்கு நிறைய மற்ற தமிழர்களுக்கு மற்ற இனத்தவருக்கு செய்திருக்கிறார்கள். மற்ற தமிழர்களும்
அவர்களின் கிட்டங்கிகளில் வட்டித்தொழில்(லேவாதேவி) செய்திருக்கிறார்கள்.

உலகம் மாறி விட்டது. எல்லோரும் மாறி விட்டார்கள். ஒரு சிலரைத்தவிர. இதுஎல்லா சமூகத்திற்கும்
பொருந்தும். அவசரமாக ஒரு கூட்டத்திற்குச் செல்லவேண்டும். பிறகு பார்ப்போம்.
அன்புடன்
பழனி



>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>