From Tue Sep 14 06:38:21 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 13:41:16 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 10613 invoked from network); 14 Sep 1999 13:41:09 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 14 Sep 1999 13:41:09 -0000
Received: from jaring.my (j13.glg89.jaring.my [161.142.209.207]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id VAA26885; Tue, 14 Sep 1999 21:41:03 +0800 (MYT)
Date: Tue, 14 Sep 1999 21:41:03 +0800 (MYT)
Message-Id: <199909141341.VAA26885@...>
X-Sender: subas@... (Unverified)
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: agathiyar@egroups.com
From: "DrK.Loganathan"
Cc: Tamil iNaiyam
Subject: [agathiyar] Re: Further comments on Thaththuvak Kavithai 231
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2028

அன்புள்ள திரு பழனி அவர்களே,

விடாக்கண்டானாக இருந்துகொண்டு இந்தவிசயத்தைப் பற்றி தொடர்கின்றேனேஎன்று நினைக்காதீர்கள். இது
தொடர்பாக நல்லவொரு நாரதர் வேலையை டாக்டர் ஜெபி அவர்கள் செய்திருக்கின்றார்கள். ஆக தாங்கள்
கூறிய சில விசயங்கள் தொடர்பாக இன்னும் சிலக் கேள்விகள்.



At 07:02 PM 14-09-99 +0800, you wrote:
>அன்பு நண்பர்களே,
>
><இன்றளவு பினாங்கிலே நடக்கின்ற தைப்பூசம் செட்டித் தைப்பூசம் என்று தான்அழைக்கப்படுகின்றது என்பதோடு
>செட்டி மக்கள் சிங்கப்பூரில் நடப்பதுபோன்று முதல் நாளன்றே காவடி எடுத்துபால்குடம் செலுத்தி முடித்து
>விடுகின்றார்கள். மகேஸ்வரபூசையின்போது செட்டி மக்களுக்கே முதல் பந்தி என்று எனக்குப் பலர் சொல்லி
>இருக்கின்றார்கள்.>
>
>இதற்குப் பின்னணி இருக்கிறது. மலேயா-சிங்கப்பூரில் குடியேறியவர்களின் வரலாற்றைப் பார்க்கவேண்டும்.
>எத்தனை பேர் இருந்தார்கள், என்ன பழக்கத்தைத் தொடங்கி வைத்தார்கள், எதைவிட்டார்கள் எதைத்
>தொடர்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும்.
>இங்குள்ள தண்டாயுதபாணி-செட்டியார்(அவர்களால் கட்டப்பட்ட அவர்களால் நிர்வாகம் செய்யப்படுவதால்-unlike
>other temples, superbly managed for that matter- அப்படி அழைப்பதில் தவறு இருப்பதாகத்
>தெரியவில்லை) கோயிலின் வரலாற்றை அடியேன் எழுதும் பாக்கியம் கிடைத்தது. ஆங்கிலத்தில் உள்ள அதை
>ஒரு நாள் அனுப்பி வைக்கிறேன்.
>>>>>>>>>>>>
லோகா

வரலாறு என்பது மாறாத ஒன்றல்ல. ஆகவேவரலாற்றுப் பின்னணியை சாதிப் பெயரில் இயங்குங் கோயில்களுக்கு
நியாயம் படுத்த கொண்டு வரக்கூடாது என்று எண்ணுகின்றேன். இப்பொழுது மறந்துவிட்ட ஓர் உண்மையை, அதாவது
சைவ சமயத்தில் சாதி இல்லை என்பதைஉணர்ந்துவிட்ட நிலலையில் செட்டியார்கள் அல்லாத நல்லவர்களை
கோயில் நிர்வாகத்தில் ஏன் கொண்டுவரக் கூடாது? நீங்கள் உடன் சொல்லலாம்.செட்டியார்கள் அல்லாத பிற
சாதியினருக்கு கோயிலை நன்றாக நிர்வாகம் செய்யத் தெரியாது என்று. அதிலும் ஓர் உண்மை இருக்கலாம்.
ஆனால் அதனைக் கண்டு எக்கேடுகெட்டாலும்நமக்கென்ன, அவர்களுக்குள் அடித்துக் கொள்ளட்டும் நாம் வாளே
இருப்போம் என்று இருப்பீரா அல்லது ஏதாவது செய்து அவர்களுக்கும் கோயிலை நன்றாக நிர்வாகம் செய்யும்
திறனை போதிப்பிர்களா? இல்லை அவர்களால் முடியாது, செட்டியார்களுக்கு வாழையடி வாழையாக, ஓர்
நெடுங்கால பாரம்பரியமாக வரும் ஒர்திறன் எப்படி அவர்களுக்கு முடியும் என்று வரலாற்றை சான்றாகக் காட்டி
விட்டு விடுவீர்களா? அப்படியென்றால்சாதியுணர்வு அறவே தோன்றாவகையிலும் மெய்யான சைவ ஊனர்விற்கு
குந்தகம் விளைவிக்காமலும் தென்னாப்பிரிக்காவில் பல அழகிய கோயில்களை செட்டியார் அல்லாதவர்கள்
நிர்வாகம் செய்கின்றார்களே ? அது எப்படி? எனக்குப் புரியவில்லை அதனால் தான் இத்தனைக் கேள்விகள்.
எல்லாஞ் சிந்த்தித்துத் தெளியத்தான்.


>
><பணவசதி மிக்க அவர்கள் செட்டியார்அல்லாத வேறு தமிழர்களுக்கு அவர்களதுமுன்னேறத்திற்காக எதையாவது
>இந்த மலை நாட்டில் செய்திருக்கின்றார்களா? தாங்கள் கூறும் அந்த கிட்டங்கிகளில் செட்டியார் அல்லாத
>வேறு யாரையாவது விட்டிருக்கின்றார்களா? அரசியலிற்கு வரும் போதுதான் ஏனைய தமிழர்களோடு ஒட்டிக்
>கொள்கின்றார்கள் ஆனால் மற்றபடி அறவே இல்லை என்று நினைக்கின்றேன். இவ்வாறு நான் சிந்திப்பதில் தவறு
>என்றால் சுட்டிக் காட்டவும். எனை திருத்திக் கொள்கின்றேன். எனக்கு தனிப்பட்டமுறையில் எந்த வெறுப்பும்
>இல்லை, வேண்டாத இந்த சாதியை இன்னும்வலுவாக பிடித்துக் கொண்டிருக்கின்றார்களே என்ற வேதனைதான்,
>வேறு ஒன்றுமில்லை.>
>
>மலாயா பல்கலைக்கழகத்திற்குப் பணம்கொடுத்தவர்களில் செட்டியார் சமூகத்தினர் முன்னணியில் இருந்ததாக
>டாக்டர் சுப திண்ணப்பன் அவர்களின் கட்டுரையில் படித்ததாக ஞாபகம். அதனையும்பின்னர் அனுப்ப
>முயலுகிறேன். இங்கு நிறைய மற்ற தமிழர்களுக்கு மற்ற இனத்தவருக்கு செய்திருக்கிறார்கள். மற்ற தமிழர்களும்
>அவர்களின் கிட்டங்கிகளில்வட்டித்தொழில்(லேவாதேவி) செய்திருக்கிறார்கள்.
>>>>>>>>>>>>>>.
லோகா

இப்படித்தான், எதோவொரு நன்மை எப்பவோ செய்தது, அதுவும் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. செய்த
நன்மையை தேடிப்பிடிக்க வேண்டி இருக்கின்றது. இன்னும் ஒன்றையும் சொல்ல விரும்புகின்றேன். மலேசியாவில்
வங்கிகளைத் தொடக்கியவர்கள் அவர்கள், பங்குச் சந்தை விற்பனையையும் அவர்கள் தான் தொடக்கினார்கள்.
இப்பொழுது இரண்டிலும் கோட்டை விட்டுசீனர்களுக்கு இடந்கொடுத்து ஒதுங்கிவிட்டார்கள். பத்தொன்பாதாம்
நூற்றாண்டு கடைசியில் எழுப்பப்பட்டகிட்டங்கிகளில் தான் இன்னும் வட்டித்தொழில் செய்து
கொண்டிருக்கின்றார்கள். டாகடர் ஜெபிசொன்ன அதே பெரியப் பெட்டிகள் இன்னும்தான இருக்கின்றன. பர்மா
தேக்கு மரத்தால் செய்யப்பட்டது போலும்.ஆனால் இடையே இந்தச் சீனர்கள் அவர்களிடமே வட்டிக்கு வாங்கி
இப்பொழுது பெரும் பெரும் Financial Institutions தொடங்கி சிறப்பாகச் செய்கின்றார்கள்.

இந்த வீழ்ச்சிக்கு இந்த சாதிச் சிந்தனையே, பாரம்பரிய பழக்க வழக்கத்திலிருந்து மாறவேக் கூடாது
என்ற மனோபாவமே காரணம் என்றுநினைக்கின்றேன். திறந்த மனத்தோடுசாதி வேற்றுமை பாராது அந்தக்
காலத்திலேயே தமிழ் இளைஞர்களுக்கு நல்ல பயிற்சியை அளித்திருந்தால் இன்றுதமிழ் சமுதாயமே முன்னேறி
இருக்கும் அல்லவா?

>
>உலகம் மாறி விட்டது. எல்லோரும் மாறி விட்டார்கள். ஒரு சிலரைத்தவிர. இதுஎல்லா சமூகத்திற்கும்
>பொருந்தும். அவசரமாக ஒரு கூட்டத்திற்குச் செல்லவேண்டும். பிறகு பார்ப்போம்.
>அன்புடன்
>பழனி
.>>>>>>>>>>

லோகா
அவசரக் கூட்டத்திற்குச் சென்று விட்டுசிந்தித்துப் பாருங்கள். செட்டியார்களும்மாறவேண்டும், சாதி
சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். ஆவன செய்வீர்கள் என்று நம்புகின்றேன். உலகம் மாறிவிட்டது,
எல்லாரும் மாறிவிட்டார்கள் ஆனால் செட்டி மக்களே இன்னும் ஏன் நீங்கள் மாறாதிருக்கின்றீர்கள் என்று
அவர்களைக் கேளுங்கள்.


தத்துவராயன்.
>
>
>
>>http://www.egroups.com - Simplifying group communications
>>
>>
>>
>>
>>
>
>
>------------------------------------------------------------------------
>MyPoints-Free Rewards When You're Online.
>Start with up to 150 Points for joining!
>http://clickhere.egroups.com/click/805
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>
>


------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan