From Tue Sep 14 09:11:21 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 16:14:05 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 15832 invoked from network); 14 Sep 1999 16:14:01 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qh.egroups.com with SMTP; 14 Sep 1999 16:14:01 -0000
Received: from giasdmd01.vsnl.net.in ([203.197.133.224]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id WAA17675 for ; Tue, 14 Sep 1999 22:23:47 +0530 (IST)
Message-Id: <199909141653.WAA17675@...>
Date: Tue, 14 Sep 1999 21:43:6 +0500
From: "Dr.RM.Krishnan"
To: "agathiyar@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Science in veNbA form
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2030

அன்பிற்குரிய அகத்தியர்களுக்கு,

பா வடிவத்தில் அறிவியல் என்பது பற்றிய என் கருத்தை தமிழ் இணையத்திற்கு மட்டும் அனுப்பியிருந்தேன். இப்பொழுது
இங்கு அந்தக் கருத்து அலசப் படுவதால், என் மடலை இங்கு படியெடுத்து அனுப்பியுள்ளேன். உங்கள் சிந்தனைக்கு

அன்புடன்,
இராம.கி
----------------------------------------------------------------------------------------------------------வெட்டு
அன்புடையீர்,

இளமைக் காலத்தில் ஆர்வத்தோடு அறிவியற் செய்திகளை யாப்பில் கொணர முயற்சித்தவன் என்ற முறையிலும்,
இப்பொழுது கொஞ்சம் பட்டறிந்தபின் அத்தகைய முயற்சி தேவை தானா என்று ஓர்ந்து பார்த்த உந்துதலாலும் இதை
எழுதுகிறேன்.

நம்மில் பலர் தமிழில் ஆர்வம் கொண்டு, அதே பொழுது வாழ்வு வழிப்பாதையாக அறிவியலையோ, பொறியியலையோ,
நுட்பவியலையோ (technology), தேர்ந்தெடுத்த காரணத்தால் தமிழ் அறிவியற்பணியில் ஈடுபடுகிறோம். கூடவே, நம்மில்
பலருக்கும் தமிழ்ப் பாக்கள் மற்றும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உள்ளது. இரண்டு துறையிலும் நம் திறனை
வெளிப்படுத்திக் கொள்ள விழைகிறோம். ஆனால், இந்த இரண்டு வேட்கைகளும் தனித் தனியானவை. இரண்டும் ஒரே
ஆளுமையில் அமைவதாலேயே, ஒன்றை ஒன்று மேலாக்கம் செய்யும் வகையில் குழப்பிக் கொள்ளலாமா?

இந்த அறிவியல் தமிழ் ஆக்கங்களைப் படிப்பவர்கள் (குறிப்பாகப் பயனாக்குவோராகிய ஆசிரியரும் மாணவரும்) தமிழ்
இலக்கியத் துறையில் ஆர்வமில்லாது இருக்கலாம். அவர்களுக்கு பா வடிவம் இடைஞ்சலாக இருக்காதா? பள்ளி
மாணவனோ, கல்லூரி மாணவனோ, " என்னடா இது, இங்கேயும் தமிழாசிரியர் வந்து விட்டாரா? இதற்கும் கோனார்
நோட்சு வேண்டும் போல் இருக்கிறதே - என்று எண்ணிவிட மாட்டானா?"

அறிவியலைத் தமிழில் கொணர்வது (அதுவும் புரிகிற வகையில் கொணர்வது) நம்முடைய நோக்காக இருக்க வேண்டுமே
ஒழிய அதை பாவில் வடிப்பது தேவை தானா? பா வடிவில் இருந்தால் மனப் பாடம் செய்வது எளிதாக இருக்கும் என்பது
உண்மைதான்; இருப்பினும் இது உரைநடைக் காலம்; நம்முடைய களம் யாப்பு, தளை என மாறிவிடாதா?

"தமிழில் அறிவியலைச் சொல்வது வீண்வேலை; ஆங்கிலத்திலே இருந்துவிட்டுப் போகட்டும்" என்று அறியாமையாலோ,
உள்நோக்கத்தாலோ இன்றைய தமிழ்க் குமுகத்தில் பல எதிர்ப்புக்கள் எழுகின்ற போது, தமிழ் அறிவியல் ஆர்வலர்களாய்
இருக்கும் நாம் எடுக்கின்ற வழிமுறை (strategy)யும், செயல்முறை (tactics)களும், சரியானதாய் இருக்க வேண்டாமா?

பாரதி கூறியது நம்மில் எல்லோருக்கும் தெரியும்.

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அதைச்
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாவும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர்எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

இதன் வழியில் பார்த்தால் நம்முடைய நோக்கம் என்ன? - என்று எனக்குத் தெரிந்த வகையில் கீழே குறித்திருக்கிறேன்.

1. நம்மால் அறிவியலைத் தமிழில் சொல்லக் கூட வேண்டும்
2. அப்படிச் சொல்லும் திறமையைத் தமிழுக்குக் கொண்டு வரவேண்டும்
3. எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்களை கொணர்ந்து சேர்க்க வேண்டும்

இதைச் செய்ய பா வடிவம் நமக்குத் தேவையா?

கலை கலைக்கா, மக்களுக்கா என்று கால காலமான வழக்காடல் ஒன்று உண்டு. கலை மக்களுக்கு என்ற கட்சிக்காரன்
நான். நம்முடைய அறிவு விசாலத்தைக் காட்டிக் கொள்ளுவதற்காக அறிவியல் சாத்திரங்களையும், புராணங்களையும்
தமிழில் படைத்து, சரசுவதி பூசையன்று சந்தனம் பூசி வழிபடவா நாம் இந்த வேலையைச் செய்கிறோம்?

ஒருபக்கம் பா வடிவமே வேண்டாம் என்று கவி உணர்வு மேலெழும்ப, உரைவீச்சிற்கு ஓடிப் போகிறோம். "என்னைத் தளை
போட முடியாது, எனக்குத் தொடையும் ஒரு தடைதான்" என்று ஆர்ப்பரிக்கிறோம். "மரபாவது, ஒன்றாவது - எல்லாம்
எனக்கு புதிது" என்று ஐக்கூ செய்கிறோம். இன்னொரு பக்கம் 'அறிவியலை வெண்பாவில் சொல்ல முடியுமா' என்று
தோப்புக் கரணம் போட்டுப் பார்க்கிறோம். இது ஒரு மாறாட்டான அழுத்தமாகத் தெரியவில்லையா?

திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுத்த வழிமுறை ("பத்துத் தடவை சொல்லுடா? என்ற வண்ணம் கையில்
பிரம்போடு சட்டாம்பிள்ளை சொல்லுவார்: 'ஹரி ஓம் நமோத்து சிந்தம்; அறஞ் செய விரும்பு; எண்ணாங்கு நுப்பத்திரண்டு;
வாக்குண்டாம்-நல்ல மணமுண்டாம்- சங்கத் தமிழ் மூன்றும் தா-இன்னும் பல) அறிவியற் பள்ளிக்குச் சரிவருமா (எங்கே
அந்த நியூட்டனின் மூன்றாவது சூத்திர வெண்பாவைச் சொல்லு? பொழிப்புரையும் சொல்லுடா?)

மறுபடியும் இம்மடலின் முதல் பத்தியைப் படியுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு.

உந்தம் என்பது momentum என்பதற்கும், முடுக்கம் என்பது acceleration என்பதற்கும் பயன்படுத்தியதை பழைய
கட்டுரைகள் வழி அறிந்தேன். முன் மடலில் பாலாவுக்கு எழுதியதை மாறிக் கொள்ள வேண்டுகிறேன்.